Wednesday, October 28, 2020

 

Great tamil leader thirumavalavan

கள்ள மௌனம் காக்கும் ஸ்டாலினும் மற்ற தமிழகத் தலைவர்களும்


மனுஸ்மிருதிக்கு எதிராகத் திருமாவளவனும் அவர்கட்சியினரும், வேல்முருகன் மற்றும் , நாம் தமிழர் கட்சியும் மட்டுமே குரல்கொடுத்துக்கொண்டிருந்தால் மக்களுக்கு மனுஸ்மிருதி மற்றும் பாஜக கட்சியினரின் உண்மைத்தன்மை தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது .

தமிழகத்தின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான வருங்கால முதல்வராகத் தன்னை நினைத்துக் கொள்ளும் ஸ்டாலின் திருமாவளவன் மீது தொடர்ந்த வழக்குக்காக மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் தவிர மனுஸ்மிருதி பற்றி வாய் திறக்கவும் இல்லை அதற்காகப் போராட்டம் நடத்திய திருமாவளனோடு தோள் கொடுத்து எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் இறங்கவும் இல்ல. சரி வயதாகிவிட்டது என்றால் அவர் கட்சியினரையாவது அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள அறிக்கைவிட்டு இருக்கலாம் அதை ஏன் அவர் செய்யவில்லை
 
இவர்கள் இப்படி அமைதி காத்தால் இவர்களுக்கும் எடப்பாடி அரசுக்கும் என்ன வித்தியாசம்.. எடப்பாடி மாதிரிதான் மோடிக்குப் பயந்து வாய் திறக்க மாட்டோம் என்றால் எடப்பாடியே தொடர்ந்து அரசு அமைப்பதில் என்ன தவறு அல்லது மோடியே நேரடியாக ஆள்வதில் என்ன தவறு

இன்னும் அமைதிக்காகக் கூடாது எனவே , மாநிலத்திலுள்ள திமுக , காங்கிரஸ், மதிமுக , கம்யூனிஸ்ட் , தேமுதிக பாமக போன்ற அனைத்துக்கட்சிகளும் குரல் மட்டும் அல்ல திருமாவளவனுடன் களத்தில் இறங்கவும் வேண்டும்  .

அப்போதுதான் மனுஸ்மிருதியில் என்ன சொல்லி இருக்கிறது என்று உண்மை மக்களுக்குத் தெரியவரும் அதுமட்டுமல்லாமல் அதில் எழுதிய தப்பு இல்லை ஆனால் அதைப் பற்றிப் பேசுவதன் தப்பு என்று ஆளும் கட்சி எடுக்கும் நடவடிக்கையும் மக்களுக்குத் தெரியும்

ஆனால் இதன் பிறகும் ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளும் மௌனம் காத்தால் மனுஸ்மிருதியில் சொல்லி இருப்பது சரிதான் என்று ஆகிவிடும்?

இது சரியா? அல்லது மனுஸ்மிருதியில் சொல்லி இருப்பது போலத்தான் எல்லாப் பெண்களும் ,அப்படித்தான் அவர்களை நடத்த வேண்டு என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது

எது எப்படியோ தளபதியாரே ஒதுங்கிப் போவது தீயவைக்கு அஞ்சியல்ல; தீயவை தீண்டத்தகாதவை  என்று  தந்தையை போல வசனம் பேசி ம்ட்டும் சென்றுவிடாதீர்கள் ஹீஹீ

இவர்கள் எப்படியோ ஆனால் திருமாவளவன் மனுஸ்ருமிதி இப்போது இட ஒதுக்கீடு என்று மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பது அல்லாமல் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.

இடஒதுக்கீடுக்காக நடைபெற்ற போராட்டத்தில் மிக ஆணித்தரமாக "எனது கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடிகள் கொடுத்தாலும் கூட்டணிக் கட்சிகளின் இசைவோடு வெளியேறி பாஜகவை எதிர்ப்பேனே தவிர, ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்!தேர்தலை நாங்கள் இரண்டாம் பட்சமாகத் தான் விரும்புகிறோம். சமூக மாற்றத்தைத் தான் என்றைக்கும் முதன்மையாக விரும்புகிறோம் என்று பேசி இருக்கிறார்.

அவர் இந்திய அரசியலில் ஒரு உண்மையான தலைவராகத் தன்னை உச்சத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்

அடுத்த தலைமுறைக்கு ஒரு  மாபெரும் தலைவனாக திருமா உருவாகி கொன்டிருக்கிறார் எனலாம்
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

28 Oct 2020

1 comments:

  1. மனுஸ்ருமிதி நூலை பெண்கள் எவ்வாறு எதிர்க்கிறார்கள் என்பதும் முக்கியம்...

    பெண்கள் = அனைத்து பெண்களும்...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.