சமுகத்தை நினைத்தேன் மனதிற்குள் சிரித்தேன்
சமீபத்தில் ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்குச் சென்றேன். அங்கு இங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் உள்ள குடும்பங்களும் சங்க நிகழ்வில் பங்கேற்கும் குடும்பங்களும் வந்து இருந்தனர். இதில் பலரை நான் இணைய வாயிலாக அறிந்து இருந்தாலும் அவர்களை இப்போதுதான் நேரில் சந்திக்கின்றேன். இவர்களில் பலர் இணையத்தில் maturedகவும் மிகவும் பொறுப்பு உள்ளவர்களாகவும் பண்பாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் பலரை நேரில் சந்திக்கும் போதுதான் தெரிகிறது அவர்களது டபுள் மீனிங்க் பேச்சுகளும் எண்ணங்களும் அதற்கு எதிர்மறையாக இருக்கிறது என்று.. இவர்கள் எல்லோரும் மிகவும் படித்தவர்கள் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் மிக வசதியானவர்கள் இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை..இவர்கள்தான் இணையத்தில் கலாச்சாரம் பண்பாடு பற்றி அதிகம் பேசுபவர்களாகவும் நேரில் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கிறார்கள்,இவர்களை நான் நேரில் பார்க்கும் முன் மிகக் கண்ணியமானவர்கள் என நினைத்து இருந்தேன்
இவர்களில் பலர் என்னைச் சந்தித்த போது ஓ அரசியல் நையாண்டி பதிவு போடுவர் நீங்கள்தானா நீங்கள் லோக்கல் ஆள் என்று அல்லவா, மிகவும் மோசமான ஆள் என்று அல்லவா நினைத்தோம் ஆனால் அதற்கு எதிர் மாறாக இருக்கிறீர்களே என்று சொன்னார்கள். அதற்குப் பதிலாக நான் என் வழக்கமான புன்னகையை மட்டும் திருப்பிக் கொடுத்தேன் . அவர்களைப் பற்றி நான் நான் எண்ணியதை மட்டும் சொல்லவில்லை,
இதிலிருந்து நான் கற்றுக் கொண்டது பேஸ்புக்கில் எழுதுவதை ஷேர் செய்வதை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது என்பதைதான். நான் எப்படி என்னை ஒரு பக்கா லோக்லாகக் காண்பித்துக் கொள்ள முயல்கிறேனோ அது போல அவர்கள் தங்களை மிக யோக்கியர்களாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள் விஷயம் அவ்வளவுதான்...
இதிலிருந்து நான் கற்றுக் கொண்டது பேஸ்புக்கில் எழுதுவதை ஷேர் செய்வதை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது என்பதைதான். நான் எப்படி என்னை ஒரு பக்கா லோக்லாகக் காண்பித்துக் கொள்ள முயல்கிறேனோ அது போல அவர்கள் தங்களை மிக யோக்கியர்களாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள் விஷயம் அவ்வளவுதான்...
அன்புடன்
மதுரைத்தமிழன்
அவர்கள் தங்களை பக்கா யோக்யர்களாக......இதனை மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஇதைத்தான் நான் வலை உல்கில்பலரும் வெறும் அறிமுகங்களே நட்பாவது மிகவும் அரிது என்கிறேன்
ReplyDeleteநல்லதொரு பகிர்வு. முகநூலில் வேறு முகம் காண்பிப்பவர்களே அதிகம். நேரில் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteவெளந்தியான மனமே... வாழ்க தல...
ReplyDelete