Monday, October 12, 2020

 அரசியலில்  'கலைஞரிடம்'  குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ன?
 

Has Khushboo now begun to show what she has learned from the 'kalaignar ' in politics?



தமிழ் திரைத்துறை வரலாற்றைப் பார்த்தால் குஷ்பு அளவுக்குக் கொண்டாடப்பட்ட நடிகையை அதற்கு முன்பும் பார்த்ததில்லை; இதுவரையிலும் கண்டதுமில்லை. அவரைச் சிறந்த நடிகையாக ரசிகர்கள் எண்ணிக் கொண்டாடவில்லை ஒரு அழகுப்பதுமையாகத்தான் பார்க்கப்பட்டார் அதனால்தான் அவருக்கு கோவிலும் கட்டப்பட்டது. தமிழர்களால் குஷ்பு தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது  ஒரு வரலாறு என்றால் அவர் சர்ச்சைகளில் சிக்கி வசைபாடப்பட்டது மற்றொரு வரலாறுதான்.

அவர்மீது சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. எல்லாச் சர்ச்சைகளையும் அவர் தனி மனுஷியாகச் சந்தித்தார். துணிச்சல் என்ற ஒரே ஓர் ஆயுதம்தான் குஷ்புவிடம் இருந்தது இன்னும் இருக்கிறது .குஷ்பு ஒரு சாகச நாயகியாகச் திரைத்துறையில் நடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் குஷ்பு ஒரு சாகச நாயகிதான்.

 
இப்படி சொல்லக் காரணம் அரசியலுக்கு வருவேன்;  ஆனால் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்பது எனக்கே தெரியாது ஆனால் ஒரு  நாள் நிச்சயம் வருவேன் இதோ வந்துட்டேன் அதோ வந்துட்டேன் இப்போ நேரம் சரி இல்லை இப்போ சிஸ்டம் சரியில்லை  என்று  ரஜினிகாந்த போல் தயங்கித் தயங்கிக் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பவர் அல்ல குஷ்பு. நேரடியாக அரசியலுக்கு வந்து தி,மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா இறந்த பின்தான் பலர் வாயைத் திறக்க ஆரம்பித்தனர் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் ஜெயலலிதா இருந்தபோதே அவரைக் கடுமையாக ரவுண்டு கட்டி விமர்சித்தவர், எதிர்த்துப் பிரசாரம் செய்தவர் குஷ்பு மட்டுமே


தி.மு,க,வுக்காகப் பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் என்று தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். திமுகக் கட்சியில் அவரின் செல்வாக்கு மிகவும் அதிகரித்ததும் கலைஞரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிலும் ஸ்டாலின் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கும் அதிருப்தி ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பல எதிர்ப்புகளைச் சந்தித்த குஷ்புவுக்குத் தி.மு.க.வின் பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. "பல ஆண்டுகளாகக் கட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பலர் இருக்கப் பின்நாளில் வந்த ஒரு நடிகைக்குக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் போது அதிலும் கலைஞரால் அளிக்கப்படும் போது அங்கே அதிருப்தி அலைகள் எழுந்தன..

அதைத் தொடர்ந்தே  ஸ்டாலினின் தலைமை பதவி பற்றிய பேட்டியிலும் தன்  நிலைமையைப் பிரதிபலித்தவர்.கலைஞருக்குப் பின் ஸ்டாலின் தான் தலைவர் என்று நாம் முடிவு பண்ணக்கூடா து பொதுக்குழு தான் முடிவு பண்ணும் என்ற கருத்தை திமுகவில் பேராசிரியர் கூடச் சொல்லத் தயங்கும் கருத்தை' துணிந்து சொன்னவர் குஷ்பு மட்டும் தான்


மு.க.ஸ்டாலினுக்கு எதிராகக் குஷ்பு கருத்துத் தெரிவித்ததாக எழுந்த எதிர்ப்புகளையும் தன் வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும்கூடத் தன் துணிச்சலின் அடிப்படையிலேயே அவர் எதிர்கொண்டார். நியமான கேள்விகளைத் தைரியமாகக் கேட்டதற்காகத் திமுகவினர்தான் அவரை வெளியேற்ற அழுத்தம் கொடுத்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர் வெளியேறினாரா தவிர அவர் விருப்பப்பட்டுப் பிறகு தி.மு.க.வை விட்டு வெளியேறவில்லை..

