Sunday, September 20, 2020

 

3 idiots sanki

சீனாவை அலற வைக்கும் மோடி

வடிவேலுவும் மோடியும் மட்டும் இல்லைன்னா இணையம் தளம் ரொம்ப போரடிக்கும்


மோடிக்குத் தாடி வளர்ந்த அளவு இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து இருந்தால் இன்று இந்திய வல்லரசு நாடாக ஆகி இருக்கும்



சீனாவைத் தனது திட்டங்களால் மோடி அலற வைக்கிறார்.. சீனா அலறும் சத்தம் அமெரிக்காவில் இருக்கிற எனக்கே கேட்டது. உங்களுக்கும் கேட்டதா என்ன?(சீனாவை  மட்டுமல்ல இந்திய  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தையும் அல்லவா அலறவைக்கிறார். ஆனால் இந்த அலறல் சத்தம் சங்கிகளுக்கு மட்டும் கேட்பதில்லை)


கொரொனா காலத்தில், வேலையிழப்பினாலும், வறுமையினாலும்,  மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது,  போட்டோ ஷூட் எடுப்பதையும், விளம்பரப்படுத்திக் கொள்வதையும் கேலி செய்கின்றனர். ஆனால் மோடி அப்படிச் செய்வது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல அதனால் ஒரு சிலருக்காவது வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்து இருக்கிறார். மோடி எதையும் ஆராயாமல் செய்யமாட்டார். பாரத மாதாகீ ஜெய்


பெரியார் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

யோவ் பெரிய மனுசா இதை நீ ஹெச்.ராஜா, நாராயணன்  திருப்பதி. எஸ்.வி. சேகர் கிட்ட நேரில் போய் தைரியம் இருந்தால் சொல்லுய்யா

தமிழிசை மட்டும் இப்போது தமிழக பாஜக தலைவராக இருந்திருந்தால் மோடியின் பிறந்த நாளுக்கு கேக்கை கையில் உருட்டி மக்களுக்குக் கொடுத்து மோடியின் பிறந்தநாளை அற்புதமாகக் கொண்டாடி இருப்பார். இந்த முருகன் ஒன்றுக்கும்  உதவாக்கரையாக இருக்கிறார். ஹும்ம்

 

tamilisai cutting cake for modi



இந்தியாவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறதாம்?

ஆமாம் அரசு தரும் தகவலையும் ஊடகங்களில் வரும் தகவல்களையும் பார்க்கும் போது குறைவாகத்தான் இருக்கிறது... ஆனால் உங்கள் நண்பர் ,உறவினர் , உங்கள் ஊரில் மற்றும் தெருவில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அரசு மற்று  ஊடகங்களில் வரும் எண்ணிக்கைக்கும் மிக அதிக வித்தியாசம் இருக்கிறது அதுதான் உண்மை... இது புரியாமல் தெரியாமல் சீனா மட்டும் உண்மையான தகவலை மறைக்கிறது.. இந்தியா அப்படி எல்லாம் இல்லை என்று வேண்டுமானால் நீங்கள் பெருமை பீத்திகலாம் அந்த பெருமை உங்கள் வீட்டில் சாவு விழும் வரைக்குத்தான் பேச முடியும் அவ்வளவுதான்


 

 நானும்  ஒரு விவசாயின்னு  அய்யா ராமதாஸ் அடிக்கடி சீனெல்லாம் போடுவாரு. அதைக் கண்டும் காணாத மாதிரி அமைதியா இருக்கிறாரே...   என்னவா இருக்கும் ? அதுவா  விவசாய பிரச்சனைக்குக் குரல் கொடுத்தால் டாக்டர் அன்புமணியின் மீதுள்ள வழக்கு மீண்டும் நோண்டப் படும் என்பதால் அமைதியாக இருக்கிறார் போல



பேசுவதெல்லாம் பொய் என்றாலும் அதை மக்கள் உண்மை என்று நம்ம வேண்டும் என்று நினைக்கும் பிரதமர் திருவாளர் மோடிமட்டுமே




`எனக்கு மாநிலங்களவை பதவி கொடுத்தால், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்!' - நெகிழும் அண்ணாமலை

ஒரு சுற்று ஊருக்குள்ள போனதும் தேர்தலில் நின்றால் தோற்றுப் போய்விடுவோம் என்று கணித்துக் கொண்ட சாமர்த்தியசாலி. இந்த சாமர்த்தியம் எல்லாம் ரஜினியிடம் கிடையாது


ரஜினியின் மைண்ட் வாய்ஸ் எனக்கு ஜனாதிபதி பதவி கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்



உலகத்தின் பல நாட்டுத் தலைவர்களையும் அதிபர்களையும் தாக்கிய கொரோனா வைரஸ் மோடியை மட்டும் தாக்காதற்குக் காரணம்?

ஒரு வைரஸ் இன்னொரு வைரஸ்ஸை தாக்காது என்பதுதான் காரணம்



நீங்க மோடி எது செய்தாலும் எதிர்ப்பீர்களா?

ஆமாம் நிச்சயம் எதிர்ப்பேன்.

அவர் நல்லது செய்தால்?

அடேய் பன்றிக்கு மலம்தான் பிடிக்கும்  ஆனால் அது சந்தனத்தைச் சாப்பிட்டால் என்று கேட்பது மாதிரி இருக்குடா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

20 Sep 2020

1 comments:

  1. தாக்குதல் என்றால் இது தான்...

    பல உண்மைகள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.