Monday, October 19, 2020

 

next tamilnadu cm 2021

தமிழகமெங்கும் தாமரை மலராது என்றாலும் அடுத்த முதல்வராக அமரப் போவது என்னமோ பாஜகவைச் சார்ந்தவர்தான்


தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்கள்தான் இருக்கிறது... ஒவ்வொரு கட்சியும் அந்தத் தேர்தலை எதிர் கொள்ள அடுத்த நடவடிக்கைகளை எதிர் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்... அதன் விளைவாக அடுத்த முதல்வராக யார் எந்தக் கட்சி சார்பாக நிற்கப் போகிறார்கள் என்றும் பேச ஆரம்பித்துவிட்டனர். திமுகக் கட்சியில் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அதிமுகவின் சார்பாக யார் முதலமைச்சராக நிற்கப் போவது என்ற குழப்பம் வந்து, பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடிக்கு இடையே போட்டியும் வந்ததது. ஆனால் அந்தப் போட்டியிலிருந்து தீடிரென்று பன்னீர் செல்வம் பின் வாங்கி எடப்பாடியாருக்கு வழிவிட்டார்... இந்த போட்டியில் எடப்பாடி ஜெயித்துவிட்டார் என்று அவர் ஆதரவாளர்கள் பேசினாலும் பன்னீர் பின் வாங்கியதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய திட்டம் இருக்ககூடும்....இல்லையென்றால் இப்படி பின் வாங்க அவர் ஒன்றும் பைத்தியக்காரர் அல்ல
 


அந்தத் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் பொன்.இராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கலாம். ஆனால் அதிமுகக் கூட்டணியில் உள்ள கட்சிகள், முதல்வர் வேட்பாளரைத் தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கும் என்று கூறி இருக்கிறார், இது பாஜவின் தேசிய தலைமையின் திட்டமாக இருந்ததை வாய் தவறி ஆர்வக் கோளாறு கணமாக வெளியிட்டு இருக்கிறார்..

பாஜகவைப் பொறுத்தவரைக் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தங்களின் சுயநலத்திறகாக் எடப்படியாரை ஒரு கழுதை சுமப்பது போலச் சுமந்தது. ஆனால் அது இனிமேலும் அப்படிச் சுமக்காது. அப்படி மீண்டும் எடப்பாடியாரை சுமக்க அவர் ஒன்றும் மக்களைக் கவர்ந்த தலைவர் அல்ல, அவரை வைத்துத் தங்கள் காரியத்தைச் செய்து முடிக்க ஒரு கருவியாகவே பயன்படுத்திக் கொண்டது .இனி வருங்காலத்திலும் அவர் ஒரு சிறு கருவியாகத்தான் பயன்படுத்துமே ஒழியப் பெரிய தலைவராகக் கருதாது அதுதான் உண்மை.

_____________________________________________________________________________________________________________________________ 

அரசியலில்  'கலைஞரிடம்'  குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ன?

_______________________________________________________________________________________________________________

தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுகத் தலைவர்கள் பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டால் பெரும் அளவில் வெற்றி பெற முடியாது என நினைக்கிறார்கள்..காரணம் பாஜகவின் மீது தமிழர்கள் கொண்ட வெறுப்பு...நிலைமை இப்படி இருந்தபோதிலும் பாஜகவை ஒதுக்கிவிட்டு அவர்களால் தனித்துப் போட்டி இட முடியாது .காரணம் இவர்களின் மொத்த குடுமியும் பாஜகவின் கையில் உள்ளது... அதனால் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துத்தான் போட்டி இடும் .மேலும் இந்தக் கூட்டணியில் பாஜக குறைந்த பட்சம் 20 இடங்களில் கண்டிப்பாகப் போட்டி இடும் .அதுவும் அவர்கள் எந்தத் தொகுதியில் அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறதோ அந்த தொகுதிகளிலும் மேலும் எந்தத் தொகுதியில் நின்றால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கருதும் தொகுதியில் நின்று, கடைசியாக 10 தொகுதிகளிலாவது வெற்றி பெறுவார்கள் உதாரணமாக மயிலாப்பூர் கோயம்புத்தூர் தென்காசி போன்ற தொகுதிகளைச் சொல்லலாம்.

