Friday, October 23, 2020

 

Are these leaders who do not know how to think and act even on small things?


உங்கள் பணம் உங்கள் காசு  சிறிதாவது யோசியுங்கள் கேள்வி கேளுங்கள்?


விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உடனே உயிரிழந்த குடும்பத்திற்கு எடப்பாடி தலா 2 லட்சம் தரப்படும் என்கிறார். இது போதாது என்று ஸ்டாலின் இன்னும் அதிகம் தர வேண்டும் என்கிறார். இப்படி மக்களின் பணத்தில் கைவைத்து விளையாட யார் இப்படி இவர்களுக்குத் அதிகாரம் தந்தது. இதற்காகத்தான் இவர்களைத் தலமைபதவிக்குத் தேர்ந்தெடுத்தோமா என்ன?
 


இப்படிப்பட்ட சமயங்களில் அரசு என்ன செய்யலாம் அல்லது செய்யவேண்டும்... அரசு வேண்டுமானால் இறந்தவர் குடும்பங்களுக்கு முதல் உதவியாகச் சில ஆயிரங்களைக் கொடுத்து உதவலாம்.. அப்படிச் செய்வதோடு இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டு அறிய விசாரணையை முடுக்கிவிட்டு ஒரு வாரத்திற்குள் அதற்கான காரணத்தை அறிய வேண்டும். அதன் பின் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் அதுதான் சரியான செயல்.

முதலில் இந்த விபத்து ஏற்பட்டதற்கு ஊழியரின் கவனக் குறைவா அல்லது பயிற்சிக்குறைவா பயிற்சி சரியில்லை என்றால் அதற்கு அந்த நிறுவனம்தான் பொறுப்பு அது போலப் பாதுகாப்பில் குறைபாட்டு என்றால் அந்த நிறுவனமும் அதற்குப் பாதுகாப்பு உரிமம் கொடுத்த அரசு அதிகாரியும்தான் பொறுப்பு. எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் சில சமயம் இயற்கை அந்தப் பாதுகாப்பையும் உடைத்துவிடும் அதற்காகத்தான் இந்த நிறுவனம் இன்சுரன்ஸ் செய்து இருக்க வேண்டும் இப்படிச் சம்பவங்கள் ஏற்படும் போது காப்பீடு தொகையைக் கொண்டு உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கும் அதனால் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பையும் சரி செய்ய முடியும்..

இப்படி உயிரிழந்த குடும்பத்திற்கு அந்த நிறுவனத்திடம் இருந்து அரசு பெற்றுத் தரவேண்டும். அதுதானே நியாயம்.. அல்லது முறையாகப் பாதுகாப்பு வழிமுறைகளைச் செயல்படுத்தாத நிறுவனத்திற்கு உரிமம் வழங்கிய அதிகாரிகளின் சொந்தப் பணத்திலிருந்ததாவது புடுங்கி கொடுக்க வேண்டும் அதுதான் சரியான முறை அதைவிட்டுவிட்டுப் பாதுகாப்பில்லாமல் செயல்பட்ட நிறுவனத்திற்காக அரசாங்கம் மக்கள் பணத்தைச் செலவிடுவது எந்த விதத்தில் நியாயம்.. ஏன் அந்த நிறுவனம் விபத்து இன்சுரன்ஸ் செய்யவில்லையா அப்படிச் செய்யாத நிறுவனத்திற்கு ஏன் உரிமம் தர வேண்டும். யோசிங்கடா கூமுட்டைகளா?

இப்படிச் சிறு விஷயங்களில் கூடச் சிந்தித்துச் செயல்படத் தெரியாதவர்களைத் தலைவர்களாகவும் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுத்தால் நாடு எப்படி முன்னேறும்

கொஞ்சமாவது யோசிங்கள் & கேள்வி கேளுங்கள்... காரணம் இது உங்கள் பணம் இந்த பணத்தை கொண்டு நல்ல இலவச கல்வி நல்ல ஹாஸ்பிடல் இடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க நல்ல ரோடு  இது போன்ற பலவற்றிருக்கு பயன்படுத்தலாம்தானே

அன்புடன்
மதுரைத்தமிழன்


23 Oct 2020

2 comments:

  1. நியாயமான விசயங்கள். ஆனால் நீங்கள் சொன்ன, நமது கூமுட்டைகளுக்கு இதெல்லாம் விளங்காது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.