Thursday, October 15, 2020

 

Is Khushboo appearing on Tamil News Channel 18 to preach Geeta to the people of Tamil Nadu?

தமிழ் நீயூஸ் சேனல் 18 ல் தமிழக மக்களுக்குக் கீதா உபதேசம் செய்யக் குஷ்பு அவதரித்து வந்து இருக்கிறாரா என்ன?



தமிழ்நீயூஸ் 18 சேனலில் வந்த குஷ்புவின் பேட்டியைப் பார்க்க நேர்ந்தது அதில் அவர் தான் ரொம்பச் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து முட்டாள் தன்மாகப் ய உளறிக் கொண்டிருந்தார் அல்லது மக்களை மூட்டாளாக நினைத்துப் பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்லாம்


https://tamil.news18.com/videos/politics/exclusive-interview-with-kushboo-yuv-357587.html    இந்த காணொளியை பார்த்துவிட்டு பதிவை படிக்கவும்


 
ஒரு சேனலில் வேலை பார்ப்பதற்கு ஒரு கட்சியில் சேர்ந்து மக்களுக்காகச் சமுகச் சேவை செய்வதற்கு உள்ள வித்தியாசம் தெரியாமல் உளற ஆரம்பித்தார் பாஜக கட்சியில் சேர்ந்து பிறகு உளர்வதற்கு சொல்லியாத்தரணும்

பாஜகவின் திட்டங்கள் நல்ல திட்டங்கள் ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் எதிராகச் செயல்பட்டதாகச் சொல்லுகிறார். அவர் யோசித்துத்தான் பேசுகிறார் என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது

கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுவது சரியா? அப்படியானால் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது எதிர்க்க வேண்டும் என்பதற்காக நல்ல திட்டங்களை எதிர்த்தேன் என்பவர் இப்போது பாஜகவில் இருக்கும் போது அந்தக் கட்சி மோசமான திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதற்கு ஆதரவாகத்தான் செயல்படுவாரா? அப்படிச் செய்வதுதான் இவரது செயல் என்றால் மக்கள் நலன் அதில் எங்கே இருக்கிறது இதில் வேற இந்த வாழ்க்கை மக்கள் கொடுத்தது என்கிறார் அப்படியானால் அதற்கு விசுவாசமாக இருப்பது என்பது இதுதானா?


காங்கிரஸில் இருக்கும் போது மனசாட்சியைக் கழற்றியதாகச் சொன்ன குஷ்பு பாஜகவிற்கு வந்த பின் அதைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டாரா?


நாலு வருடம் மனசாட்சியைக் கழற்றி வைத்த பொய்யைப் பேசியவர் இப்போது மனசாட்சியை மாற்றிக் கொண்டு உண்மையைப் பேசுகிறேன் என்பது எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது. குஷ்பு எப்போதும் உண்மையைத்தான் பேசுவார் என்று மக்கள் கருதுவார்கள் என்ற பொய்யை உண்மை என்று வாய்க் கூசாமல் சொல்லுகிறார்

திமுக என்ற பள்ளிக்கூடத்திலும் காங்கிரஸ் என்ற ஹை ஸ்கூலிலும் சென்று படித்த குஷ்பு இப்போதுதான் பாஜக என்ற கல்லூரியில் சேர்ந்திருக்கிறாராம்.. அப்ப இந்தக் கல்லூரி படிப்பு மூன்று ஆண்டுகள் தானே ஒரு வேளை அதன் பிறகு மீண்டும் புதிய மனசாட்சியை மாட்டிக் கொண்டு புதுக்கட்சி ஆரம்பித்து விடுவாரோ ஆமாம் குஷ்பு என்ன சொல்ல வருகிறார்

பணம் புகழ் இருக்கும் குஷ்பு அதை எதிர்பார்த்து பாஜவிற்கு வரவில்லையாம். அப்ப அதிகாரத்தை எதிர்பார்த்துத்தான் வந்திருக்கிறாரா என்ன? அப்ப அவருக்கு அதிகாரப் பதவி கிடைத்தால் மக்கள் சேவை என்ற பெயரில் அயோக்கியத்தனம் பண்ணுவாரா என்ன

குஷ்பு எந்த விஷயத்திற்கும் பயப்படுகிற ஆள் இல்லை உண்மைதான் அதனால்தான் மக்கள் என்ன நினைப்பார்களோ என்று சிறிய அச்சம்கூட இல்லாமல் பொய்யுரைகளை அள்ளி விடுகிறார்

தன்னை மிகத் தைரியமான பெண் & பெரியாரிஸ்ட்  என்று சொல்லும் அவர்.  அதாவது பெண்ணுரிமைக்காகப் போராடுவதில் ஒரு பெரியரிஸ்ட் என்பவர் .காங்கிரஸில் இருக்கும் போது அங்குள்ள ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடி அங்குப் பெண்ணுரிமையை நிலை நிறுத்த முடியாமல் பாஜகவின் முந்தானையில் ஒழிந்து கொள்வதுதான் தைரியமா?