இந்தத் தேர்தலில் பாஜகவின் மேல் உள்ள வெறுப்பால் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தாலும் அந்த வாக்குகள் மூலம் கிடைத்த வெற்றி என்பது அவர்கள் ஆட்சியில் அமர பார்டரில் பாஸ் ஆன மாணவரின் நிலைதான் ஸ்டாலினுக்கும் இருக்கும் .அதைக் கொண்டு அவர் ஆட்சி அமைக்க முயலும் போது பாஜக நிச்சயம் முட்டுக்கட்டையைப் போடும். இந்த நிலைமை பல மாநிலங்களில் ஏற்பட்டது என்பதை அரசியலை உற்று நோக்குபவர்கள் ஒத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.

_______________________________________________________________________________________________________________

 தமிழக மக்களுக்குக் கீதா உபதேசம் செய்யக் குஷ்பு அவதரித்து வந்து இருக்கிறாரா என்ன?  _______________________________________________________________________________________________________________

இந்தச் சூழ்நிலையில் மிகக் குறைந்த இடத்தைப் பெற்ற பாஜக அவர்களின் கூட்டணிக் கட்சியான அதிமுகவிற்குக் கிடைத்த எம்.எல்.ஏக்களைச் சேர்த்துக் கொண்டு கவர்னரிடம் எங்களுக்கு ஆட்சி அமைக்க முழு பெரும்பான்மை இருக்கிறது. திமுகக் கட்சியில் வெற்றி பெற்ற பல எம்.ஏக்களும் எங்களுக்கு எங்களுக்கு ஆதரவாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள் திமுகக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்கள் ப்லருடன் பேரம் பேசி அவர்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள்.. விலை போகாத எம்.எல்.ஏக்கள் யாரும் உண்டா என்ன?

திமுகவினர் அப்படி எல்லாம் விலை போகமாட்டார்கள் என்று சொல்வது எல்லாம் அந்தக்காலம். இந்தக் காலம் மாறிவிட்டது.. அந்தக் காலத்தில் திமுகவின் மீதும் கலைஞரின் மீதும் அந்தக் கட்சியினரும் அந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் உயிரையே வைத்து இருந்தனர்... கலைஞர் தன் பேச்சால், புத்தி சாதுரியத்தால் தன் கட்சிக்காரர்களை தன் பிடியில் வைத்து இருந்தார். அந்தத் திறமை எல்லாம் ஸ்டாலினிடம் கிடையாது இன்றைய சூழ்நிலையில் ஸ்டாலினுக்காக உயிரைக் கொடுக்க எந்தத் திமுகவினரும் தயார் இல்லை என்பதுதான் உண்மை .காரணம் ஸ்டாலின் மிகச் சுயநலவாதி என்பதை அவரின் கட்சியாளர்களே நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.கட்சி தொண்டர்களை அரவணைக்கும் பாங்கும் அவரிடம் இல்லை.

மேலும் அவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பார்த்தால் ,அவருக்கு வேண்டப்பட்டவரையும் ,யார் தேர்தலுக்கு அதிகம் பணம் செலவழிக்க முடியுமோ அவர்களுக்கு மட்டுமே வாய்ப்புக்கள் தருவார். கட்சியில் ஆண்டு ஆண்டுக் காலமாக உயிரைக் கொடுத்து உழைத்தவர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படும். இதைக் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த முறையிலேயே அறியலாம்.


இப்படி அவர் பணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் சமுகச் சேவை செய்ய வருவதில்லை. தாங்கள் எப்படி இந்தப் பதவியை வைத்து சாம்பாதிக்க முடியும் என்று நினைப்பவர்களே வருவார்கள்... அப்படிப்பட்ட அவர்களைப் பாஜக மிக எளிதில் விலைக்கு வாங்கிவிடும்..காரணம் இப்படி அதிகம் பணம் செலவழித்து வேட்பாளராக வந்தவர்கள் யாரும் நியாமான முறையில் பணம் சம்பாதித்தவர்களாக இருக்க மாட்டார்கள் நிச்சயம் எங்காவது ஏதாவது ஒரு தவறை பண்ணித்தான்  இருப்பார்கள். அதைத் தேர்தலில் அவர்கள் நிற்கும் போதே மத்திய உளவுத்துறை மூலம் அந்த வேட்பாளர்கள் பற்றி அறிந்து மிரட்டி தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். ஒருவேளை அவர்கள் தவறுகலே செய்யவில்லை என்றாலும் பொய்காரணங்கள் சொல்லி அவர்கள் செய்து வரும் தொழில்கலையும் முடக்க பாஜக அரசு செய்யும்...அப்படி ஒரு நிலமை வரும் போது யார்ருதான் மனம் மாறமாட்டார்கள்.

