எதிர்ப்பதில் நமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால்....
ஒற்றுமை இல்லாவிட்டால் நீங்கள் குரல் கொடுப்பது சரியான காரணத்திற்காக இருந்தாலும் எடுபடாது.
இதைக் கீழ்வரும் கதையின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு கல்லூரியில் தினமும் காலை உணவின் எப்போதும் உப்புமா போடுகிறார்கள் என்று 100 மாணவர்களில் 80 பேர் புகார் சொன்னார்கள். ஆனால் மீதி 20 பேர் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள்.
கல்லூரி நிர்வாகமோ பெரும்பான்மையான மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று சொல்லி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்,.
உப்புமா பிடிக்காத 80 பேர்கள் என்ன செய்து இருக்க வேண்டும் உப்புமாவை ஒழிக்க ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கவேண்டும் அதாவது ஒற்றுமையாகப் பேசி ஒரு முடிவிற்கு வந்து இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அப்படிப் பண்ணாது அவரவருக்கு தோன்றியபடி இப்படி எழுதிக் கொடுத்ததால்
மசாலா தோசை 10
பூரி 20
இட்லி 10
பரோட்டா 8
வெஜ் சாண்ட்விஸ் 12
நூடுல்ஸ் 10
சப்பாத்தி 10
என்று வோட்டு பிரிந்தது ..
கடைசியில் உப்புமா 20 வோட்டை பெற்று பெரும்பான்மையில் வென்றது !
அதனால் உப்புமா பிடிக்காத எல்லோரும் உப்புமாவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! இப்படித்தான் மோடியின் ஆட்சியும் நடக்கிறது.
இங்கே மோடியை ஆதரிக்கும் சிறுபான்மையர் பர்சன்டேஜ் குறைவாக இருந்தாலும் ...ஒன்று போல ஒற்றுமையாக ஓட்டளிப்பதால் அவர்கள் வைத்ததே சட்டம் ஆகிறது .
இனியாவது மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கூடிப்பேசி..மோடி எதிர்ப்பு ஓட்டு வங்கியை ஒன்றினைப்பதன் மூலம் மோடியைத் தலை எடுக்க வைக்க முடியாமல் செய்யலாம்
அப்படி நம்மால் இயலாது என்றால் நாம் அனைவரு சங்கியாக மாறுவதைத் தவிர வேறு எதும் இல்லை
ஜெய்கிந்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.