Saturday, November 14, 2020


படிக்க சிரிக்க..... ( சிறியதோர்  தீபாவளி மலர் )


இங்கு வருகைதந்த  நல்இதயங் கொண்ட  அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்  எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது  நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்

எல்லாம் கைகூடி வந்து

என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..

தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்


deepavalai malar 2020


உங்கள் இதயம் கனிந்த பதிவரின்(வேறயாரு மதுரைத்தமிழன்தான்) தீபாவளி வாழ்த்துக்கள்


கொரோனாவிற்கு இது தலைத் தீபாவளியாக இருக்கலாம் ஆனால் இதுவே அதற்குக் கடைசி தீபாவளியாக இருக்கட்டும் 

~~~~~~~~~~~~~~~~~~~~

தீபாவளியும் பெண்கள் படும் கஷ்டங்களும்


என்னங்க தீபாவளிக்கு இன்னும்  சில நாட்கள்தான் உள்ளன...  பட்சணம் எல்லாம் பண்ணனும்..

என்னது வீட்டுல பண்ணுறது கஷ்டமா? கடையிலே போய் வாங்கிக்கலமா? நோ  நோ நோ

கடையில எப்படி எந்த எண்ணெய்யில் பண்ணுகிறானோ அதுவும் இந்த கொரோனா நேரத்தில் அவங்ககிட்ட வாங்க  வேண்டாமுங்க நானே வீட்டுல பண்ணிடுறேனுங்க...

என்னது எனக்கு உதவி வேண்டும் என்றால் உங்ககிட்ட கேட்கனுமா?

என்னங்க ஜோக் அடிக்காதீங்க உங்ககிட்ட  எனக்கு வேண்டிய உதவின்னா ஒன்றே ஒன்றுதாங்க் நான் பட்சணம் பண்ணும் போது உபத்திரம் பண்ணாமல் இருப்பதுதானுங்க....

ஒரு சில நிமிடங்கள் கழித்து என்னங்க இங்க வாங்க... இந்த மேல் செல்பில் இருக்கும் அரிசிமாவை எடுத்து கொடுங்க... அப்படியே முருக்கு பிழிகிற மிஷினையும் மேலே இருந்து எடுங்க...

தாங்க்ஸ்ங்க

என்னங்க அந்த பெரிய பாத்திரத்தை எடுங்க....

அதில் நாலு கப் அரிசிமாவை போட்டுவிட்டு இந்தாங்க இந்த அரசி மாவை எடுத்த இடத்திலே வைச்சிடுங்க

என்னங்க அப்படியே  அந்த உளுந்தம் மாவை  எடுத்து கொடுத்துட்டு ப்ரிஜ்ஜில் இருக்கும் வெண்ணெய்யை எடுத்து கொஞ்சம் உருக்கி கொடுங்க

இங்க பாருங்க கொஞ்சம் உப்பை போட்டு உளுந்தமாவை போட்டு விரவி இருக்கேன்

இப்ப நீங்க என்ன செய்கிறீங்க இந்த மாவைக் கொஞ்சம் கெட்டியா தண்ணிவிட்டு பிசையுங்கள்

என்ன பிசஞ்சிட்டிங்களா அதில் இந்த வெண்ணெய்யைப் போட்டு மேலும் சிறிது பிசையுங்க

பிசைஞ்ச்சீட்டுங்களா சரி போய் கையை கழுவுங்க அதுக்குள்ள மாவுக்கு உப்பு சரியாக  இருக்கிறதா என்று பார்த்துடுறேன்

கையை நல்லா கழுவி துடைச்சீட்டீங்களா  அப்ப சரி  அந்த வடை சட்டியை எடுத்து போட்டு அதில் எண்ணெய் ஊற்றிச் சூடு பண்னுங்க.. நான் பாத்ரும் போய்யிட்டு வந்துடுறேன்

சில நிமிஷம் கழித்து முருக்கு பிழிகிற மிஷினில் மாவைப் போட்டு

என்னங்க இதை அப்படியே  சுட்ட எண்ணெய்யில் வட்டமாக வரும்படி புழியுங்க.... என்னங்க இப்படி பிழியுறீங்க கொஞ்சம் தூக்கிப் பிடித்து இன்னும் சற்று சிறிய வட்டமாக முருக்கு பிழியுங்க....

