வாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்
கொரானாவால் உலகெங்கும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து விழுந்த காலத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு அதிகம் இல்லாத சமயத்தில் இஸ்லாம் மதத்தில் உள்ள தப்லீக் என்ற குழுவினர் அரசு அனுமதியுடன் கூட்டம் நடத்தினர் அந்த நேரத்தில் அவர்களைக் கொரோனாவை பரப்ப வந்தவர்கள் என்று குற்றம் கூறி அவர்களையும் இஸ்லாம் மதத்தையும் காழ்ப்புணர்ச்சியுடன் கழுவிக் கொட்டி மக்கள் மனதில் விஷத்தை விதைத்தனர்... அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் குற்றவாளிகள் போலச் சமுக இணையத் தளங்களிலும் ஊடகங்களிலும் சித்தரிக்கப்பட்டனர்.
ஆனால் இப்போது கொரோனா பாதிப்பில் உலகின் இரண்டாம் நிலையை எட்டிப் பிடித்த இந்தியாவில் உலகப் புகழ் பெற்ற பாடகர் எஸ்.பி. பால சுப்பிரமணியம் கொரோனோ தொற்று ஏற்பட்டு அதன் விளைவாகச் சிகிச்சை பெற்று இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏதும் தப்பில்லை..
ஆனால் அவரின் இறுதிச் சடங்கிற்கு எப்படி அவ்வளவு கூட்டத்தைக் கூட அரசு அனுமதி அளித்தது. அவரின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று யார் உறுத் செய்தது... ஒருவேளை பிரபல பாடகர் பெயர் பால சுப்பிரமணியம் என்பதற்குப் பதிலாகப் பாட்சா என்று இருந்து அவருக்கும் இப்படி ஒரு மரியாதை செய்யப்பட்டால் சமுகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் இப்படித்தான் எல்லோரும் அமைதியாக இருப்பார்களா அப்படியே இருந்திருந்தாலும் சங்கிகள் இதை ஊதி பெரிதாக்கி மக்களின் மனதில் மிகப் பெரிய விஷத்தைக் கலந்து வெறுப்புணர்வை விதைத்து இருப்பார்கள்தானே
பிரபலங்களுக்காக இப்படிச் சட்டத்தைத் தளர்த்தி அதே நேரத்தில் பொது நலத்திற்கு அரசே கெடுதலை ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். இது பற்றி எந்த ஊடகங்களும் தலைவர்களும் கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? ஒருவேளை இப்படிப்பட்ட கேள்விகள் பொதுமக்கள் மனதில் எழுந்துவிடுமோ என்று எண்ணி அதைத் திசை திருப்ப SPB புதைக்கப்பட்ட மண்ணின் மேல் ஈரம் கூட. காய்ந்திருப்பதற்குள், மருத்துவமணை பில் ,,இன்ஷுரன்ஸ்,, ட்ராயஸ்கடமி ,எனப் பல கேள்விகளை SPB சரணிடமும் MG மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களிடமும் நோண்டி நோண்டிக் கேட்கும் இன்று கேட்டுக் கொண்டிருக்கிறது ஊடகங்கள்..
ஊடகங்கள் இப்படி என்றால் கேள்வி கேட்கும் தலைவர்களும் மௌனமாக இருக்கின்றனர்.இப்படிப்பட்ட தலைவர்களா உங்கள் நலனுக்காக உழைப்பார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் கூறு கெட்ட மக்களே
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி:பேஸ்புக்கில் ஒருவர் பகிர்ந்த பதிவின் கருத்தை அடிப்படையாக வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது
நியாயமான கேள்விகளே... இங்கு ஜாதிக்கொரு நீதியே...
ReplyDeleteமடத்தனம்...
ReplyDeleteகொரோனாவால் இற்ந்தவர்களின் உறவுகளுக்கே உடல் தராதவர் செயல் புருவம்வளைக்க வைக்கிறது உண்மை
ReplyDeleteஅரசு நிகழ்சசி என்ற கூட்டங்களை பற்றி என்ன சொல்வது
ReplyDeleteSP பாலசுப்பிரமணியன் ஒரு சிறந்த பாடகர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது இறைவன் அவருக்குக் கொடுத்த வரம், நல்லது தான். அதிக எண்ணிக்கையில் பாட்டுப்பாடி அதிகமாக பணம் சம்பாதித்தார் என்பதைத்தவிர அவர் இந்த தமிழ் சமுதாயத்திற்கு என்ன தியாகம் செய்துவிட்டார் என்று அவருக்கு அரசும் இத்தனை தமிழ் மக்களும் விழுந்தடித்துக்கொண்டு மரியாதை கொடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. வேலையற்ற மனிதர்கள்!!
ReplyDeleteமக்கள் மனதில் வெறுப்புணர்வை நன்கு விதைத்து விட்டார்கள். தலைவர்கள் வாக்கு போய்விடுமோ என்று வாயே திறப்பதில்லை. பெரும்பான்மையான ஊடகங்களோ ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றன. உங்கள் ஆதங்கம் அனைத்தும் உண்மை. விடைதான் தெரியவில்லை.
ReplyDelete