பெமினிஸ்ட்க்கும் பெரியாரிஸ்டுக்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரியவில்லை

மனைவிக்கு அநியாயம் நடக்கும் போது பொங்கி எழுதுவதுதான் ஆணிற்கு அடையாளம் ஆனால் சுந்தர் குஷ்புவிற்கு அநியாயம் நடக்கும் போது இதுவரை பொங்கி எழவில்லை பொங்கி எழுந்து எல்லாம் குஷ்புதானே .குஷ்பு தன் கணவர் சொல்லித் தான் எதுவும் நடக்கவில்லை இனிமேலும் நடக்காது என்று கூருகிறார்... ஒரு வேளை கணவர் சொன்னாலும் அதை நான் கேட்கமாட்டேன் என்று சொல்லவருகிறாரா. அப்ப குஷ்புவின் கணவர் உப்புக்குச் சப்பாணிதானா?

இனிமேல்தான் குஷ்பு உண்மையான குஷ்புவாக மாறப் போகிறாராம்

அதிமுகக் கட்சியில் ஏன் சேரவில்லை என்ற கேள்விக்கு எந்தக் கட்சி ஆட்சியில் தமிழகம் நன்றாக இருந்தது இல்லை என்று நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதாகவும் அதனால்தான் அதிமுகவில் சேரவில்லை என்று மறைமுகமாகக் கூறி இருக்கிறார் அதனால்தான் அந்தக் கட்சியில் அவர் சேரவில்லை என்பது மாதிரியாகவும் பேசி இருக்கிறார்.

அப்படியானால் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் மீண்டும் பாஜகவிற்காகத் தன் மனசாட்சியைக் கழற்றி வைத்துத்தான் பேசுவாரா அல்லது மனசாட்சி என்ற ஒன்றே இல்லாமல் பேசுவாரா?

அதிகாரத்தை எதிர்பார்த்து குஷ்பு இல்லை என்றால் காங்கிரஸில் அப்படி என்ன எதிர்பார்த்தார்



கீதையில் சொல்லிருப்பதைச் சுட்டிக் காட்டும் குஷ்பு காங்கிரஸில் இருக்கும் போது அந்தக் கீதா உபதேசத்தைப் பின்பற்றவில்லையே ஏன்?


கீதையில் சொல்லி இருக்கிறதாம் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று அதனால் அதன்படிதான் நடக்கிறாராம்.. அதாவது மக்களுக்குச் சேவை செய்யத்தான் பாஜகவில் சேர்ந்து இருப்பதாகவும் அங்குப் பலனை எதிர்பார்த்து சேரவில்லை என்றும் கூறுகிறார்


தமிழகக் காங்கிரஸில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறதாம் அதனால் அவரால் செயல்பட முடியவில்லையாம்... கடந்த 4 வருடமாக அங்குப் புகைந்து கொண்டிருந்திருக்கிறார் போல... ஆமாம் இவரைவிட மிக எளிமையான சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானே ஜோதி மணி என்பவர். அவருக்கு எந்தச் செலிபிரட்டி பேக்ரவுன்டும் கிடையாது.. ஆனால் அவர் எப்படி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். சொல்லப் போனால் அவர்தான் கீதா உபதேசத்தில் சொன்னபடி கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போலக் கருமமே கண்ணாயிரம் போல மக்களுக்குச் சேவை செய்கிறார். செய்து கொண்டும் இருக்கிறார் அதனால்தானே அவரால் எம்பியாக இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்க முடிகிறது.. அவரும் தமிழகக் காங்கிரஸில் உள்ள ஆணாதிக்கங்களைச் சமாளித்
துதானே செயல்பட்டுவருகிறார். அவரால் அப்படிச் செய்ய முடிகிறது போது மக்களிடம் மிகப் பாப்புலராகவும் தன்னைத் தைரியமான பொண்ணாகவும் கட்சியில் தேசிய அளவில் ஒரு பதவியில் இருக்கும் உங்களால் ஏன் சாதிக்க முடியவில்லை என்பதற்கு உங்களால் தக்க பதில் சொல்ல முடியுமா குஷ்பு

