Wednesday, October 28, 2020

 மறைந்த தலைவர்களிடம் சீமான் பேசிய பேச்சுகளின் சிறு தொகுப்பு
 

A short collection of Seaman's phone talk to the late leaders



கலைஞர் :

இலங்கைத் தமிழர்களுக்குக் கலைஞர் உண்ணாவிரதம் இருக்கும் போது சீமானிடம் தொலைப்பேசியில் பேசினாராம் அதற்குச் சீமான்தான் ஐயா உங்களுக்கு வயது அதிகம் ஆகிவிட்டது அதனால் நீண்ட நேரம் உண்ணா விரதம் இருக்க வேண்டாம் அதுமட்டுமல்ல உங்கள் மனைவிமார்களைப் பீச்சுக்குக் கூட்டிப் போய் ரொம்ப நாளாகிறது .அதனால் அவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள் என்று சீமான் தான் சொன்னாராம்.

இந்தத் தகவல் கலைஞரின் உயிலில் 2 ம் பக்கத்தில் இருக்கிறது



ஜெயலலிதா :


ஜெயலலிதா ஹாஸ்பிடலில் இருந்த போது சீமானிடம் பேசி எனக்குச் சாப்பிட ஆசையாக இருக்குப்பா என்ன சாப்பிடவேண்டும் என்று தெரியலையப்பா நீதான் சொல்லனும் என்று கேட்டாராம் .அப்பச் சீமான் சொன்னாராம் ,அதுக்கென்னம்மா நான் இட்லி பண்ணித்தாரேன் அதுல இரண்டு இட்லி சாப்பிடுங்க என்று சொல்லி இட்லி அனுப்பி வைத்தாராம்.. இந்தத் தகவல் ஆறுமுகம் விசாரணை கமிஷ்ன் ஆவணத்தில் இருப்பதாகத் தகவல் சொல்லுகிறது

 

spb with seeman


 


பெரியார் சாகும் தறுவாயில் இருக்கும் போது ஏதோ ஒரு சிறுவனுக்குப் போன் அடித்துப் பேசிவிட்டு தான் செத்தாராம்.. அந்தச் சிறுவன்தான் சீமான் என்ற ரகசியம் வெளிவந்து இருக்கிறது ,அந்தச் சிறுவனிடம் பெரியார் இந்தத் தமிழக மக்களை நான் உன்னை நம்பிதான் விட்டுப் போகிறேன் நீ பெரியவன் ஆனதும் இந்தத் தமிழ் மக்களுக்காக ஏதாவது பண்ணவேண்டும் என்று சொல்லி விட்டுச் செத்தாராம், அதற்காகத்தான் மேடை போட்டு சீமான் கத்து கத்து என்று கத்திக் கொண்டு இருக்கிறாராம்.

இந்தத் தகவலை விஜயலெட்சுமி என்ற பெண்ணின் நாட்குறிப்பில் இருந்து பெறப்பட்டது

_________________________________________________________________________________________________________________

தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை வாசகர்களின் பெர்சனல் தகவல்களை  இணையம் மூலம் பெற  முயற்சியா? 

 _________________________________________________________________________________________________________________

அப்துல் கலாம்.

அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரியும் போது அவர் தலைமையில் தயாரித்த விண்கலம் ஒன்று விண்ணில் பாயத் தயாரகும் போது இறுதி நொடியில் அதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்வதறியாது தவித்த போது அப்துல் கலாம் சீமானுக்கு ஒரு போனை போட்டு பிரச்சனையைச் சொன்ன போது ,உடனே சீமான் சொன்னாராம் அதில் இருக்கும் சிவப்பு வயரை கருப்பு வயரிலும் பச்சை வயரை வெள்ளை வயரிலும் மாற்றிக் கனெக்ட் பண்ணச் சொன்னாராம் அப்படிச் செய்ததும்தான் அந்த ராக்கெட்டை விண்வெளிக்குச் செலுத்த முடிந்ததாம்..