அப்படி வெளியேறியவர் அரசியல் தனக்கு உள்ள அடையாளத்தை இழக்க விரும்பாததால் அவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனால் அங்கும் குஷ்புவின் வருகையும், கட்சியில் அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் சில மகளிர் அணி நிர்வாகிகளுக்குப் பிடிக்காமல் இருக்கிறது. மகளிர் அணியிலேயே பல கோஷ்டிகள் காணப்படுகின்றன. இதை இதுவரை வெளிவந்த அறிக்கைப் போரின் மூலம் யார் யார் யாருடைய கோஷ்டி என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.


அதுமட்டுமல்லா இப்போதுள்ள நிலவரப்படி இவரால் காங்கிரஸுக்குக்கோ அல்லது காங்கிரஸால் இவருக்கோ ஒரு லாபமும் இல்லாமல் இருக்கிறது அதுமட்டுமல்ல இவரை வரவேற்க அதிமுகவினராலும் முடியவில்லை காரணம் அங்கேயே தலைவர்களுக்குள் பிரச்சனை..


எப்போது ஒருவர் அரசியலில் குதித்துவிட்டாரோ அதன் பின் அவர்களால் அதை விட்டு வெளியேற முடியாது என்பது நிதர்சனம் அப்படிப்பட்ட நிலை இருக்கும் போது குஷ்புவால் கடைசியாகச் செல்லக் கூடிய இடம் பாஜகாத்தானே?


அதுமட்டுமல்ல பாஜகவினருக்கும் இவரது தயவு தேவைப்படுகின்றது காரணம் பாஜகவில் உள்ள தமிழகத் தலைவர்களில் உள்ளவர்களில் ஒருவரால் கூட ஒரு வாக்குகளைக் கூட அள்ள முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் அது போல இவர்களின் பேச்சைக் கேட்க கூட ஆள் இல்லை ஆனால் குஷ்பு போன்றவர்களை இறக்குவதன் மூலம் கடைக் கோடி மக்களையும் கொஞ்சமாவது கவர முடியும் எனப் பாஜக தேசிய தலைமை நினைத்து இருக்கக் கூடும் அதனால் அவர்கள் குஷ்புவிற்கு வலை வீசி இருக்கக் கூடும் குஷ்புவும் தனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்பதால் அவரும் இதற்குச் சம்மதித்து இருக்கலாம் அதில் தவறு ஏதுமில்லைதான். குஷ்பு காங்கிரஸிலிருந்து அதுவும் தமிழகச் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் விலகுவதால் அவர்களுக்கு இது பேரிழப்பு அல்ல ஆனால் இதனால் கொஞ்சமாவது பாதிப்பு ஏற்படும் என்றால் அது திமுகவிற்கு மட்டும்தான்


நல்லா கவனித்துப் பாருங்கள் இவர் பாஜகவில் இணைந்தால் அதிகமாக இவரைப்பற்றிப் பேசப் போவது உடன் பிறப்புகள் மட்டுமே... காரணம் பாதிப்பு அவர்களுக்குதானே அதனால் சத்தம் மிக அதிகமாக எழும் என்பது நிச்சயம்.


சரி இவர் பாஜகவில் இணைவது சரியா என்றால் என் பார்வையில் அது தவறு என்றுதான் சொல்லுவேன் ஆனால் அப்படிச் சேருவதைத் தவிர அவருக்கு இன்றைய சூழ்நிலையில் வேறு வழி இல்லை என்பதும் உண்மையே அதை அவர் பக்கத்திலிருந்து பார்க்கும் மோது மிகச் சரியாகத்தான் தோன்றும்

இவர் பாஜகவில் சேருவது தவறு என்று பொதுமக்களாகிய நம்மை போன்றவர்கள் தைரியமாகச் சொல்லாம் ஆனால் தமிழகத்தில் உள்ள எந்தத் தலைவர்களாலும் இப்படிச் சொல்ல அருகதை இல்லை காரணம் அவர்களுக்கும் ஏன் ஸ்டாலினுக்கும் அவர் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தாலும் மோடி அவரைப் பார்த்துக் கை நீட்டினால் ஸ்டாலினும் சிரித்துக் கொண்டு அவருக்கு ஆதரவுதான் கொடுப்பார். காரணம் தேசத்தை ஆளுவது மோடி அல்லவா என்னதான் ஜெயித்து வந்தாலும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸைக் கழுவி விட்டு பாஜக ஆதரவாளராக மாறிவிடுவார்.. அப்படி அவர் செய்ய மாட்டார் என்பதற்கு யாராவது உறுதி மொழி கொடுக்க முடியுமா?

