Thursday, October 29, 2020

 

poppy seed health benifits #sexual ஆண்மையை அதிகரிக்க

கசகசாவின் மருத்துவ பலன்கள்

போஸ்தக்காயின்(posto) உள்ளேயுள்ள விதை கசகசா எனப்படும். ‘kasa kasa‘ எனத் தமிழிலும்,khus khus‘ என இந்தியிலும், ‘gasagasalu‘ எனத் தெலுங்கிலும், ‘kas kas‘ என மலையாளத்திலும், ‘gasegase‘ எனக் கன்னடத்திலும், ‘posto‘ ‘poppy seeds’ என ஆங்கில மொழியிலும் அழைக்கப்படுகிறது இந்த உணவுப்பொருள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது.கசகசாவிதைகளின் அறிவியல் பெயர் Papaver somniferum – பாப்பாவர் சோம்னிஃபெரம்; இது பல நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். கசகசா, வால்மிளகு, பாதாம்பருப்பு, கற்கண்டு இவற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் மழமழப்பும், வலிவும் பெறும். ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.பாப்பி விதைகள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது; மேலும் இவ்விதைகளில் உள்ள உறுப்புகள் #ஆண்மையை_அதிகரிக்க மற்றும் பாலியல் ஆசையைத் தூண்ட உதவுகின்றன

 


மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை தேக்கரண்டி கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் #தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலுவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் #உடல்புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.

கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மளமளப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில் போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியைக் காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்துச் சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலைக் குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார். மேலும் கசகசாவை ஒரு சிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்கு “வாக்விவர்த்தனம்” அதாவது சொல்வன்மை கூடுமென்றும் எடுத்துரைத்திருக்கிறார்.

ஆய்வறிக்கைகளின் கருத்துப்படி, கசகசா விதைகள் கொண்ட பானத்தைப் பருகுவது உடலில் உள்ள கார்டிசோல்களைக் குறைக்க உதவுகிறது; இந்தச் சாந்தப்படுத்தும் விளைவினால், உடலின் அழுத்த அளவுகள் நிச்சயம் குறையும். மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சர்க்காடியன் தாளங்கள் ஒரு நல்ல முன்னேற்றத்தைத் தருபவையாகும்; இதன் மூலம் தனி நபர்கள் குறைந்த அளவே சோர்வாக உணர்வார்கள்.கசகசா விதைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து உறங்கச் செல்லும் முன் உட்கொள்வது நல்ல உறக்கத்தைப் பெற உதவும்; கசகசா விதைகளைப் பசையாக்கி சூடான பாலில் கலந்து பருக வேண்டும். இதனைத் தூங்கச் செல்லும் முன் குடிப்பது நல்லது; ஒரு கப கசகசா விதை தேநீர், மாயாஜாலம் புரியவல்லது.

                   

நிகண்டுரத்னாகரம் எனும் ஆயுர்வேத அகராதியில் கசகசா குடலில் தேவையற்ற கிருமிகளை அழிக்கக் கூடியது, சோகை மற்றும் காசநோய்களுக்கு நல்லதொரு உணவாகவும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.(கசகசா விதைகளில் பல வேறுபட்ட வகைகள் உள்ளன; கசகசா விதைகளில் உள்ள சில பிரபல வகைகள் ஆவன: நீல பாப்பி விதைகள் – இதனை ஐரோப்பியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; பெரும்பாலும் இது மேற்கத்திய பிரட்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.வெள்ளை பாப்பி விதைகள் – இதனை இந்தியன் அல்லது ஆசியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; இது எல்லா வித உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.ஓரியண்டல் பாப்பி விதைகள் – இதனை ஓபியம் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; இது அபின் விளைச்சல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகிறது. கசகசாவைப் பற்றிய செய்திக் குறிப்பில் வெண்மை நிறமுடைய கசகசாவானது உண்ட உணவை நன்றாகச் செரிக்கச் செய்யுமென்றும், கருமை நிறமுடையதை அதிக அளவில் உட்கொண்டால் மரணமேற்படுமென்றும், மஞ்சள் நிறமுடைய கசகசாவானது கிழத்தன்மையைப் போக்குமென்றும், இவற்றின் கலவையை ஒருங்கே கொண்ட வகையானது மலத்தை நன்றாக இளக்கி வெளியேற்றுமென்றும் காணப்படுகிறது.

   


பாப்பி விதைகளில், ஓபியம் பாப்பி என்பது தான் தூக்கத்தைத் தூண்டும் ஒரு பயனுள்ள விளைவை ஏற்படுத்தவல்லது ஆனால், இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்; இதைக் குழந்தைகளுக்கு அளிக்கும் முன் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகளுக்குக் கசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும். பத்துக் கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

