Thursday, October 8, 2020

 

Want to know a little bit about earning through YouTube?

யூடியுப்  மூலம் சம்பாதிப்பது  பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

நாட்டில் எழுத்தாளர்கள் பெருகிவிட்டது மாதிரி யூடியுப்பர்களும் பெருகி சேனல்களும் இந்திய மக்கள் தொகை போலப் பெருகிக் கொண்டே இருக்கிறது.. எப்படி  பிறக்கும் குழந்தைகள் அனைத்து செல்வந்தர்கள் ஆக முடியாதோ அது போலத்தான் இந்த யூடியுப்பர்களும் வருமானத்தை அள்ள முடியாது.

#Youtube இந்தியாவைப் பொறுத்த வரை மற்ற நாடுகளைக் காட்டிலும் வருமானம் மிகக் குறைவு. இந்தியாவில் தயாரித்து இந்தியர்களே பார்க்கும் காணொளிக்கு வருவாய் குறைவு. இந்தியாவில் பதிவேற்றம் செய்த காணொளியிற்கு வெளிநாட்டினர் பார்வைகள் அதிகமாகக் கிடைத்தால் வருவாய்க் கணிசமாக உயரும்.
 

இப்படி வெளிநாட்டினர் அதிகம் பார்க்க வேண்டுமென்றால் அது ஆங்கிலத்தில் அதுவும் அவர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் கண்டென்ட் இருக்க வேண்டும் அல்லது நம் தாய் மொழியில் நாம் பகிர்ந்தாலும் அது அவர்களை அதிகம் கவரும் வகையில் கண்டென்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். சும்மா நானும் ஒரு சேனல் ஆரம்பிக்கிறேன் அதன் பின் கேமிரா முன் நின்று ஏதாவது பேசுகிறேன் என்று இருந்தால் நம் நட்பு வட்டத்தைத் தவிர வேறு யாரும் அதைச் சீண்டிப் பார்க்கமாட்டார்கள். அதுதான் உண்மை அல்லது சமுகத்தின் கடைக்கோடி வரை செல்லும் அளவிற்கு நம் பேச்சின் கருத்து இருக்க வேண்டும் அதைப் பற்றிப் பலரும் பேசி விவாதிக்கும்படியாக இருந்தால்தான் பார்வையாளர்கள் அதிகம் வர ஆரம்பிப்பார்கள் அதன் பின் வருமானமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல யூடியூப் சேனல் என்பது காணொளி சேனல் அதனால் அதில் வருபவகைகள் விஷுவலாக அதிக இருக்க வேண்டும் அப்போதுதான் பார்ப்பவர்களைக் கவர முடியும். சும்மா பேசிக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது.

பொதுவாகச் சமையல் சேனல் அதிகம் பார்க்கப்படுவதற்குக் காரணம் அதை விஷுவலாகப் பார்க்க முடிகிறது என்பதாலும் அதை எப்படி அவர்கள் பிரசண்ட பண்ணுகிறார்கள் என்பதைப் பொருத்தும் கூட்டம் அள்ளும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  இந்தியா இப்போதுதான் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது
----------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------


இரண்டு இந்திய யூடியுப்பர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இருவருக்கும் ஒரே அளவு சப்ஸ்கிரைபர்கள். வீடியோவிற்குப் பார்வைகள் வருகிறது. ஆனால் ஒருவர் பதிவேற்றம் செய்யும் காணொளியை இந்தியர்கள் அதிகம் பார்க்கிறார்கள் இன்னொருவரின் காணொளியை வெளிநாட்டினர் அதிகமாகப் பார்க்கிறார்கள் என்றால் வெளிநாட்டினரால் பார்க்கப்படும் சேனலுக்கு அதிக வருமானம் வரும்.

ஒருவர் முதலில் கொஞ்சம் செலவு செய்து வித்தியாசமான கண்டென்ட் கொண்டு தயாரிக்கும் வீடியோவிற்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அவர்களுக்கும் வருமானம் அதிகம் வரும். அதைப் பார்த்து உடனே பலரும் அதே போல ஆரம்பிக்கும் போது புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு எண்ணிக்கை அதிக அளவு இருக்காது அவர்கள் செலவு செய்யும் பணமும் நேரமும் வீணாகிவிடும்


அதிக அளவு செலவு செய்து உணவு தயாரிக்கும் கானொளியை தமிழகத்தில் முதன் முதலில் பதிவேற்றம் செய்தவர்கள் வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட்ரி ஆறுமுகம் சமையல் தான். அப்போது அவர்கள் பதிவேற்றம் செய்த அனைத்து பிரம்மாண்ட உணவு காணொளிகளுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்தன. அதிக அளவில் வெளிநாட்டினரும் பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு இந்தியக் கிராமத்தில் செய்த உணவு வகைகள் மற்றும் ஆறுமுகத்தின் வெகுளித்தனமும் நன்கு பிடித்துப் போனது.