இந்தத் தகவல் அப்துல் கலாம் பெர்சனல் நாட்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது


சதாம் ஹுசனை தூக்கிலிடும் போது அவரின் கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்ட போது தமிழகத்தில் என்னைப் போல ஒரு இளைஞன் ஒருவன் இருக்கிறான் அவனிடம் பை சொல்லிவிட்டுத்தான் சாக ஆசை என்று சொன்னாராம் அவர் யாரு என்று கேட்ட போது சீமான் என்று சொன்னாராம்.. அதன் பின் சீமானிடம் பை சொன்னபின்தான் அவரைத் தூக்கில் போட்டார்களாம்

இந்தத் தகவல் இராக் இராணுவவீரரின் நாட்குறிப்பில் இருந்த பெறப்பட்டது.  




ஸ்ரீதேவி'


ஸ்ரீதேவி துபாயில் பாத்ருமில் சாவதற்கு முன்பு யாரிடமோ நீண்ட நேரம் பொனில் பேசி இருக்கிறார். அவர் கடைசியாகப் பேசியது
சீமானிடம்தானாம். ஸ்ரீதேவி குளிக்கப் பாதருமிற்குள் நுழைந்ததும் போன் அடித்தால் எடுத்த பேசிய போது சீமான் மறு முனையிலிருந்து இருக்கிறார் அவரிடம் தான் குளிக்கப் போவதாகச் சொன்னது'

சீமான் உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காகக் குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
சரி பின் எதற்குத் தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல் . குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்குக் காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்ப கழிவை உடலிலிருந்து நீக்குவதற்காகக் குளிந்தநீரில் குளிக்கிறோம். வெந்நீரில் குளிக்கக் கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாகத் தலை. எதற்கு இப்படி? காலிலிருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாகத் தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கிச் சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்
.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையைக் கண்முன்னே கொண்டு வாருவோம். குளத்தில் ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். காலிலிருந்து மேல் நோக்கிக் குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும். இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா?? உச்சந்தலைக்குச் சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள். இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிகச் சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசைத் தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. வியக்கவைக்கிறதா... !

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூடச் சரியாகும். குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படிச் சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளித்துக்கொண்டு வந்தால் நாம நோயாளியா இல்லாமல் வேற எப்படி இருப்போம். குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன் , குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சைத் தண்ணீர். குளித்தல் = குளிர்வித்தல் குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலைக் குளிர்விக்க. இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள் என்று சொன்னாராம்.

சீமான் இப்படிப் பேசியதால்தான் ஸ்ரீதேவி இறந்திருப்பாரோ என்று சந்தேகம் இருப்பதால்தான் அவரின் மரணம் மர்ம மரணம் என்கிறார்கள் போல

சிபிஐயின் டைரி குறிப்பிலிருந்து

இனி வருங்காலத்தில் எந்தத் தலைவர்களாவது ஹாஸ்பிடலில் கவலைக்கிடமாக இருக்கு செய்தியை ஊடகாரர்கள் அறிந்தால் அவர் முதலில் கேட்கும் கேள்வி என்பது சீமான் அந்தத் தலைவரிடம் பேசினாரா என்பதாகத்தான் இருக்கும் அதன் பின் தான் மற்றைய கேள்விகள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

எமன் பாசக் கயிற்றை எந்தத் தலைவர் மீது வீசி உயிரைப் பறித்தால் முதலில் தகவல் சொல்லுவது சீமானிடம்தான். அப்போதுதான் சீமான் அந்தத் தலைவரிடம் தொலைப்பேசியில் பேசியதாகச் சொல்ல முடியும்..

10 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தனபாலன்

      Delete
  2. இதில் நூறு சதவீதம் உ(ம்)ண்மை இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  3. எதுவும் எழுதாமல் சிரிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி ஜி.எம்.பி சார்

      Delete
  4. அத்தனையும் அருமை. அதிலும் ஸ்ரீதேவியின் மர்ம மரணத்திற்கு காரணம் இப்போதுதான் புரிந்தது,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி சம்பத் சார்

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி ஜம்புலிங்கம் சார்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.