சந்தோசமான 2019 ஆண்டும் அதிர்ஷ்டமான 2020

இந்தியாவில் ஒரு பெண் கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு போவதும் அமெரிக்காவில் ஒரு பெண் கல்லூரிக்குப் போவதும் பெற்றோருக்கு பெரும் கஷ்டம். என் பெண் இந்த வருடம் கல்லூரிக்கு செல்ல விற்பதால் சென்ற வருடம் முழுவதும் ஒவ்வொரு விடுமுறையும் மிக சந்தோசமாக கழிப்பது என்று நாங்கள் தீர்மானித்தோம் .அதனால் விக்கெண்ட்டுகளிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் பண்டிகை தினங்களிலும் என் மகளுக்கு பிடித்த அவளுடைய தோழிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் மற்றும் எங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர் குடும்பத்தாரையும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து விளையாடி பேசி மகிழ்ந்தோம். அதுமட்டுமல்லாமல் சென்ற வருடம் எனது சகோதரர் குடும்பத்தோடு ஊரில் இருந்து இங்கே வந்து அவருடைய மகளுடைய வீட்டில் தங்கியிருந்தார்கள் அதனால் அவர்களையும் விருந்து கொடுத்து பேசி மகிழ்ந்தோம் இதனால் 2019 அதாவது சென்ற வருடம் எங்களுடைய வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக கழிந்தது. இதற்கு முன்னரும் இது போல நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்போம் என்றாலும் இந்த வருடத்தில் வழக்கமாக கூப்பிடும் நண்பர்களை கூப்பிடாமல் யார் வருகையால் என் குழந்தை சந்தோஷப்படுவாளோ அப்படிப்பட்ட நண்பர் குடும்பத்தாரை மட்டும் அழைத்தோம். எங்களது பழைய குருப் நண்பர்கள் கூப்பிட்ட சமயங்களில் நொண்டி சாக்கு சொல்லி அவர்களை தவிர்த்தோம்

2020 ஆம் ஆண்டு உலகத்தில் உள்ள எல்லோருக்கும் மிக மோசமான ஆண்டுகளாக இருந்தது அண்ட் இருக்கின்றது .ஆனால் இந்த ஆண்டு என்னைப் பொறுத்தவரைக்கும் மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும் . அப்படி சொல்ல காரணம் உலகத்தையே பயமுறுத்திய கொரோனா என்னையும் என் மனைவியையும் பாதித்தது இரண்டு மாதங்கள் கொரோனாவுடன் வாழ்ந்து போராடி மீண்டு உயிர்ப்பித்து வந்தோம் .அதுமட்டுமில்லாமல் பல சமயங்களில் கராஜ்டோர் வழியாக வீட்டிற்கு நுழையும்போது பாதி திறந்து கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைவது என் வழக்கம் அதுபோல ஒரு நாளில் கதவு திறந்த கொண்டிருந்த் போது வாக்கிங் சென்றிருந்த நானும் என் நாய்க்குட்டியும் காராஜ்டோரை வெளியே இருந்து ஓபன் செய்தோம் அப்போது அந்த டோர் திறந்து கொண்டிருந்தபோது வழக்கம்போல பாதி திறந்து கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழையாமல் முழுவதும் திறக்கட்டும் என்று காத்திருந்தேன் டோர் பாதி திறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று கடக் என்று ஒரு சத்தம் கேட்டு அப்படியே விழுந்தது நல்லவேளை வழக்கம்போல் நான் பாதி திறக்கும் போதே உள்ளே நுழைந்து இருந்தால் நானும் என் நாய்க்குட்டியும் இன்று பரலோகத்தில் இருந்திருப்போம் ஆனால் கடவுளின் சித்தம் அப்படி இல்லை என்பதால் இரண்டு பேரும் உயிர் பிழைத்தோம் உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் 2020 மிகவும் மோஷமான ஆண்டாக இருந்த போதிலும் என்னைப் பொருத்தவரை மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இனி வரும் காலம் எல்லாம் சிறந்த ஆண்டாகவே அமைய வேண்டிக் கொள்கிறோம்...காரேஜ் விசயம் ஒரு திருஷ்டியாகவே எடுத்துக் கொள்ளவும் ..வாழ்த்துகளுடன்..
ReplyDeleteஇனிவரும் அனைத்து ஆண்டுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
ReplyDeleteஎந்நாளும் நன்னாளாக அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteவரும் எல்லா நாட்களும் சிறப்பாகவே இருக்கட்டும். வாழ்த்துகள்.
ReplyDelete