Monday, November 2, 2020

 

The skin benefits of poppy seeds

கசகசா விதைகள் வழங்கும் சரும நன்மைகள்

முந்தையப் பதிவான் கசகசாவின் மருத்துவ பலன்கள்  படிக்காதவர்கள் படிக்க இந்த  லிங்க் 



கசகசா விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சரும நலத்திற்குப் பெரும் நன்மைகளை வழங்குகிறது. இது சருமத்திற்கு ஈரப்பத மூட்டி, தோலில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும் உதவுகிறது; மேலும் சருமத்தைச் சுத்தப்படுத்தி, தோலிற்குப் பொலிவைத் தருகின்றன.

பலன் 1: சிரங்கு மற்றும் அழற்சி

கசகசா விதையில் சிரங்கு நோய்க்குறைபாட்டைச் சரி செய்ய உதவும் லினோலெனிக் அமிலம் அதிகம் உள்ளன; கசகசா விதைகளைத் தண்ணி அல்லது பாலில் ஊற வைத்து, பின்னர் அதில் எலுமிச்சை சாறு கலந்து மிருதுவான பசையாக அரைத்துப் பயன்படுத்தலாம். தோல் எரிச்சல் மற்றும் சரும அரிப்புத்தன்மையைக் குணப்படுத்த இந்தப் பசை உதவுகிறது; இது ஒரு பயனுள்ள வலி நிவாரணியாகவும் செயல்பட்டு, சரும அழற்சி பிரச்சனைகளால் ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது.
 


பலன் 2: தூய சருமம்

கசகசா விதை ஸ்கிரப் என்பது சருமத்தைச் சுத்தப்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் கறைகளற்ற சருமத்தைப் பெறலாம். 2 தேக்கரண்டி கசகசா விதைகளைத் தயிருடன் கலந்து, அக்கலவையை முகத்திற்குத் தடவலாம். முகத்திற்குத் தடவும் போது, வட்ட வடிவ இயக்கத்தில் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்; ஒரு பருத்தி பஞ்சு கொண்டு முகத்தைத் துடைத்து விட வேண்டும். இதன் மூலம் சுத்தமான சருமம் மற்றும் பொலிவான தோலைப் பெறலாம்.

பலன் 3: சருமத்தை ஈரப்பதம் ஆக்கும்

கசகசா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பசை ஒரு நல்ல ஈரப்பதமாக்கியாகச் செயல்பட்டு, மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது; மிருதுவான சருமம் பெற, பாப்பி விதைகளை ஒரு அரைப்பானில் இட்டு, அதில் சிறிதளவு பால் ஊற்றி பசை தயாரித்துப் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள், இக்கலவையைச் சிறிது தேன் கலந்து உபயோகிக்கலாம். இவ்வாறு தயாரித்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்; பின்னர் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, கழுவி விட வேண்டும். வாரம் ஒரு முறை இதைச் செய்தால் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.


கசகசா விதைகள் சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் பல பலன்களைத் தருகின்றன

கசகசா விதைகளில் நல்ல அளவு அன் சாச்சுரேட்டட் அமிலங்கள் மற்றும் தாத்துக்களான கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்றவை உள்ளதால், இவை ஆரோக்கியமான தலைமுடியைப் பெற உதவுகின்றன. கசகசா விதைகள் வழங்கும் கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

பலன் 1: தலைமுடி வளர்ச்சி

கசகசாம்முடி வளர்ச்சிக்கும் உதவியுள்ளன. ஊற வைத்த கசகசா விதைகளைப் புதிதாக எடுக்கப்பட்ட தேங்காய்ப் பால், சாறுள்ள வெங்காயம் ஆகியவற்றுடன் கலந்து அரைத்து, இந்தக் கலவையை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்னர் ஒரு இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடவும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மேலும் இந்தப் பேக முடி பிளவு முனைகளைச் சரி செய்ய உதவலாம்.