உம்ம்ம்.. அப்படித்தான் இப்ப சரியாக பிழிஞ்ச்சிட்டிங்க அடுத்ததையும் இப்படியே பிழியுங்க

என்னங்க போன் சத்தம் அடிப்பது போல இருக்கிறது கொஞ்சம் அடுப்பை பார்த்துகிடங்க ஒரு நிமிஷம் யாருன்னு பாத்திட்டு வந்துடுறேன்

என்னடி ரமாவா எப்படி இருக்க என்ன பண்னுறே.... துணியெல்லாம் எடுத்துட்டீயா... என்ன என் உதவி வேணுமா? உனக்குச் சேலை எடுக்கவா? டேய் அதுக்கெல்லாம் நேரம் இல்லைடி... என்ன சொல்லுற போனிலே நீ சேலையை லைவ்வா காட்டுறியா அதை நான் பார்த்து எப்படி இருக்கனும் என்று சொல்லனுமா... அப்பச் சரி ஒரு நிமிஷம் இருடி

என்னங்க நம்ம ராமவிற்கு என் உதவி வேணுமாம் ஜந்து நிமிசத்தில வந்துடுறேன் அடுப்பை பார்த்துகுங்க ஒகேவா

ஹேய் ராமா அந்த சேலை நல்லா இல்லடி ஏய் இந்த சேலை பரவாயில்லை ஆனா ஓரம் சரியில்லை .இதுல ஓரம் நல்லா இருக்கு ஆனால் கலர்தான் சரியில்லை ஹேய் இதுல் நல்லா இருக்குடி ஆனால் இதை கட்டினா  நீ ரொம்ப குண்டாக இருப்பது மாதிரி இருக்குடி ஹேய் அது ஒல்டு பேஷன் சேலைடி.... ஹேய் இதுல உன் உடம்பு முழுவதும் வெளியே தெரியுதுடி...இப்படிப் பேசியே 2 மணி நேரம் ஆகி கடைசியில ஒரு சேலையை அரைகுறை மனதுடன் ரமா தேர்ந்தெடுக்க  சரி ரமா எனக்கு ரொம்ப வேலை இருக்கு நான் அப்புறமா வந்து உன் கூட பேசுறேன்

என்னங்க ஒரு நிமிஷம் இருங்க இதோ நான் வந்துடுறேன். உஷ் அப்பப்பா என்ன பொழைப்பு இது

என்னங்க நான் வரேந்தானே சொன்னேன் அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா. சரி பரவாயில்லை இப்படியே இந்த எல்லா பாத்திரத்தையும் ஒழித்து டிஸ்வாசரில் போட்டுடுங்க... நான் இந்த இடத்தை சுத்தம் செய்துவிடுகிறேன்

எல்லாம் முடிந்ததும் என்னங்க இதை டேஸ்ட் பாருங்க... நான் செய்த முருக்கு நல்லா வந்திருக்கா என்று  சொல்லுங்க..  சில நிமிஷங்கள் கழித்து இப்பா பாத்தீங்களா  இப்படி நான் கஷ்டப்பட்டு பண்ணியது எவ்வவள்வு டேஸ்டாக இருக்கிறது இதுக்குதான் சொல்லுறது வீட்டுல பட்சணம் பண்ண வேண்டும் என்று

என்னங்க நான் பட்சணம் பண்ண போறேன்னதும் என்ன உதவி வேணனும் என்றாலும் கேளுங்க என்று சொன்னீங்கலே.. இப்ப சொல்லுறேன் நீங்க கடைக்குப் போய்  கடலை மாவு வாங்கி வாங்க நான் மைசூர் பாக் பண்ணனும்

அட என்னங்க எங்கே ஒடுறீங்க அட எங்க  ஒடினாலும் இரவு வீட்டுக்குதானே வரணும் அப்ப வைச்சுகிறேன்..