பகவத் கீதாவில் சொல்லி இருப்பது உபதேசம் அதைப் படிப்பது அதில் உள்ளதை பின்பற்றுவதற்கு தானே ஒழிய அதைப் படித்து ஊருக்கு உபதேசம் செய்ய அல்ல

உங்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் நீங்கள் பாஜகவில் சேர்ந்து இருப்பது பணத்திற்காகவும் அதிகாரப் பவருக்காகவும் மட்டும்தான் அதிகாரப் பதிவுகளில் இருக்கும் தமிழகப் பாஜக தலைவர்களாலே தமிழகத்தில் ஒன்றும் புடுங்க முடியாத போது உங்களால் என்ன இங்குச் சாதிக்க முடியும்..

காங்கிரஸில் விசுவாசத்தை "காட்டினேன்"என்று சொல்லும் நீங்க இப்போது பாஜகவில் என்ன காட்ட போறீங்க??

காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களாவது நடிக்கத் தெரியாத உங்களை ஒரு நடிகையாகப் பார்த்தனர் ஆனால் மக்கள் உங்களை ஒரு அழகு பதுமையாக ஒரு சந்தர்ப்ப வாதியாகவே மட்டும் பார்க்கிறார்கள் மக்கள் அப்படி நினைக்க உங்களின் செயல்பாடுகள்தான் காரணம்.

மோடியின் இராம ராஜ்யத்தில் பெரியாரின் பெண்ணுரிமை கொள்கைகளைப் பற்றி நடித்துக் காட்டவே குஷ்பு பாஜவில் சேர்ந்து இருக்கிறார் போல




அசோகன் என்பவர் தன் பதிவில் சொல்லி இருந்தது ஒருவர் தன்னுடைய சொந்த நன்மைக்காக இன்னொருவரைக்  கொஞ்சங்கொஞ்சமாகக் குழப்பி, இல்லாத ஒன்றை உண்மை என்று நம்பச்செய்து, அந்த நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதைத்தான் Gaslighting என்கிறார்கள்  என்று சொல்லி இருந்தார் அதைத்தான் குஷ்பு இ
ப்போது செய்து கொண்டிருக்கிறார்

 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. புதைகுழியை என்று தெரியாமல் செய்து வைத்திருப்பார்கள்... சிலர் அது தெரியாமல் கால் வைத்து விடுவார்கள்... உடனே அது இழுக்காது... தான் நினைக்காததை எல்லாம் பேசவும் செயல்படவும் வைக்கும்... சில காலம் கழித்து, தெளிவு என்று சற்றே ஒன்று தோன்றும் போது, அந்த சிலர் உடனே புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அடுத்த நொடி மேல் உலகத்திற்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்...!

    ReplyDelete
  2. பா. ஜ. க. வின் அதிகாரங்கள் அனைத்தும் ஆர் . எஸ். எஸ். இன் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அது இந்துராஷ்டிரம் அமைக்கப்பட மட்டுமே பயன் படுத்தப்படும். இந்திக்காரர்கள் மட்டுமே முன்நிலைப்படுத்தப்படுவார்கள். இதை எதிர்பவர்கள் ஆண்டி இன்டியன்ஸ். பா. ஜ. க. வில் இருந்தாலும் தமிழக தலைவர்களாக இருந்துகொண்டு இந்த அஜெண்டாவை செயல்படுத்துவதைத் தவிர வேறு ஒரு ஆணியும் புடுங்க முடியாது. இதுதான் கள யதார்த்தம்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அஜெண்டா. அதற்கேற்றபடிதான் திமுக, திக, விசிக, பாமக, நாம் தமிழர் என்று எல்லாருமே செயல்படுகிறார்கள். பாஜக வின் அஜெண்டாவும் அதுபோலத்தான். காங்கிரஸ் தமிழக தலைவர்கள் மட்டும், காங்கிரஸின் அஜெண்டாவை விட்டுவிட்டு தனி அஜெண்டாவைச் செயல்படுத்தினாங்களா?

    குஷ்பு இந்தக் கட்சியில் சேர்ந்தது அவரது தனிப்பட்ட ஆதாயத்துக்குத்தான். இதுல நாம் ஏன் ரொம்ப யோசித்துக் கவலைப்பட வேண்டும்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.