பலன் 2: பொடுகு

பொடுகு என்பது பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு சாதாரணப் பிரச்சனை தான்; இதனைக் குணப்படுத்தவில்லை எனில், இதனால் முடி உதிர்வு ஏற்படலாம். பொடுகைக் குணப்படுத்த, ஊற வைத்த கசகசா விதைகள், தயிர், ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகு ஆகியவற்றைக் கலந்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இதை அரை மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைத்து, பின்னர்க் கழுவி விடவும். தொடர்ந்து இந்தக் கலவையை முடிக்குப் பயன்படுத்தி வந்தால், பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்
.
கசகசா விதைகளைப் பயன்படுத்துவது எப்படி?

கசகசா விதைகளை உணவுப்பொருட்களைச் சமைக்கப் பயன்படுத்துவர் என்று மட்டுமே பலர் எண்ணிக் கொண்டிருக்கலாம்; ஆனால், இவ்விதைகளை எப்படி, என்னென்ன வழிகளில் பயன்படுத்தலாம் என்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளக் குறிப்புகள் வாயிலாகப் படித்து அறியலாம்..  

கசகசா விதைகள் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்

கசகசா விதைகள், அவற்றின் பருப்பு சுவை காரணமாகப் பல்வேறுபட்ட கலாச்சாரங்களில், பல விதமான உணவு ரெசிபிகளில் பயன்படுத்தப்படுகிறது.
கசகசா விதைகளைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன், கற்கள் எல்லாவற்றையும் நீக்கி சுத்தமாகக் கழுவ வேண்டும்.
இவற்றைச் சூடான நீர் அல்லது பாலில் 2 மணி நேரங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின் அவற்றை வடிகட்டி, உலர வைக்கவும்.
இந்த ஊற வைக்கப்பட்ட விதைகளைத் தனியாக அல்லது இதர மசாலா பொருட்களுடன் அரைத்துக் குழம்பு அல்லது கிரேவி தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

கசகசா விதைகள் சுவை அற்றவை; ஆனால், இவ்விதைகளைச் சூடுபடுத்தினால், பருப்பு, கார – இனிப்பு சுவையை இவ்விதைகள் கொண்டிருக்கும். வறுத்தால் அல்லது பேக் செய்தால் இலேசான வாசம் மற்றும் இனிப்பு சுவை கிடைக்கும்; ஆழ்ந்து வறுக்கும் பொழுது சிறந்த நறுமண எண்ணெய்கள் வெளிப்பட்டு, அவற்றை அதிகம் மொறுமொறுப்பாக்க உதவும்.

சமையலில் அல்லது ரெசிபிகளில் கசகசா விதைகளைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்


கார்னிஷ் பிரட்கள், ரோல்கள், சாஸ்கள் மற்றும் பேஸ்ட்ரி ஃபில்லிங்களில் அல்லது காய்கறிகள் மற்றும் சாலட் ட்ரெஸ்ஸிங்களில் வறுத்த கசகசா விதைகள் சேர்க்கப்படுகின்றன. துருக்கிய உணவு வகைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கசகசா விதைகளை வறுக்க, ஒரு சிறிய வறண்ட பாத்திரத்தை அடுப்பில் – மிதமான நெருப்பில் வைத்து கசகசா விதைகளை இட்டு, 2 முதல் 3 நிமிடங்களுக்கு மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.

பாப்பி விதைகள், வெண்ணெய் சேர்த்த முட்டை நூடுல்ஸ், பழ சாலட் ட்ரெஸ்ஸிங்கள், ஈஸ்ட் பிரட்கள் ஆகிய உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் பருப்பு சுவை மற்றும் தன்மை காரணமாக இவை, பிரட்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், குழம்பு வகைகள், மிட்டாய், பான்கேக்குகள் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.