ஹும்ம் இவனை குத்தம் சொல்லக் கூடாது இந்த உதவாக்கரனை பெற்று எனக்குன்னு அனுப்பி வைச்சிருக்கே அதை சொல்லனும்

ஹும்ம்ம் பெண்கள் காலம் பூரா இப்படி தீபாவளி சமயத்தில் கஷ்டப்படனும் என்று தலையில் எழுதி இருக்கு  


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

deepavali malar jokes 2020


ஒரு பேஸ்புக் தோழியின் அட்டகாசம்


என்  பேஸ்புக் தோழி தினமும் பேஸ்புக்கில் இந்த ஸ்வீட் பண்ணினேன் இந்த காரம் பண்ணினேன் என்று இந்த வாரம் முழுவதும் பல படங்களை போட்டார் ஒவ்வொரு பட்சணமும் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது கடைல பண்ணுற மாதிரியாக மிக அருமையாக பண்ணி இருந்தாங்க

அவஙக் இன்று அந்த தீபாவளி பலகாரத்தை கொண்டு வந்து தந்தாங்க உடனே நான் என்னங்க நீங்க பேஸ்புக்கில் அப்டேட் பண்ணிய பட்சணத்தை எல்லாம் எங்களுக்கு தரமால் யார் கொடுத்ததையோ கொண்டு வந்து தரீங்களே இது நியாயமா என்று கேட்டேன் 

அதற்கு அவர் கணவர் சொன்னார் மதுர நம்பினால் நம்புங்க பேஸ்புக்கில் போட்டது எல்லாம் கடையில வாங்கி அதை போட்டாவாக போட்டது இதுதான் என் மனைவி செஞ்சது என்றார்..


அடப்பாவி இந்த உண்மையை இப்பவாது சொன்னிரே சரி சரி இந்த பட்சணதை எல்லாம்  நீயே வைச்சு தின்னு அந்த கடையில வாங்கிய பட்சணத்தை மட்டும் எனக்கு கொடு என்றேன்


அப்படி என்னங்க தப்பா சொல்லிட்டேன் இப்போ அவர் மனைவி என்னை பேஸ்புக்கில் ப்ளாக் பண்ணிவீட்டார்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனைவியின் பெருமை 


என்னங்க உங்கள் நண்பர்கள் எல்லாம் நான் செஞ்ச ஸ்வீட்டை கேட்டு வாங்கி போறாங்க எனக்கு ரொம்ப பெருமையாக இருக்குங்க

அடியே அவங்க வீட்டுல் எலி தொல்லைகள் அதிமாக இருக்குதாம் இந்த ஸ்வீட்டை வைச்சால் எலி எல்லாம் பயந்து ஒடிடுதாம்



வீட்டுல யாரும் இல்லை


அடியே  தீபாவளி அன்று நாம் வெளியூர் போறதா சோசியல் மீடியாவில் உள்ள எல்லா ஆப்பிலும் போட்டுவிடு

ஏனுங்க


இல்லைன்னா  நண்பர்கள் அவங்க  வீட்டுல  செஞ்ச ஸ்வீட்டிற்க்கு நம்மை சோதனை எலியாக பயன்படுத்திடுவாங்க எதுக்கும் நம்ம ஜாக்கிரதையாக இருக்கனும்

  

deepavali expectation vs reality 2020

தீபாவளி சாஸ்திரம்


தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கனும் பட்சணம் பண்ணனும் புது துணி உடுத்தனும் வெடி வெடித்து மகிழனும் என்பது  எல்லாம் சரி ஆனால் தீபாவளி என்றால் பட்டிமன்றம் கண்டிப்பா பார்க்கணும் என்று எந்த சாஸ்திரத்தில எழுதி இருக்குன்னு யாராவது சொல்ல முடியுமா?