இதைப் பார்த்த பலர் உடனே வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட்ரி-யை நகலெடுத்து அதே போல ஏகப்பட்ட அதிக அளவு உணவு தயாரிக்கும் யூடியுப் சேனல்களை உருவாக்க ஆரம்பித்தனர். முதன் முதலாக சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவர்களுக்கு நல்ல பார்வைகள் கிடைத்தன இப்போதும் கிடைக்கிறது. ஆனால் இப்போது ஒருவர் நானும் இதைப்போலப் பிரம்மாண்டமாக உணவு செய்து அதை பதிவேற்றம் செய்கிறேன் என வந்தால் அவர்களுக்குப் பார்வைகள் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் எக்கசக்க சேனல்கள் வந்துவிட்டன ஏற்கனவே எண்ணற்ற வித விதமான காணொளிகளை இவர்கள் தந்துவிட்டார்கள். இவர்களிடத்தில் இருந்து வேறுபட்டுப் புதிதாக ஒரு கண்டென்ட் கொடுத்தால் மட்டுமே வருமானம் பார்க்க முடியும் இல்லையேல் ஒவ்வொரு காணொளியிற்கும் செலவு தான் கூடிக் கொண்டே போகும்.

#Village food factory

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  'சங்கி; பிராமணர்களின் இருமுகங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இப்போது உணவு சேனல் ஆரம்பிப்பவர்கள் இப்போது கிட்டத்தட்ட எல்லாச் சானலும் அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்க ஆரம்பித்து விட்டனர். அதே சிக்கன் மட்டன் பிரியாணி, செட்டிநாடு சிக்கன், காரக்குழம்பு அய்யங்கார் ஆத்துப் புளியோதரைதான்..எதுவும் புதிதாகத் தனித்துவமாக இருக்க வேண்டும்.. இல்லையேல் பார்க்கத் தோன்றாது..

நீங்கள் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருந்தால் உங்களுக்குப் பார்வைகள் வரும் வருமானமும் வரும்.நீங்கள் ஒரு யூடிப்பராக நன்கு அறியப்பட்டு உங்களுக்கென ஒரு வட்டம் இருப்பின் நீங்கள் சோசியல் மீடியா இன்ப்ளூவன்சர் ஆகி விடுவீர்கள். பல நிறுவனங்கள் உங்களிடத்தில் அவர்களின் பிராண்டை விளம்பரப்படுத்த அணுகும். அதற்கு நீங்கள் ஒரு தொகையைப் பெறுவதன் மூலம் வருமானம் ஈட்டுகிறீர்கள். பல முன்னணி யூடிப்பர்களுக்குப் பாதி வருவாய் இதன் மூலமாகவே கிடைக்கிறது.

அதனால் சேனல் ஆரம்பிப்பதற்கு முன் எந்த வகையிலாவது பலர் அறியும் வண்ணம் உங்களை எந்த விதத்திலாவது தயார் செய்து கொண்டு கொஞ்சம் பிரபலமாகிவிட்டு அதன் பின் சேனல் ஆரம்பிப்பது புத்திசாலித்தனம்


இந்த இணைப்பை
க்ளிக் https://socialblade.com/ பண்ணி உங்களுக்குப் பிடித்த (YouTube, Twitch, Twitter, & Instagram Statistics)யூடியுப் பெயரை சர்ச் பண்ணுங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று தெரிய வரும்.

இந்தப் பதிவைப் படித்த பின் நீங்கள் சோர்ந்து போய் என்ன வருமானம் நமக்கு வந்துவிடப் போகிறது என்று நினைத்து இருந்துவிடாதீர்கள்.. தைரியமாக ஆரம்பியுங்கள் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை மாதம் ஆயிரமோ ஐயாயிரமோ பத்தாயிரமோ நமக்கு வந்தால் நல்லது தானே.. நமக்குக் கை செலவிற்காகப் பயன்படுமே அதுவும் இந்தக் கொரோனா காலத்தில் வேலைகளை இழந்து வரும் நேரத்தில்...


