Thursday, November 26, 2020

 

Trump, Modi, Putin went to hell ... what happened there?


நரகம் சென்ற ட்ரெம்ப், மோடி, புடின்... அங்கு நடந்ததென்ன?

ட்ரெம்ப் , மோடி,புடின்   ஒரே நேரத்தில் இறந்து போனார்கள் அவர்களுக்கு நரகத்தில்தான் இடம் கிடைத்தது போனார்கள்.


 அவர்கள் இது எங்களுக்கான இடம் இல்லை இதில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்று எமனிடம்  மன்றாடுகிறார்கள். இவர்களை மன்றாடுகளை கேட்டுச் சலித்த போன எமன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தார்:  நான் உங்களை 3 முறை என் சவுக்கால் அடிப்பேன், நீங்கள் பிழைத்தால், நான் உங்களைச் சொர்க்கத்திற்கு அனுப்புவேன் இல்லையென்றால் நீங்கள் நரகத்தில்தான் இருக்கனும். நீங்கள் விரும்பும் எதையும் கேடயமாகப் பயன்படுத்தலாம் என்று எமன் சொன்னார் ”.
   
 முதலில்  புடின் .  யுரேனியம் மற்றும் கலவைகளிலிருந்து ஒரு உயர் தொழில்நுட்ப கவசத்தை உருவாக்கி, அதன் பின்னால் மறைகிறார். எமன்  ஒரு முறை தாக்குகிறார் - கவசத்தில் சிறிது  விரிசல் உண்டாகிறது; இரண்டாம்  முறை - கவசம் விழுகிறது; மூன்று முறை - புடின் அடிபடுகிறார் அதனால் அவர் நரகத்திற்குள் அனுப்பப்படுகிறார்.

அடுத்து மோடி . அவர் தன்னை சில மேம்பட்ட யோகா நிலையில் நிறுத்தி ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்கிறார். எமன் ஒரு முறை தாக்குகிறார் - ஒன்றுமாகவில்லை; இரண்டாம்  முறை - மோடி கொஞ்சம் நடுங்குகிறார்; மூன்றாம் முறை - ஜெய் ஸ்ரீராம் என்று  முணுமுணுக்கிறார், அவர் பிழைத்துக் கொள்கிறார்  அவர் சொர்க்கம் போகலமாம் என்று எமன் அறிவிக்கிறார்

உடனே மோடி எமனாரே நான் கொஞ்சம் சிறிது நேரம் இங்கே இருந்து இந்த ட்ரெம்ப் என்ன பண்ணுகிறார் என்று பார்த்துவிட்டுச் செல்கிறேன் அதற்கு அனுமதி தரணும் என்று கெஞ்சுகிறார் சரி என்று எமனும் கடைசியில் சொல்லுகிறார்

இப்போது ட்ரெம்பிடம் உங்கள் நேரம் வந்துடுச்சு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்


அதற்கு அவர் நான் எனது கேடயமாக மோடியைப் பயன்படுத்தப்போகிறேன் என்று சொல்லிச் சிரித்தார்



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.