ஏன் துரைமுருகன் கூட ஸ்டாலினுக்காகத் தான் இதுவரை சம்பாதித்து வைத்த சொத்துகளை இழக்க விரும்பமாட்டார். கலைஞர் சம்பாதித்து வைத்ததை எப்படி ஸ்டாலின் தன் பரம்பரைக்கு அனுபவிக்க வழி வகைகள் செய்வது மாதிரி. துரைமுருகனும் தன் கடைசிகாலத்தில் தான் சம்பாதித்து வைத்த சொத்தை தன் வாரிசுகள் அனுபவிக்கத்தான் நினைப்பாரே தவிர ஸ்டாலினுக்காக விட்டுத் தரமாட்டார்.

_______________________________________________________________________________________________________________

"சங்கி" பிராமணர்களின் இருமுகங்கள்

______________________________________________________________________________________________________________

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாமரை தமிழகத்தில் மலரவில்லை என்றாலும் தங்களது சதித்திட்டங்களால் பாஜகவை சார்ந்தவர்தன் முதலமைச்சராக வருவார்.

துரை முருகன் இதை நன்கு புரிந்து கொண்டதால்தான் அவர் கட்சியின் செயலாளராக ஆனபின் பேசிய பேச்சில் மிகத் தெளிவாகச்  இப்படி சொல்லுகிறார்

இந்த இயக்கத்துக்கு வந்திருக்கக்கூடிய சவால் என்பது, இந்த இயக்கத்தையே அழிக்கக்கூடிய புதிய கலாசாரப் படையெடுப்பு. இந்தச் சித்தாந்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இதுவரை நாம் சந்தித்த எதிரிகளுக்கும் இப்போது பார்க்கிற அரசியல் எதிரிகளுக்கும் ஒரு தெளிந்த வேறுபாடு இருக்கிறது . அந்த வேறுபாட்டை,`புதிய கலாசாரப் படையெடுப்பு’ என்றும் மேலும் இதற்கு முன்பு மத்தியிலிருந்தவர்கள் கொஞ்ச நஞ்சம் ஜனநாயகம் தெரிந்தவர்கள். இப்போது நம்மை எதிர்ப்பவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்றும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

இப்படி ஜன்நாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் முழு அதிகாரம் கையில் இருக்கும் போது, நீதித்துறையும் அவர்களிடம் இருக்கும் போது சாகப் போகும் காலத்தில் துரைமுருகன் கூட முழு முச்சில் இறங்கி எதிர்க்கமாட்டார் என்பது என் கருத்து .அதனால் அவர் கூட விலை போகிவிட வாய்ப்புகளும் இருக்கும் போது மற்ற எம்.எல்.ஏக்களும் எம்மாத்திரம்


மத்தியில் இதற்கு முன்பு இருந்த அரசிடம் கொஞ்சமாவது  ஜனநாயகத் தன்மை கொண்ட அரசாக இருந்தது ஆனால் இப்போது இருக்கிற அரசோ, ஜனநாயகத்தை மதிக்காத அரசாக இருக்கிறது. அதுதான் பெரிய வேறுபாடு எங்கே ஜனநாயகம் புறக்கணிக்கப்படுகிறது புதைக்கப்படுகிறது என்றால் அங்கே பாசிசம் முளை விட்டுத் தலைதூக்கி வளர்கிறது என்று பொருள்.
______________________________________________________________________________________________________________

இந்தியா இப்போதுதான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது

______________________________________________________________________________________________________________
பாசிசத்துக்கான அடிப்படைப் பொருளே கருத்தைக் கருத்தால் எதிர்க்காதீர்கள், கருத்தைத் தடிகொண்டு தாக்குங்கள் என்பதுதான்.அதைத்தான் பாஜக செய்யும் & செய்து கொண்டும் இருக்கிறது.