நண்பர்களே நீங்கள் யூடியுப் சேனல் ஆரம்பித்து இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் சேனலுக்காக இணைப்பை இணையுங்கள் இந்தப் பதிவைப் படிக்க வருபவர்களில் யாரேனும் ஒருவாராச்சும் உங்களைப் பாலோ செய்ய ஆரம்பிப்பார்கள்.. இப்படித்தான் சிறு துளி பெருவெள்ளமாக மாறும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

மேலும் இதுது பற்றி இன்னும் பல  தகவல்களை பெற எனது அடுத்து வரும் பதிவை பாருங்கள்

13 comments:

  1. இரு வலைப்பூக்களில் எழுதுவது என்பதே சிரமமாக உள்ள நிலையில் இதனைப் பற்றி நினைக்க முடியவில்லை. இருந்தாலும் பயனுள்ள கருத்துகளை அறிந்தேன். வாய்ப்பிருப்பின் சிந்திப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கண்டிப்பாக Vblog ஆரம்பத்து அதில் நீங்கள் ஆராய்ச்சி செய்யும் தகவல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் இடலாம் அது பலருக்கு பயன்படும் இன்றைய இளைஞர் கூட்டத்தில் உள்ள பலருக்கு தமிழ் பேசத்தான் முடிகிறது அவர்களால் படிக்க முடியவில்லை மேலும் உங்களின் ஆராய்ச்சி தகவல்கள் பொக்கிஷம் அது உலகத்தில் உள்ள பலருக்கும் பயன்பட சென்று அடைய ஆங்கிலத்திலும் பதியலாம்.. உங்களால் அதை செய்ய முடியும்

      Delete
  2. சூப்பர்.. எல்லோரும் லாக் டவுனில் சும்மா இல்லாம, நானும் ஒரு யூட்யூப் சானல் ஆரம்பிக்கிறேன் என எல்லோரும் vlog போட ஆரம்பித்துவிட்டார்கள்.. interest, passion, hobby தாண்டி வியூஸ்ம் காசும் மட்டுமே கண்ணில் நிற்கிறது.. நல்ல நேரத்தில், நல்லதொரு பதிவு..👍

    ReplyDelete
    Replies
    1. Vblog போடுவது தவறல்ல...வீயூவை எதிர்ப்பார்ப்பதும் தவறல்ல.... ஆனால் அதற்கான சரியான கண்டெண்ட் இருக்கவேண்டும் அதில் கவனம் செலுத்த வேண்டும் காசை எதிர்பார்த்து போடும் போது மக்களின் விருப்பத்தையும் அவர்களின் போக்கையும் அறிந்து வித்தியாசமாக அவர்களை கவரும் வண்ணம் போட்டால் காசு தன்னாலே வரும்

      Delete
  3. way2go மாதவன் சும்மா அசத்துறார். எடிட்டிங் செய்வதில் மன்னர்.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நேரம் கிடைக்கும் பார்க்கின்றேன்

      Delete
  4. பிலாக்கில் ஆரம்பித்து,ட்விட்டர் கொஞ்சம் கொறித்து இப்போது யூ ட்யூபில் இருக்கிறேன்..எனது அட்ரஸ் https://www.youtube.com/channel/UCORalJ2pShTtwUs9ppoIMfg

    ReplyDelete
    Replies

    1. தகவலுக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது அங்கு வருகிறேன்

      Delete
  5. சுற்றி சுற்றி சுற்றி... முடிவில் வலைப்பூ தான்...!

    ReplyDelete
    Replies
    1. என்னை பொருத்தவரையில் எழுத்தில் உள்ள வீச்சு பேச்சில் எளிதில் வந்துவிடாது.. அதனால் வலைப்பூதான் சிறந்தது அதற்காக இன்றைய தலைமுறைகள் காணொளியில்தான் அதிகம் நேரம் செலவிடுவதால் நம் கருத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்க யூடியுப் சிறந்ததுதான் அதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் யூடியுப் மூலம் பெரும்மளவு சம்பாதிக்கலாம் என்று கருதுவது அவ்வளவு எளிதல்ல

      Delete
  6. நடந்தவற்றை அறிந்தேன்... உடல் நலத்தை கவனியுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன கதையாகவே என் கதை இருக்கிறது.. அதனால் பிரச்சனைகள் தொடர்ந்து வந்தாலும் அதில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாகவே இது வரை இருக்கிறேன்.. இதுவரை கடவுள் என் பக்கமாகத்தான் இருக்கிறார்

      Delete
  7. தகவல்கள் நன்று. சம்பாதிக்க ஒரு வழி - சிலருக்கு மட்டுமே சாத்தியம். ஆரம்பிக்கப்படும் எல்லா யூ ட்யூப் சேனல்களும் வெற்றி பெறுவது சாத்தியமல்ல! முயற்சி செய்ய வேண்டியது மட்டுமே நம் வேலை. வெற்றி தோல்வி, பணம் ஈட்டுவது போன்றவை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

    உடல் நலனில் அக்கறையுடன் இருங்கள். நலமே விளையட்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.