Saturday, October 10, 2020

 

#humour

அப்படி என்ன நான்  தப்பா சொல்லிட்டேன்


ஒரு நண்பர் ஒருத்தர் வீட்டிற்கு வந்தார். அவரும் நானும் சேர்ந்து சரக்கு அடித்துக் கொண்டு சொந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அப்படி அவர் பேசிக் கொண்டிருக்கையில் மதுர நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லப் போறேன் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னார் அதுமட்டுமல்ல அதற்கு நீ ஒரு சிறந்த அறிவுரையும் தரனும் என்று சொன்னார்.


நானும் சரி சரி என்று தலையாட்டினேன்..
 
அதன் பின் அவர் சொன்னார் அவர் பெண் ஒருத்தரைக் காதலிக்கிறாராம் அது அவருக்குப் புடிக்கவில்லையாம்... அவர்கள் இருவரும் தொடர்ந்து காதலிக்க இருக்காமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்.

நானும் அவரிடம் அவர்கள் இருவரும் தொடர்ந்து காதலிக்க இருக்காமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்றுதானே கேட்கீறீங்க என்று மீண்டும் தெளிவு படுத்திக் கொள்ளக் கேட்டேன்

அவரும் ஆமாம் அதைத்தான் உங்களிடம் கேட்டேன் என்றார்.



உடனே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கள் ஒரு சிறந்த முடிவைச் சொல்லுகின்றேன் என்று சொல்லி யோசித்தேன்.. அப்படி யோசிக்கையில் ஒரு மிகச் சிறந்த யோசனை என்னிடம் தோன்றியது..


அதை அவரிடம் சொன்னதும் போடா உன்னிடம் போய் அறிவுரை கேட்டேன் பாரு என்னைச் செருப்பால அடிக்கனும் என்று சொல்லி கோபப்பட்டுக் கொண்டு போய்விட்டார்.
  

Humour



ஆமாம் அப்படி என்ன நான் சொல்லீட்டேன் என்றுதானே நீங்கள் கேட்க வறீங்க சரி அதை உங்ககிட்ட சொல்ல எனக்குத் தயக்கமே இல்லை இப்ப ப சொல்லுறேன் அதைக் கேட்டுவிட்டு நீங்களும் உங்கள் கருத்தை சொல்லிட்டு போங்க சரியா?

அவர் கேட்டது இருவரும் தொடர்ந்து காதலிக்க இருக்காமல் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார். நான் சொன்னேன் அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டுப் பாருங்கள் அதன் பின் அவர்கள் இருவருக்கும் உள்ள காதல் இல்லாமல் போய்விடும் அவர்களும் நம்மைப் போலத் தினமும் அடித்துக் கொண்டு சண்டை போடுவார்கள் அதற்குப் பின் அவர்களுக்குள் காதலும் இருக்காது கத்திரிக்காயும் இருக்காது என்று சொன்னேன்

இப்ப சொல்லுங்க அப்படி நான் என்ன தப்புபண்ணிட்டேன் உண்மையைத்தானே சொன்னேன்


சமுகத்தை நினைத்தேன் மனதிற்குள் சிரித்தேன் 

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 Oct 2020

8 comments:

  1. நீங்கள் என்ன யோசனை சொல்லி இருப்பீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது - நான் நினைத்தது சரியாகவே இருந்தது! அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்! ஹாஹா...

    ReplyDelete
    Replies
    1. என்னை சரியாகப் புரிந்து வைத்து இருக்கிறீர்கள்

      Delete
  2. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டை பாக்குக்கு விலை சொன்னானான்.

    உன்னை போய் கேட்டான் பார், அவனை சொல்லனும்.

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்டதற்கும் மட்டும் பதில் சொல்லுவேன் அவர் கல்யாணம் பண்ணுவதை தடுத்து நிறுத்த அட்வைஸ் கேட்டால் அதற்கு பதில் சொல்லி இருப்பேன் ஆனால் அவர் கேட்டது காதலை நிறுத்த அல்லவா?

      Delete
  3. அனுபவம்பேசிற்றோ

    ReplyDelete
    Replies
    1. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

      Delete
  4. Replies
    1. உங்களையும் சிரிக்க வைத்துவிட்டதா?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.