இந்தக் கசகசா விதைகள் போஸ்டோ என்று மேற்கு வங்காளம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய இடங்களில் அழைக்கப்படுகின்றன; பிரபல வங்காள உணவுகளான உருளைக்கிழங்கு போஸ்டோ – Aloo Posto, சாசுரி- Chachuri, போஸ்டோர் போரா – Postor Bora போன்றவற்றில் இவ்விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கு போஸ்டோ – Aloo Posto என்பது அதிக அளவு பாப்பி விதைகள் சேர்க்கப்பட்டு, கிரீமி தன்மை அளிக்க உதவுகிறது. உருளைக் கிழங்குகளுக்குப் பதிலாக வெங்காயம், பீர்க்கங்காய், சிக்கன் அல்லது இறால்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

கசகசா பாயசம் என்பது கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும்; இது ஒரு திரவ இனிப்பு உணவு ஆகும். வெள்ளை கசகசா விதைகள், வெல்லம், தேங்காய், பால் போன்றவற்றைக் கொண்டு இந்த இனிப்புத் தயாரிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையின் பொழுது அனார்சா எனும் இனிப்பு உணவைத் தயாரிக்கக் கசகசா விதைகள் உதவுகின்றன.

பொடி ஆக்கப்பட்ட கசகசா விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பஜ்ஜிகள் கிரில் அல்லது வறுக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. நில கசகசா விதைகள், கடுகு எண்ணெய், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் அரிசி கொண்டு ஒரு அரிசி உணவைத் தயாரிக்கலாம்.

வெல்லம் மற்றும் தேங்காய் போன்றவற்றைக் கசகசா விதைகளுடன் சேர்த்து ஒரு ஃபிளாக்கி பேஸ்ட்ரி தயாரிக்கலாம் அல்லது ஆழ்ந்து வறுக்கப்பட்ட கராஞ்சி எனும் சுவையான இனிப்பு உணவைத் தயாரிக்கலாம்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், கசகசா விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மசாலா, சிக்கன், இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு வித்தியாசமான, சுவையான உணவுகளைத் தயாரிக்கலாம்.

ஆஸ்திரேலியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் பிரபல இனிப்பு பேஸ்ட்ரிகளான ஸ்ட்ருடெல் – Strudel மற்றும் Germknödel – ஜெர்ம்க்நோடெல் ஆகியவற்றைத் தயாரிக்கப் பாப்பி விதைகள் உதவுகின்றன.

கசகசா விதைகளை அரைத்து பவுடர் ஆக்க நேரம் எடுத்துக் கொள்ளும்; நல்ல மிக்ஸி கொண்டு  கொண்டு கசகசா விதைகளை அரைக்கலாம். இதை எளிதாக அரைக்க  முதலில் கசகசா விதைகளை வறுத்து  பின் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை முழு வடிவம் அல்லது நசுக்கிப் பயன்படுத்தலாம்; இவற்றைச் சமைக்கப்படாத உணவுகளான சாலட் போன்ற உணவுகளில் பயன்படுத்தும் போது, சாலட் உணவில் சேர்க்கும் முன் கசகசா விதைகளை வறுக்க வேண்டும்; மேலும் இலேசான சுவை மற்றும் மணம் வந்தவுடன் கசகசா விதைகளைச் சாலட்டில் சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும்.

நில கசகசா விதைகளைப் பேஸ்ட்ரிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதைகளைப் பேஸ்ட்ரிகளில் பயன்படுத்தும் முன், இவற்றை ஊற வைத்து, 1 முதல் 3 மணி நேரங்களுக்குக் கொதிக்க வைத்து  அரைத்துப் பின்னர்ப் பயன்படுத்த வேண்டும்.
இந்த விதைகளை நாண் பிரட்களின் மீது தூவி விடலாம் மற்றும் இதை ஓவனில் சமைத்தால் அது தந்தூர் என்று அழைக்கப்படும்.