பக்கத்தாத்து அன்புள்ளங்கள்


என்னங்க ஒரு மணிநேரத்திற்கு முன்னாலதான் நம்ம பக்த்துவீட்டு கீதா தீபாவளி பட்சணம் கொடுத்துட்டு போனாங்க அதற்கு அப்புறம் அவங்க கணவர் மாமியார் மாமனார் புள்ளைங்க எல்லாம் வரிசையா வந்து வந்து பட்சணம் கொடுத்துட்டு போறாங்களே அவங்களுக்குதான் நம்ம பேர்ல எவ்வளவு அன்பு


அடி போடி பைத்தியக்காரி... இந்த பட்சணம் எல்லாம் அந்த கீதா செஞ்சதாம் அதை மனுசன் வாயில வைப்பானா என நினைத்து அந்த வீட்டில் உள்ளவங்க அவங்களுக்கு  கிடைத்த ஷேரைத்தான் இப்படி ரகசியமாக கொடுத்துட்டு போறாங்க


 



தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை மாநில அரசு தடை செய்துள்ளது என்று வருத்தப்படுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் வீட்டில் உள்ள டிவியை ஆன் செய்து  @republic டிவி சேனைலை டியூன் செய்தால் 1000 வாலா பட்டாசுகளுக்கு இணையான சத்தங்களை நீங்கள் கேட்கலாம்.

 

இந்த சேனலில் நீங்கள் சவுண்டை ம்யூட் பண்ணி இருந்தாலும் அர்னாப் கோஸ்வாமி பேச ஆரம்பித்ததும் ம்யூட்டையும் மீறி அவரின் பேச்சு உங்களுக்கு கேட்கும்



காதலித்து கல்யாணம் பண்ணுவது மிக எளிது ஒன்று நாம் முட்டாளாக இருக்க வேண்டும் இல்லையென்றால் நம்மை காதலிக்கும் பெண் முட்டாளாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் ஆனால் எங்க விஷயத்தில் நாங்க இரண்டு பேருமே முட்டாள்கள்தான் அவளுக்கு நான் முட்டாள் எனக்கு அவள் முட்டாள் ஆக மொத்தம் இரண்டு பேரும் முட்டாள்கள்தானே


வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து அழகாக வைத்து கொள்ளும் பலர் தங்கள் மனசை அதை போல வைத்து கொள்ள முயல்வதே இல்லை


தானும் தன் குடும்பமும் சந்தோஷமாக தீபாவளிக கொண்டாடவே சுப்ரீம் கோர் நீதிபதி அர்னாப் கோஸ்வாமிவுக்கு ஜாமின் கொடுத்து விடுதலை செய்து இருக்கிறார் பாவம் அவருக்கும் குடும்பம் இருக்காதானே செய்யும் அவருக்கும் பதவியில் நீடிக்க ஆசைகளும் இருக்கத்தானே செய்யும்


டிப்ஸ் : ககர் பேஷ்ண்ட் சீனி வெடி வெடிப்பதை தவிர்க்கவும்... இந்த வெடியை பயன்படுத்தினால் சுகர் அதிகரிக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி இருக்கிறார். 


தீபாவளிக்கு பலகாரம் சுடுவதை செல்ஃபியாக படம் எடுத்தும் போடும் பெண்கள் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் செல்ஃபியாக எடுத்து போடுவார்களா?


 



பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வெட்டினால் அய்யோ பாவி பசங்க உயிர்வதை செய்யுறாங்களேன்னு ஒப்பாரி வைக்கிறாங்க ஆனால் அவங்களே தீபாவளி அன்று அமாவாசை அசைவம் சாப்பிட முடியாதேன்னு என்றும் ஒப்பாரி வைக்கிறாங்க... தமிழ்மக்கள் நல்ல டிசைனாகவே இருக்கிறார்கள்



மோடிஜி மக்களுக்கு போடும் திட்டங்கள் எல்லாம் பசித்த ஏழைக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வது மாதிரிதான்.