அதனால்தான் சொல்லுகிறேன் பாஜக் அரசுதான்  தமிழக ஆட்சி கட்டிலும் அமரும்.... இதை மாற்றவே தடுக்கவோ யாராலும் முடியாது என்பதுதான் என் கருத்து

அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : `தி.மு.க-வுக்கு வைக்கும் செக்” -

2ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்துள்ளது. இப்போது தி.மு.க புள்ளிகள் மீது மத்திய அரசின் பிடி இறுக ஆரம்பித்திருப்பது தி.மு.க மீது மத்திய அரசின் பிடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணியின் 8.60 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. மேலும் மத்திய அமலாக்க பிரிவு.கடந்த சில தினங்களுக்கு முன் அரக்கோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகத்ரட்சகனின் சொத்துக்களை இதே பெமா சட்டத்தின் கீழ் முடக்கி உத்தரவிட்டது மத்திய அமலாக்க பிரிவு. அதைத்தொடர்ந்து இப்போது கௌதம சிகாமணியின் சொத்துக்களை முடக்கியுள்ளது.  இது ஒரு ஆரம்பம் மட்டுமே

அதிமுகவில் பாஜகவீற்கு எதிராக யார் கிளம்பினாலும் இப்படி ஒரு நெருக்கடியை அவர்களுக்கும் தரும்... அதற்காகவே பலர் வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்.. இதில் எடப்பாடி,பன்னீர் செல்வம் மற்ற அமைச்சர்களும் அடங்குவார்கள்

 

6 comments:

  1. எப்படியானாலும் நாடு சீரழிந்து விடும்...?

    ReplyDelete
    Replies

    1. குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக நாடு ஆகிவிட்டது என்னதான் வேற நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்தாலும் சொந்த நாடு கண் எதிரிலே பாழாகிக் போவதை நினைத்து மனம் வெதும்புகிறது மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ இதுதான் என் மனநிலை

      Delete
  2. தமிழ் தேச அரசியல் பேசுபவர்கள் ஏன் இதற்கு ஒரு மாற்றாக இருக்க கூடாது? ஏற்கனவே பொருளாதார மற்றும் கிரிமினல் குற்றப்பின்னணி இல்லாமல் தமிழ், தமிழர் என்கின்ற உணர்வில் தமிழ் தேசீயம் பேசும் இளைஞர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்கக்கூடாது? இவர்களால் மட்டுமே பாசிச பா. ஜ. க. வை எதிர்த்து போராடிட முடியும் என்பது என் கருத்து. ஏற்கனவே களத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் பா. ஜ. க.வுக்கு விலை போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் இத்தகைய உணர்வால் பிணைக்கப்பட்ட இளைஞர்கள் சுயநலத்திற்காக பா. ஜ. க. விடம் தமிழர்களை அடமானம் வைக்கமாட்டார்கள் என நம்பலாம்.

    ReplyDelete
    Replies

    1. புதிதாக யார் வந்தாலும் அவர்களும் விலை போய்விடுகிறார்கள் என்னைக் கேட்டால் அரசியல் பங்கேற்காத மாபெரும் ஒரு இயக்கம் வளர வேண்டும் மக்களை பிரச்சனைகளுக்காக மக்களுக்கு எதிராக எந்த கட்சி நடந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்க்க வேண்டும் அப்படி செய்வதுமட்டுமே நம் நாடு முன்னேறுவதற்கான வழி....

      Delete
  3. நீங்கள் எழுதியதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் எப்போதுமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது இல்லை. காங்கிரஸ் எத்தனை அரசுகளைக் கவிழ்த்தது, பாஜக எவ்வளவு அரசுகளைக் கவிழ்த்துள்ளது என்ற கணக்கே போதுமே. அராஜகமாக குண்டர்களை வைத்து ஆட்சி செய்வதில் திமுகவை யாராவது மிஞ்ச முடியுமா?

    ReplyDelete
  4. புதியதாக ஆட்சிக்கு வருபவர்கள் உடனடியாக விலைபோக மாட்டார்கள். ஆனாலும் அவர்களும் காலப்போக்கில் கெட்டுப்போய்விடுவார்கள் என்பது உண்மையே. தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் எப்படி ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியும்? ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்கள் பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளுவது? புதியதாக ஆட்சி அதிகாரத்துக்கு வருபவர்கள் பணபலம் மற்றும் அதிகாரபலம் பெருகும்வரை துணிச்சலுடன் எதிர்ப்பவர்களை அனுசரித்தே போவார்கள். மீறுவதற்குள் அவர்களை அகற்றுவது எளிது. தற்போதைய மற்றும் முந்தைய ஆட்சியாளர்களை இவ்வளவு வளரவிட்டது தவறு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.