நல்ல யோசித்துப் பாருங்கள் தமிழகத்தில் உள்ள தலைவர்களில் அதுவும் இப்போது இருப்பவர்களில் யாரும் யோக்கியர்கள் அல்ல அவர்கள் எல்லோருமே தவறுகள் செய்தவர்கள்தான் அதுமட்டுமல்ல தங்கள் நலனுக்காகப் பொதுமக்களின் நலனைக் கைவிடத் தயாராக இருக்கும் மகா யோக்கியர்கள்தான் அதனால் இவர்களில் ஒருவருக்கேனும் குஷ்புவைக் குறை சொல்ல யோக்கியமும் இல்லை

அரசியலில் குஷ்பு கலைஞரிடம் இருந்தும் திமுகவிலிருந்தும்தானே ஆரம்ப அரிச்சுவடியை கற்றுக் கொண்டார் அங்கே அவர் கற்ற வித்தையைத்தான் இப்போது பயன்படுகிறார்.  அதனால்  குஷ்பு ‘லாபம் கொழிக்கும் காவி உடை’பக்கம் தன் கழுத்தை திருப்பிக் கொண்டிருக்கிறார், அதுமட்டுல்ல சட்டசபை உறுப்பினர் ஆகி அங்கேயும் சென்று எப்படி விஜயகாந்த் தனியாக் ஜெயலிதாவை எதிர்த்து குரல் கொடுத்து கலக்கினாரோ அது போல இவரும் கலக்கத்தான் போகிறார்

குஷ்புவிடம் நிறைகள்..மற்றும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் இருந்தாலும் இருக்கட்டுமே யாரிடம் தான் குறைகள் இல்லை?
 
 
Resignation letter by @khushsundar . She officially declared her move now.
  
Resignation letter by @khushsundar  . She officially declared her move now.




அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. சரியான அலசல் நண்பரே...
    இதோ வாட்ஸ்-ஆப் செய்தி..

    குஷ்பூ வரலாறு

    2009-ல் திமுக.வில் இணைந்தார்.. 2011ல் ஆட்சி இழந்தது திமுக..

    2013-ல் காங்கிரசில் இணைந்தார்.. 2014ல் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்.

    2020-ல் பாஜக.வில் இணைகிறார்

    ReplyDelete
    Replies
    1. ///2009-ல் திமுக.வில் இணைந்தார்.. 2011ல் ஆட்சி இழந்தது திமுக.. 2013-ல் காங்கிரசில் இணைந்தார்.. 2014ல் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். 2020-ல் பாஜக.வில் இணைகிறார்///


      இப்படி எழுதி வாட்ஸ்ப்ப்பில் பதிவிட்டது யாருன்னு பார்த்தால் தமிழக பகுத்தறிவாளர்களாகவே இருக்கும்... அதுமட்டுமல்ல இவர்கள் சொல்லுவது போல இவர் சேர்ந்த இடத்தில் உள்ளவர்கள் ஆட்சியை இழப்பார்கள் என்றால் இவர்கள் சந்தோஷப்படத்தானே வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் குஷ்புவை கேலி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

      Delete
  2. Replies
    1. இது அரசியல் அல்ல அரசியல் பெயரில் பலர் நடத்தும் சுயநல பொழப்பு.......

      Delete
  3. குஷ்பு தி. மு. க. விலிருந்தே போராடியிருக்கவேண்டும். காங்கிரசுக்கு சென்றிருக்கக் கூடாது. தி. மு. க. வில் ஒருவரும் யோக்கியரல்ல. குஷ்பு ஒரு துணிசசலான பெண். சாதுரியமாக யோசித்து செயல்பட்டிருந்தால் எம். ஜி. யார், ஜெயலலிதா போல தி. மு. க. வையே கைப்பற்றியிருக்கலாம். மக்களை அவர்பின் செல்லவைத்திருக்கலாம். இது டூ லேட். பா. ஜ. க. வின் பிடியிலிருந்து கஷ்டப்படப்போகிறார் என்பதே என் கருத்து.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.