Monday, October 26, 2020

 நாம் வாழ்வது என்ன மாதிரியான வாழ்க்கை?
   

What kind of life do we live?



பெற்றோர்கள் பெரிய பங்களாவிலோ அல்லது சின்ன ஓட்டுவீட்டிலோ அல்லது கூறை வீட்டிலோ தனியாக வாழ்க்கை நடத்தும் இந்தக் காலத்தில். அவர்களின் மரணச் செய்தி கேட்டால் பல்லாயிரம் மைல்கள் கடந்தோ அல்லது பல மாநிலங்கள் கடந்தோ அல்லது பல ஊர்கள் கடந்தோ அல்லது பல தெருக்கள் கடந்தோ வந்து அவர்களுக்கு இறுதி சடங்களைச் செய்யும் நாம்.
 

பல விஷேச தினங்களில் அப்படிப்பட்ட பெற்றோர்களைப் பார்த்து அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரங்களைச் செலவிடுவதில்லை. அந்தத் தினங்களின் நண்பர்களைக் கூப்பிட்டு உபசரித்து மகிழ்கிறோம் ஆனால் பெற்றவர்களை அழைத்தோ அல்லது அவர்களின் இல்லத்திற்குச் சென்றோ மகிழ்விப்பதில்லை.. இப்படி ஒன்று இரண்டு பேர் அல்ல அநேகம் பேர் இப்படித்தான் செய்கிறார்கள்.


இதைப் படிக்கும் சிலராவது யோசித்துப் பாருங்கள்

நண்பர்களைப் பார்க்கும் நாட்கள் எல்லாம் நமக்கு விஷேச நாட்களாகவே ஆகிவிடுகின்றன. அதனால் விஷேச நாட்களிலாவது பெற்றோர்களை சந்தித்து அவர்களின் அந்த நாளையாவது விஷேச நாட்களாக்கி அவர்களை மகிழ்விக்கச் செய்யலாமே

இறந்த பின் வந்து பார்த்து அழுவதைவிட இருக்கும் போது வந்து பார்த்து மகிழ்வதுதானே சிறந்து... அதை இனி வரும் விஷேச நாட்களிலாவது செய்வோமா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. படிக்கக் கசந்தாலும் இதுவே உண்மை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கு நன்றி சார்
      கசப்பான உண்மைதான் என்றாலும் சிறிது நேரம் கொடுத்து சிந்தித்து பார்த்தால் இந்த கசப்பை நாம் இனிப்பாக மாற்ற முடியும். இன்னொரு கசப்பாண உண்மை என்னவென்றால் இன்றைய காலத்தில் இப்படி நாம் உடகார்ந்து பொறுமையாக சிந்திக்க முடியாதபடி சமுக இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் நம்மை செய்துவிடுகின்றன். பல செய்திகளை பார்க்கிறோம் அதற்காக நாம் உடனடியாக அரைகுறையாக சிந்தித்து கொந்தளித்து கருத்துக்கள் இடுகிறோம் அப்படி ஒரு கருத்துக்கள் சொன்னபின் வேற விஷ்யம் வந்து அந்த இடத்தை நிரப்பிக் கொள்கின்றன்.. இதனால் நாம் சொந்த உறவுகள் நட்ப்புக்கள் பற்றியோ குடும்பவாழ்க்கையை பற்றியோ சரியா சிந்திக்க நேரம் இல்லாமல் போய்விடுகிறது

      இது எனக்கும் பொருந்தும் நேற்றுதான் நான் அரசியல் பதிவுகள் ஏது போடாக் கூடாது என்று சற்று உடகார்ந்து யோசித்த போது இன்றைய பதிவு பற்றி சிந்தித்து உணர்ந்து எழுதினேன் சமுக இணையதளங்களை ஒதுக்கிவிட்டு சிந்திக்கும் போது இப்படி அபூர்வாமான சிந்தனைகள் தோன்றத்தான் செய்கின்றன்.

      Delete
  2. இதை விட என்ன வாழ்வது...? அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன் நீங்கள் தொடர்ந்வந்து கருத்துகள் சொல்கிறீர்கள் சில சமயங்களில் பதிலுக்கு நன்றி சொல்ல கூட நேரம் கிடைப்பதில்லை மன்னித்து கொள்ளுங்கள் தனபாலன் பல சமயங்களில் அதுவே கில்டியாகவும் ஆகிவிடுகிறது

      Delete
  3. கண்ணீர் மல்க வருகிறது. உண்மை தான்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரியா.... இந்த பதிவை எழுதி முடித்தது என் மனம் கனத்துபோனது

      Delete
  4. அற்புதமான உண்மை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி தனபாலனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும் நீங்கள் தொடர்ந்வந்து கருத்துகள் சொல்கிறீர்கள் சில சமயங்களில் பதிலுக்கு நன்றி சொல்ல கூட நேரம் கிடைப்பதில்லை மன்னித்து கொள்ளுங்கள் பல சமயங்களில் அதுவே கில்டியாகவும் ஆகிவிடுகிறது

      Delete
  5. நலம்தானே நண்பரே .ஹ்ம்ம் கசப்பான உண்மை .எதுவுமே அருகில் இல்லாதப்போ நம்மைவிட்டு போனபின்பே அதன் அருமை தெரியும் .

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ..... போன பின் மனசு கிடந்து அடிச்சுக்கும்...

      Delete
  6. உண்மை சகோ.. ஆனால் பணி நிமித்தம் நாட்டை விட்டுத் தூரத்திலிருக்கும் நிலையில் என்ன செய்வது? பேசாமல் ஊருக்குப் போய்விடலாம் என்றுதான் தோன்றும். அதை நடைமுறைப்படுத்துவதிலும் பல சிக்கல்... யாரைக் கேட்டாலும் இந்த வருத்தமும் குழப்பமும் தான்... யாருமே நிம்மதியாக இல்லையோ என்று சில நேரம் தோன்றும்...

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டில் இருப்பவர்களையாவது தூரம் கருதி விட்டுவிடலாம் ஆனால் உள்ளுரிலே ஏன் அதை தெருவிலே வசிக்கும் பலர் இப்படிதான் இருக்கிறார்கள் சகோ

      Delete
  7. ஒரு உண்மை நிகழ்வை பகிர்கிறேன் எநண்பனுக்கு இரு மகன்கள் நல்ல நிலியில் இருந்தான் பிள்ளைகளை மேலை நாடுகளில் படிப்பித்தான் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுஅயல்நாட்டில் இருகிறீர்களே பெற்றோருக்கு உடல் நலம் சீராக இல்லாத போது என்ன செய்வீர்களென்று கேட்டபோதுநாங்கள் மருத்துவர்களல்லவே உடல் நலமில்லாவிட்டால் டாக்டரிடம் போக வேண்டும் உடல் நலமில்லாமல் இறக்க நேரிட்டால் என்ன செய்வூர்கள் என்று கேட்ட்போது காரியம் செய்வோம் என்றனர் 111

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவை வெளிநாட்டில் இருப்பவர்களை மட்டும் மனதில் எண்ணி பதியவில்லை உள்ளுரிலும் அப்படிபட்டவர்கள் இருக்கிறார்கள் அதையும் மனதில் வைத்துதான் இட்டு இருக்கின்றேன். யாராக இருந்தாலும் விசேஷதினங்களிளாவது பெற்றோர்கலுன் நேரத்தை செலவிட வேண்டும் இல்லையென்றால் இறந்த பின் புலம்பக் கூடாது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.