Friday, October 30, 2020

 

Rajinikanth politics (Aaf-Paayil' politics)

அரசியலில் ரஜினிகாந்த் ஒரு Aaf-Paayil (ஆஃ பாயில்)

ரஜினி இரண்டு சமயங்களில்தான் ஊடகத்திற்கு வந்து தன் கருத்துகளைச் சொல்லுவார் ஒன்று தன் படங்கள் வெளி வரும் போதும், மற்றொன்று தமிழகத்தில் பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரியும் போது அந்தப் பிரச்சனைகளைத் திசைத் திருப்பவும்தான் கருத்துகளைச் சொல்லுவார்.

விபசாரிகள் யாரும் விரும்பி வந்து அந்தத் தொழிலைப் பண்ணுவதில்லை. அவர்களை வலுக்கட்டாயமாகச் செய்ய யாரவது வற்புறுத்திச் செய்து இருக்க வேண்டும் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவும் அதில் வந்து விழுந்திருப்பார்கள்..ஆனால் ரஜினி என்ற மாமனிதர் சந்தர்ப்பவாத விபச்சார அரசியல் வியாபாரியாக அவர் விரும்பிதான் இறங்கி விளையாடிக் கொண்டு இருக்கிறார்..

இந்தியாவாகட்டும், தமிழ்நாடாகட்டும் அல்லது இலங்கை ஆகட்டும், தமிழர்களுக்கு எதிரான பல்வேறு விவகாரங்களில், சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையே ரஜினி கடைப்பிடித்துள்ளார். அதுமட்டுமல்ல மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டு திரண்டு போராடும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று கருத்துகள் சொல்லி திசை திருப்புவது மட்டுமல்லாமல் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிக் கொந்தளிப்பை ஏற்படுத்துவார்.
 
தனது உரைகளில் பல இடங்களில், தமிழ்நாட்டு அரசியலின் நிலைக்குக் காரணம் தமிழ்நாட்டை ஆண்டு வந்த இரு திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாவம் அவருக்குத் தெரியவில்லை தமிழ்நாட்டைத் திராவிட கட்சிகள் சிரழித்துவிட்டன என்று தேசிய கட்சிகள் போடும் கூப்பாட்டை மக்கள் சட்டை கூடப் பண்ணவில்லை .காரணம் திராவிடக் கட்சித் தலைவர்கள் ஊழல்களில் திளைத்த போதிலும் மற்ற மாநில முதல்வர்கள் செய்ததை விட இவர்கள் மக்களுக்காகப் பல நல்லதைச் செயல்களைச் செய்துதான் இருக்கின்றனர் .அதனால்தான் தேசிய கட்சிகள் என்ன கூப்பாடு போட்டாலும் இங்கே அவர்களால் காலை ஊன்றக் கூட முடியவில்லை...

அப்படி உள்ள ஒரு கட்சிக்கு உதவுவதற்காகச் சந்தர்ப்பவாதியான ரஜினி பெரிய ஆளுமைகள் இல்லாத நேரத்தில் மறைமுகமாக மோ(ச)டி விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ரஜினி சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லாரிடமும் சிரித்துப் பழகிக் கைக்குலுக்கி நல்லுறவைப் பட்டப்பகலில் நடுவீட்டில் உட்கார்ந்து பேணி விட்டு ,நள்ளிரவு நேரத்தில் திருடர்களுக்குக் கதவைத் திறந்து விடுகிற துரோகியாகத்தான் அவரின் செயல்கள் இருப்பது போல இருக்கிறது, அப்படிப்பட்டவரிடம் நாம் மிக ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்

ஜல்லிக்கட்டுப் பிரச்சினை - அவர் இமயமலையிலிருந்தார்

கூடங்குளம்- அவர் இமயமலையிலிருந்தார்

தூத்துக்குடி- அவர் இமயமலையிலிருந்தார்

வறட்சி- அவர் இமயமலையிலிருந்தார்

சென்னை வெள்ளம்- அவர் இமயமலையிலிருந்தார்

தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் மக்கள் உங்கள் ஆதரவு தேவை என்று கேட்கும் போது- மன்னிக்கவும் நான் இமயமலையில் இருக்கிறேன் அல்லது என் வீட்டுக் கேட் பூட்டப்பட்டு இருக்கின்றன் என்பதாகத்தான் அவரின் ஆதரவு இருக்கும்

இந்தி தமிழ்நாட்டில் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது- அதைப் பற்றி என்னால் பேச முடியாது….

தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, தமிழ்நாடு மக்களுக்கு அவர் எதுவும் செய்ய முடியாது

கொரோனா நேரத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த போது அரசு தேவையானால் கல்யாண மண்டபங்களைப் பயன்படுத்தும் என்று அறிவித்த போது உடனடியாக அவரின் கல்யாண மண்டபத்தில் பாரமரிப்புப் பணிகள் நடை பெறுகின்றது என்று சாமர்த்தியமாக அறிவித்தது

அப்படிப்பட்ட ஒரு நபரை மக்கள் வரவேற்கவில்லை என்பதுதான் உண்மையான களநிலவரம். இதைக் காலம் கடந்து புரிந்து இருக்கிறார் அதனால்தான் இன்னும் ஒரு சரியான பதிலைச் சொல்லாமல் மக்களை ஏமாற்றுவது போலத் தேசிய தலைவர்களையும் ஏமாற்றிச் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்


ஒரு காலத்தில் அவரை மக்கள் முழுமையாக நம்பினார்கள் திரைப்படத்தில் நடித்தாலும் அவரை ஒரு தலைவரைப் போலப் பார்த்தனர் ஆனால் இன்று அப்படி இல்லை அவரை ஒரு சந்தர்ப்பாவதியாக்த்தான் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை

முன்னாள் முதல்வர்களைப் போன்றே ரஜினிக்குப் பலமான திரைத்துறை அடித்தளம் இருக்கலாம். தமிழ் திரைத்துறையில் மிகவும் உன்னிப்பாகப் பணியாற்றித் தனக்கென ஒரு பெயரைச் சம்பாதித்துள்ளார் ரஜினி அதை மறுக்க முடியாது. ஆனால், திரைத்துறையில் பெற்ற வெற்றியை வைத்து அரசியலில் நிச்சயம் வெற்றியை ஈட்டிவிடலாம் என்று கூறிவிட முடியாது. தமிழ்நாட்டு அரசியல் அவ்வளவு எளிதான அரசியலும் அல்ல. கற்பனை கலந்த திரைத்துறையின் தோற்றத்தை, அரசியல் நிதர்சனமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, அண்மைய சில நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன..


Honestly, the clout he had before among common Tamils was unbelievable as compared to what he is now! Truly a loser!
 
ரசித்து சிரித்து மகிழ இந்த காணொளியை பாருங்கள்

https://youtu.be/PHWg76P041c
  Rajinikanth Latest Press Meet on Political Entry | Tamil Memes




 
 
 
 

அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

  1. மக்களை இனிமேலும் ஏமாற்ற மனமில்லை...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.