Wednesday, November 11, 2020

 

Bihar election result 2020

பீகார் தேர்தலில் மோடி வெற்றி என்பது தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சியில் கதாநாயகன் வெற்றி பெறுவது மாதிரிதான்



பீகார் தேர்தலில் மோடி வெற்றி என்பது தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக் காட்சியில் கதாநாயகன் வெற்றி பெறுவது மாதிரிதான்.. கதாநாயகன் திரைப்படங்களில் எப்போதுமே நல்லவன்தான் ஆனால் ரியல் வாழ்க்கையில் அவன் குணம் மாறுபட்டு இருக்கும் அது போலத்தான் கதாநாயகன் மோடியும்..
 

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு எதிராகப் பல திடகாத்திரமான வில்லன்கள் இருப்பார்கள். ஆனால் கதாநாயகன் தனுசு போலக் குச்சியாகத்தான் இருப்பார்.. ஆனால் என்ன சண்டைக்காட்சியின் ஆரம்பத்தில் திடகாத்திரமான வில்லன்கள் கதாநாயகனை வெளுத்து வாங்குவார்கள் .ஆனால் சண்டை முடியும் போது ,கதாநாயகன் வில்லனின் சுண்டு விரலை மடக்கி அவனைத் துடிக்க வைத்து புரட்டி பொரட்டி போட்டு அடித்து விரட்டி தன் வெற்றியை நிலை நாட்டுவார்கள். அப்படித்தான் தேர்தல் முடிவின் போது எதிர்க்கட்சிகள் நல்லா லீடிங்கிள் வருவார்கள் .ஆனால் சூப்பர் ஸ்டார் கதாநாயகனுக்குத் தகுந்தவாறுதான் திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இருக்கும் .அதன் படி கதாநாயகன் தேர்தலில் வெற்றிப் பெற்றதாக அறிவிப்பார்கள்..

அதுதான் இந்தத் தேர்தலில் நடந்து இருக்கிறது.. வழக்கமாக வில்லன்கள் என்று சொல்லும் போது அதில் நிச்சயம் சில குல்லாப் போட்ட வில்லன்கள் இருப்பார்கள் .அது போல இந்தத் தேர்தல் என்ற திரைப்படத்தில் ஒவைசி என்ற புதிய இஸ்லாமிய வில்லன் சிறப்பாக நடித்து இருப்பதாகப் பீகார் திரைப்பட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற வில்லங்களை விட இந்தப் புது வில்லன் புது மாதிரியாக நடித்து இருப்பதாக மக்கள் பாராட்டுகிறார்கள். வழக்கமாக வில்லன் கதாநாயகனுக்கு எதிராகச் சண்டை போட்டு அடிவாங்குவார் ஆனால் இந்தவில்லன் வில்லன்கள் கூட இருந்து கதாநாயகன் வெற்றிக்காகச் சண்டை போடுவதாக ஒரு நல்ல சிறப்பான காட்சி அமைத்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள்


இறுதியாகத் திரைப்பட ரசிகர்களின் நிலைதான் பீகார் மக்களின் நிலையும்.. திரைப்படத்தில் கதாநாயகன் வெற்றி பெற்றால் அவனது பெட்டி நிறையும் ஆனால் ரசிகர்களின் பர்ஸ் காலியாகும் .அது போலத்தான் பீகார் மக்களும் மோடியின் வெற்றியைக் கொண்டாடிவிட்டு அடுத்த வேலை சோறுக்காக கால்ந்டையாக மாநிலம் விட்டு மாநிலம் வந்த உழைப்பார்கள் கஷ்டப்படுவார்கள் அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை..

இந்தியாவில் தேர்தல் ஆணையமும் நீதித்துறையும் கேலிக்குரிய துறைகளான பின் தேர்தல் முடிவுகள் மக்களின் முடிவுகள் என்று கருதினால் அதுவும் ஒரு கேலிக்குரிய விஷயமே

எனக்குள்ள ஆசை எல்லாம் இந்தியா முழுவதும் மோடியின் கைக்குள் வரவேண்டும் அதன் பின் இந்தியா எப்படி வளர்கிறது மக்கள் எப்படிச் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நான் சாவதற்குள் பார்க்க ஆசை எனக்கு ஹும்ம்

டிஸ்கி: இந்தியா முழுவதும் மோடி கைக்குள் வந்தால் இந்தியா எப்படியிருக்கும் என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அழிவின் பாதையை அறிய ஆர்வம் அதிகம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் அதற்கு இப்போதுதான் ஸ்கெட்ச் போட்டு வேலை ஆரம்பித்து இருக்கிறார்கள் அந்த பாதை முடிந்து இருக்கும் போது நாம் இருப்பமோ இல்லையோ என்பதில் நிச்சயம் இல்லை

      Delete
  2. நீங்களும் மோடி மோசம் மோசம்னு சொல்லிப்பார்க்கிறீங்க. ஆனால் மக்கள்தான் நம்புவதாகத் தெரியவில்லை.

    அது சரி... பாஸ்வான் வாக்கு பிரிக்கலைனா இன்னுமே 30-40 சீட்டுகள் இவங்களுக்கு வந்திருக்குமே (6 சதவிகித வாக்குகள்)

    ReplyDelete
    Replies
    1. நான் மோடியை மோசம் என்று சொல்லவில்லை அவர் செய்வதை சொல்லுகின்றேன் அவ்வளவுதான் ஆனால் அதை படிப்பவர்கள் நான் அவரை மோசம் என்று சொலவதாக நினைத்து கொண்டால் நான் என்ன செய்வது

      மனுஸ்ருமிதியில் பெண்களை பற்றி இழிவாக எழுதி இருக்கிறது என்கிறார்கள் அதில் எழுதி இருப்பது உண்மை என்று சொல்லனும் அல்லது இல்லை என்று சொல்லனும் ஆனால் அதை பற்றி சொன்னவரை நோக்கி இவர் பெண்களை இழிவு படுத்துகிறார் என்று குற்றம் சொல்லுவது பொல இருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.