கசகசா விதைகள் பெண்களின் உடலில் உள்ள பெலோப்பியன் குழாய்களில் நல்ல ஓட்டத்தை ஏற்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்க உதவும் ஆய்வறிக்கைகள் கருத்துத் தெரிவிக்கின்றன. குழாய்களில் இருக்கும் கோழை அல்லது சளி போன்றவற்றைக் கரையச்செய்து, கருவுறுதலை அதிகரிக்கப் பாப்பி எண்ணெய் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இந்த முறையை hysterosalpingography – ஹிஸ்டிரோசால்பிங்கோகிராபி என்று அழைப்பர்; இந்தப் பரிசோதனையில் 40 சதவீத பெண்களுக்குக் கருத்தரிப்பில் வெற்றி கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் பெலோப்பியன் குழாய்களில் பிரச்சனை உள்ள 29 சதவீதம் பெண்கள், கசகசா விதை நீரை எடுத்துக் கொள்வதன் மூலம், வெற்றிகரமான கருத்தரிப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது

 

நியமம்

ஊட்டச்சத்து  மதிப்பு

RDA -இன் சதவீதம்

ஆற்றல்

525 Kcal

26%

கார்போஹைட்ரேட்

28.13 g

22%

புரதம்

17.99 g

32%

மொத்த கொழுப்பு

41.56 g

139%

கொலஸ்ட்ரால்

0 mg

0%

உணவு முறை நார்ச்சத்து

19.5 g

51%

வைட்டமின்கள் 

ஃபோலேட்கள்

82 µg

20%

நியாசின்

0.896 mg

5.5%

பேன்டோதெனிக் அமிலம்

0.324 mg

65%

பைரிடாக்சின்

0.247 mg

19%

ரிபோஃபிளவின்

0.100 mg

8%

தையமின்

0.854 mg

71%

வைட்டமின்

0 IU

0%

வைட்டமின் சி

1 mg

2%

வைட்டமின்

1.77 mg

12%

வைட்டமின் கே

0 mg

0%

எலக்ட்ரோலைட்கள்

சோடியம்

26 mg

2%

பொட்டாசியம்

719 mg

15%

தாதுச்சத்துக்கள்/ கனிமச்சத்துக்கள்  

கால்சியம்

1438 mg

144%

காப்பர்/ தாமிரம்

01.627 mg

181%

இரும்பு

9.76 mg

122%

மெக்னீசியம்

347 mg

87%

மாங்கனீசு

6.707 mg

292%

பாஸ்பரஸ்

870 mg

124%

செலினியம்

13.5 µg

24%

ஜிங்க்/ துத்தநாகம்

7.9 mg

72%

 

கசகசா விதைகளில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன; மற்றும் இவ்விதைகளில் உள்ள மாங்கனீசு கொலஜன் உற்பத்திக்கு உதவி, தீவிர சேதம் எதுவும் ஏற்படாமல் எலும்புகளைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தைப் பலப்படுத்த உதவுகிறது; உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்க இவ்விதைகள் உதவுகின்றன மற்றும் கசகசாவில் இருக்கும் இரும்புச்சத்தும் இந்த நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டில் உதவுகிறது.

ஆய்வறிக்கையின் கருத்துப்படி, உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளைக் கசகசா விதை எண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம் இதனை நடைமுறைப்படுத்த பாப்பி விதை எண்ணெய்யை உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலே போதும், இதய ஆரோக்கியத்தைக் காக்கலாம். இஸ்லாமியர்களின் வீட்டில் செய்யப்படும் மட்டன் வகைகளில் இதனால்தான் கசகசா சேர்பது வழக்கம் கசகசா விதைகளில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் இந்தக் கொழுப்பு அமில சத்துக்கள் இதயத்திற்குப் பெரும் நன்மை புரிபவை ஆகும். டஃப்ட்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின் படி, இவ்விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன – இந்தச் சத்துக்கள் இதயத்திற்கு நன்மை அளிக்கும் என்ற கருத்து உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றே ஆகும்; மேலும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க இந்தச் சத்து உதவுகிறது. ஒமேகா-3 சத்துக்கள் உடலில் உற்பத்தி செய்யப்பட மாட்டாது; ஆகவே இவற்றைப் பிற உணவுகள் வாயிலாக எடுத்துக் கொள்ள வேண்டும்; இந்த ஒமேகா சத்துக்கள் கசகசா விதைகளில் நிறைந்து உள்ளன. இவ்விதைகளை உட்கொள்வதன் மூலம் ஒமேகா சத்துக்களைப் பெறலாம்.

கசகசாவில் உள்ள ஜிங்க் சத்து சுவாச குறைபாடுகள் ஏற்படுவதைக் குறைக்க உதவுகின்றன. கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசியம் எனும் கனிமச்சத்துச் சிறுநீரகக் கற்களுக்கு எதிராகப் போராடி சிறுநீரகக் கற்களைக் குணப்படுத்தக்கூடியது; மேரிலாந்து மருத்துவ மைய பல்கலைக்கழகத்தின் கருத்துப்படி, ஹைபரோக்ஸால்யூரியா – hyperoxaluria (அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றம் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்) எனும் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவு முறையில் கசகசாவைக் குறைவான அளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளது


குளிர்ச்சி தரும் கசகசாவை உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

கசகசா பற்றிய பலன்கள் இன்னும் அதிகம் அதை அடுத்த கசகசா பதிவில் பார்ப்போம்


3 comments:

  1. வலைப்பூ மாறி வந்து விட்டோமா என்று நினைத்தேன்...!

    என்னது இன்னும் அதிகமா...? அடுத்த பதிவா...>?

    ReplyDelete
  2. ஆச்சர்யமான பதிவு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.