கசகசா விதைகளின் மருத்துவப் பயன்கள்

கசகசா விதைகள் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் ஆகியவற்றை அளிப்பதோடு மட்டும் இல்லாமல், சில மருத்துவப் பயன்களையும் அளிக்கக்கூடியவை. கசகசா விதைகளின் மருத்துவப் பயன்கள் ஆவன:

கோடெய்ன் மற்றும் மார்ஃபின் போன்றவை கசகசா விதைகளிலிருந்து எடுக்கப்பட்டு, அவற்றை இருமலுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் மற்றும் இவற்றை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் கசகசா விதைகள் சரும நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கசகசா விதைகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்

கசகசா விதைகளினால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்யும். பாப்பி விதைகளினால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றிக் கீழே பார்க்கலாம்:

ஒவ்வாமை

சில மக்களுக்கு, கசகசா விதைகளால் ஒவ்வாமை ஏற்படலாம்; சில சமயங்களில் ஒவ்வாமையுடன் சேர்ந்து வாந்தி, படை நோய், கண் வீங்குதல், சருமம் சிவந்து போதல், மூச்சுவிடுவதில் கடினம் ஏற்படல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் அளிப்பதில் உள்ள பிரச்சனைகள்

சாதாரண அளவுகளை எடுத்துக் கொண்டால் பிரச்சனை எதுவும் ஏற்படாது; கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள், அதிகப்படியான அளவு கசகசா விதைகளை உட்கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே இவற்றைத் தவிர்ப்பது அல்லது அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
 
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆங்கில இதழில் வந்த மொழி பெயர்ப்புதான் இந்த பதிவு.. இந்த பதிவு அரபு நாடுகளில் உள்ளவர்களுக்கு பயன் இல்லை காரணம் இது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது

6 comments:

  1. கசகசா மருத்துவ குணங்கள் ஓரளவு தெரிந்தாலும் உங்க முந்தைய பதிவு ப்ளஸ் இதுலயும் இன்னும் தெரிந்து கொள்ள முடிந்தது மதுரை.

    கசகசா வட இந்திய உணவுகளில் நல்லாவே பயன்படுத்துவாங்க. கசகசா சிக்கி நல்லாருக்கும். கசகசா பாயாஸமும் நல்லாருக்கும் ஆனா தூக்கம் வரும் நல்லா தூங்குவதற்கு கசகசா பயன்படும். நீங்களும் சொல்லிருக்கீங்க முந்தைய பதிவில். அதிகம் பயன்படுத்தக் கூடாது மருந்து போலத்தான் பயன்படுத்தணும்னு எங்க மாமியார் சொல்லுவாங்க.

    அது சரி உங்க ஊருல இதற்கு அனுமதி இல்லையே. சிங்கப்பூர்லயும் நாம கொண்டு போக முடியாது. அது என்னவோ கஞ்சான்ற மாதிரி தடை. அங்கெல்லாம் பயன்படுத்தாமவா இருக்காங்க?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊரில் தாரளமாக கிடைக்கிறது... நான் அதிகம் பயன்படுத்துவது குருமா வைக்கும் போதுதான்

      Delete
  2. அதிக மயக்கம் தரும் என்பதால் அறுவைசிகிச்சைக்கு ஒருகாலத்தில் இதை மயக்க மருந்தாகக் கூடப் பயன்படுத்தியதுண்டு என்று வாசித்திருக்கிறேன்.

    கசகசா நல்ல மருத்துவக்குணங்கள் கொண்டது அளவோடு பயன்படுத்தினால்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எதுவும் அளவோட பயன்படுத்தினால் நல்லது அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே

      Delete
  3. நல்ல பயன்கள் தான்...

    பதிவு : மதுர குசும்பு...

    ReplyDelete
    Replies
    1. சரும பலன் என்று பதிவு போட்டு சருமத்தை காண்பிக்க ஒரு படத்தையும்தானே போடனும் அப்பதானே பதிவு மனசில் பதியும் ஹீஹீஹீ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.