என்னங்க மாப்பிள்ளை கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்தாச்சு விரும்பியது எல்லாத்தையும் செஞ்சும் கொடுத்தாச்சு அப்படியும் ஏனுங்க சிடு சிடுன்னு இருக்கிறார்


அதுவா அவர்  டிவியை ஆன் பண்ணும் போதெல்லாம் : நம்பி கட்டினோம் நன்றாக இருக்கிறோம் " என்ற விளம்பரம் அடிக்கடி போட்டால் அதை பார்த்து கடுப்பு ஆகாதா என்ன

  பலரின் கைவண்ணத்தில் பூத்திருக்கும் மலர் 2013
 

ரஜினியின் திபாவளி கொண்டாட்ட மலர் 2014


 In this Deepavali, I am sending you 'CASH'

Care

        Affeection

  Smiles

Hugs

 

Wish you happy Deepavali 2016


அன்புடன்

மதுரைத்தமிழன்


 


11 comments:

  1. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பல்சுவையான பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete
  4. சுவையான பகுதிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். நீங்கள் ஏதேனும் இனிப்பு செய்ய முயற்சித்தீங்களா?

    இவ்வளவு எழுதறீங்க. இந்த ஒரு விஷயம் தெரியலையே... காலைல எண்ணெய் தேச்சுக் குளிச்சு டிஃபன் சாப்பிட்டாச்சுன்னா அக்கடான்னு டி.வி. முன்னால யாரு உட்கார்ந்திருப்பா? ஆண்கள்தான். அவங்கதான் பட்டிமன்றம்லாம் கேட்பாங்க. மனைவி சமையல்ல பிஸியா இருப்பாங்க. அப்படியே சோஃபால கொஞ்சம் கண் அயர்ந்தாலும் காதுல பட்டிமன்றப் பேச்சுகள் கேட்டுட்டிருக்கும் இல்ல.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொல்லனும் என்றால் இந்த தீபாவளியின் போது எனக்கு மனசே சரியில்லை ஏதோ எல்லாம் விட்டுப் போனது போல ஒரு உணர்வு வழக்கமாக நண்பர்கள் வீட்டுக்க்கோ அல்லது நண்பர்களை எங்கள் வீட்டிற்கோ அழைப்பது வழக்கம் இந்த கொரோனா காரணமாக யாரையும் அழைக்கவும் இல்லை நாங்களும் போகவும் இல்லை

      மத்தியானம் சாப்பீட்டுவிட்டு எல்லோரும் மிக பாராட்டுக்கிறார்களே என்று சூரரை போற்று என்ற படம் பார்த்தோம் இதையய்யா மக்கள் பாராட்டுக்கிறார்கள் என்று நொந்து போனேன் தமிழர்கள் பாராட்டும் படத்தை இனிமேல் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்

      இரவில் மகள் ஆனியன் ரவா தோசை வித் தக்காளி சட்னி கேட்டாள் அதை பண்ணிக் கொடுத்துவிட்டு பைனல் ஸ்கோர் என்ற ஆங்கில படத்தை பார்த்துவிட்டு தூங்க சென்றேன் இப்படியாகத்தான் இந்த தீபாவளி சென்றது

      Delete
  5. காணொளில பார்த்தீங்கன்னா... அவங்க பாட்டுக்கு அவங்க குளிக்கிறாங்க... மத்தவங்க அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டிருக்காங்க. இதுமாதிரி நம்ம நாட்டில் நடக்குமா?

    ReplyDelete
    Replies
    1. எங்க அவங்கபாட்டுல குளிச்சிகிட்டு இருக்காங்க உங்களை போல ஒரு குறும்புக்காரார்தான் தலையில ஷாம்புவை ஊற்றிக் கொண்டே இருக்கிறாரே

      Delete
  6. https://www.hindutamil.in/news/opinion/columns/602020-trump-refuses-to-accept-defeat.html

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.