Thursday, October 1, 2020

இந்தியா இப்போதுதான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது 

 

India is on the right track right now


சேகர் ரெட்டி மீதான வழக்கிற்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கும் கிடைத்த தீர்ப்பைப் பார்க்கும் போது சிரிப்பதா .அழுவதா அல்லது வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது அதாவது நாடு நாடு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட, 32 பேர் பாபர் மசூதியை இடிக்கவில்லை அவர்கள் செய்தது எல்லாம் ராமர் கோயிலைச் சுத்தம் செய்ய முயன்றார்கள். அதனால் அவர்கள் குற்றமற்றவர்கள் . நல்லதொரு தீர்ப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு இதுவாகத்தான் இருக்கும்

மேலும் இனிமேல் நாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொண்டால் இப்படித்தான் பேச வேண்டும். "பசு மாட்டையா பலாத்காரம் செய்து கொன்றார்கள் இளம் பெண்ணைத்தானே பலாத்காரம் செய்து கொன்றார்கள் அது தப்பு என்று இந்தியாவில் பொங்குவது ஏன்?"

இப்போது இந்திய மக்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது ஊழல் என்று எடுத்துக்கொண்டால் அப்படிச் செய்வது தவறு என்பதை விட அதில் ஒப்பீடு செய்து அவர்கள் அதிகம் ஊழல் செய்தவர்கள் அதைவிட இது குறைவுதான் என்றும் இல்லையென்றால் அவர்கள் மட்டும் ஊழல் செய்யவில்லையா இவர்கள் இப்போது செய்வது மட்டும் கண்ணை உறுத்துகிறதா என்று சப்பை கட்டுகிறார்கள்

சரி அதைவிடுவோம் அதிகார துஷ்பிரயோகம் என்பதை எடுத்துக் கொண்டாலும் அதே கதைதான்.அந்த ஆட்சியில் செய்யாததையா இந்த ஆட்சி செய்துவிட்டது என்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள்

அது மட்டுமல்ல கொலை, கொள்ளை பற்றிய பேச்சு எடுத்தாலும் இதே நிலை தான்..

இப்போது நடந்த அப்பாவி பெண்கள் கற்பழிப்பு கொலைகளிலும், கொஞ்சமும் மனசாட்சியின்றி அந்த மாநிலத்தில் நடக்க வில்லையா, இந்த மாநிலத்தில் நடக்கவில்லையா அந்தச் சாதியினர் பண்ணினார்களே இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் பண்ணினார்களே என்று ஒப்பிட்டுப் பேசி குற்றங்களைக் குற்றமே இல்லாதவாறு பேசும் அளவிற்கு இதயத்தில் கொஞ்சம் ஈரமும் இல்லாமல் போய் விட்டது....


இனியென்ன எந்தக் குற்றங்களும் மற்றும் கற்பழிப்பு கலாச்சாரமும் , இந்திய நீதி மன்றத்தால் வழங்கப்படும் தவறான தீர்ப்புகளையும் நியாயப்படுத்தும் மனப்பான்மை இன்றைய ஆட்சியாளர்களின் காலத்தில் மிகவும் இயல்பாகிவிட்டது வியப்பில்லைதான்..உபியில் ஒரு பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார் அவரின் உடலை காவல்துறை அவசர அவசரமாகக் குடும்பதினர்கிட்ட கூடக் காட்டாமல் அந்தப் பெண்ணின் உடலை எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறார்கள். இதற்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள். சேகர் ரெட்டி வழக்கு மற்றும் பாபர் மசூதி வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கப்பட்டதை அறிந்தும் இவர்கள் நீதி கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் இவர்கள் மிக முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்நாடு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிற போது நீதி நியாயம். கேட்டுப் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.. இப்படிப்பட்டவர்கள் நீதி கேட்டு நடத்தும் போராட்டங்கள் பிக் பாஸ் வரும் வரைதான்.. அதன் பின் அவர்கள் கவலை எல்லாம் பிக பாஸ் பற்றித்தான்

இப்போது உள்ள இந்தியர்களின் மனநிலைப்படி தனக்கோ, தன் குடும்பத்தாருக்கோ பாதிப்பு ஏற்படும் வரை எதுவும் பிரச்சனைகள் இல்லை. அதே நேரத்தில் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்களுக்கு அன்றைய தினத்தில் சமுக ஊடகங்களில் பேசப்பட ஒரு விஷயம் அல்லது நிகழ்வு கிடைத்ததாகவே கருதுகிறார்கள். பொது நலன் சமுக நலன் என்பது அவர்களிடையே இல்லாமல் போய்விட்டது.. அதனால்தான் அரசியல் தலைவர்களும் சமுக நலன் பற்றி அதிகம் யோசிப்பதில்லை தங்கள் நலன்களைப்பற்றியே யோசித்துச் செயல்படுகிறார்கள் தலைவர்கள் மட்டுமில்லை நீதித்துறையைச் சார்ந்தவர்களும் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்


  
India is on the right track right now


நாடு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிற போது நீதி நியாயம். கேட்டுப் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.


டிஸ்கி: நாட்டின் நிலையைப் பார்த்து பாஜக ஆட்சிக்கு அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள்.. என்னைப் பொறுத்தவரையில் இப்போதுதான் மோடி அரசு வளர்ச்சியின் பாதையில் செல்ல ஆரம்பித்து இருக்கிறது அதன் வளர்ச்சி உச்சக்கட்டத்திற்குப் போகும் போது நாடு ஒரு சுடுகாடாக இருக்கும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்3 comments:

  1. பாபர் மசூதி இடிப்புக்கு காரணம் கண்டு பிடிக்கு முன் இன்னும் இருக்கவே இருக்கிறது கிருஷ்ணச் ஜன்ம பூமி அஸ்திவாரம்போட்டாயிற்று இடிப்பது தான்பாக்கி அதுவும் யாரும் ப்லான் செய்யாமலேயே இடிக்கப்பட்டு விடும்

    ReplyDelete
  2. ஆக சிறந்த பதிவு இந்தியாவின் அழிவுப் பாதை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.