Sunday, October 26, 2014


avargal unmaigal




வணக்கம் நண்பர்களே.... தீபாவளி மலரை சற்று தாமதமாக வெளியிடுவதற்கு மன்னிக்கவும். பல பதிவர்களிடம் பதிவுகளை எழுதி வாங்கி கடந்த வருடம் போல வெளியிடத்தான் நினைத்டு இருந்தேன். ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அதனால் நானே இந்த பதிவை எழுதி வைத்தும் அதை வெளியிட நேரம் இல்லாமல் போய்விட்டது. இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது. இந்த தீபாவளி மலர் உங்களை மகிழ்விக்கும் என்று எண்ணி வெளியிடுகிறேன். அதை படித்து தொடர்ந்து உங்கள் ஆதரவை தரமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி அன்புடன் மதுரைத்தமிழன்

ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம்



வெடி டுவிட்ஸ் :

ரஜினி : இது வெடிக்கும் ஆனா அது எப்ப வெடிக்கும் என்றுதான் யாருக்கும் தெரியாது.
ஜெயலலிதா : வேட்டு வைப்பதில் வல்லவர். தீபாவளி வேட்டு அல்ல மந்திரிபதவிக்கு வேட்டு வைப்பதை சொன்னேன்.

இந்த வருசம் மார்கெட்டில் இந்த வெடிகள்தான் பிரபலம்

மோடி வெடி : புஸ்வானம்
கலைஞர் வெடி : நமத்து போன வெடி
அழகிரி வெடி: பாம்பு வெடி
ஸ்டாலின் வெடி : சீனிவெடி குச்சிவெடி
ஜெயலலிதா வெடி: லஷ்மி வெடி ( இந்த வெடி தடை செய்யப்பட்டுள்ளது )

விஜயகாந்த் வெடி யானை வெடி
வைகோ வெடி: கண்ணீர் வெடி ( வெங்ககாய வெடி)


அரசியல் தீபாவளி ஜோக்ஸ்


மக்கள்: என்ன மோடி சாப் இந்தியாவில் உள்ள பிரச்சனைகளைய தீர்க்க ஒண்ணுமே செய்யாமல் எது கேட்டாலும் சிரிக்கிறீங்களே?

மோடி : “நான் சிரிச்சா தீபாவளி ஹோய்…”


.

சங்கு சக்கரம் மாதிரி வளைய வளைய வந்து மத்தாப்பு மாதிரி சிரிச்ச மோடிக்கு, நம்பிக்கையோடு ஓட்டு போட்டுயே, பிரச்சனைகள் எல்லாம் என்ன ஆச்சு ?

வண்ண வண்ணமாய் - புஸ்வாணமாதான் ஆச்சு



சுப்பரமணிய சாமி : எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?

மதுரைத்தமிழன் :நீங்க நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேட்டு வெச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான்.



ஜோதிஜி :கலைஞர் புஸ்வாணம் கொளுத்தி குழந்தை மாதிரி சந்தோஷப்படறாரே.. .
மதுரைத்தமிழன் :வத்தி வெக்கற வேலையாச்சே.. அவருக்கு பிடிக்காம போகுமா

Fake Firecracker


மதுரைத்தமிழன் பேமிலி ஜோக்ஸ் :


மதுரைத்தமிழன் மனைவி :"வீட்டிலே எல்லாருக்கும் புது டிரஸ் எடுத்திட்டோம். வேலைக்காரிக்கும் செலவோடு செலவா ஒண்ணு எடுத்துடுங்க."

மதுரைத்தமிழன் :வேண்டாம்மா ஏதுக்கு வீண் செலவு( மைண்ட் வாய்ஸ் "சும்மா இருடி. போன வாரம் தான் ரெண்டு பவுனுக்கு வளையல் பண்ணிப் போட்டேன்!")

மதுரைத்தமிழன் மனைவி :அவ பாவமுங்க துணி எடுத்து கொடுப்பதால் நாம குறைஞ்சு போயிடமாட்டோம்

மதுரைத்தமிழன் :சரி நீயே சொன்னப் பிறகு அதற்கு நான் மறுப்பு சொன்னா என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் ஹும்




மதுரைத்தமிழன் மனைவி :எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

மதுரைத்தமிழன் :இங்க் பாரும்மா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்க்கும் ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான் வாங்கினேன் அது மட்டுமல்ல அப்படி செய்ததானே அவ நாலு வீட்டுக்கு போய் உன் பெருமை எல்லாம் பேசுவா



மதுரைத்தமிழன் ஏண்டி என் அம்மாவை கண்டாதான் உனக்கு பிடிக்காதே அப்படி இருக்கும் போது எதுக்கு தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு கூப்பிடுற
மதுரைத்தமிழன் மனைவி :ஆங்க் தீபாவளி அப்பதான் நம்ம வீட்டுல நிறைய ஸ்விட்டா இருக்குமே
மதுரைத்தமிழன் :ஏய் அவங்களுக்கு சக்கரை வியாதி இருக்கே அது மறந்துட்டியா என்ன?

மதுரைத்தமிழன் மனைவி :இல்லைங்க அதை மறாக்காமல் இருந்ததால்தான் நான் கூப்பிடுகிறேன்.



மதுரைததமிழன் மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?"
மதுரைததமிழன் :"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடித்தாய்"



@avargal unmaigal


 
மதுரைத்தமிழனை கலாய்க்கும் தமிழ் பதிவர்கள்



மது : என்னம்மா மதுரைத்தமிழன் வீட்டில் பட்டாசு வாங்கமலே வெடி வெடிச்சாதா சொல்லுறாங்களே
மைதிலி :ஆமாங்க மதுரைத்தமிழன் மனைவி அடிச்சா அது சரவெடிமாதிரி இருக்குமாம் அதைத்தான் அப்படி நாசுக்காக சொல்லுறாங்க



வருண் : என்னங்க மதுரைத்தமிழன் யானை வெடி வெடிக்க பயந்து பொட்டு வெடி வெடிக்கிறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை.
மதுரைத்தமிழன் : பாஸ் நான் ஒன்றும் பொட்டு வெடி வெடிக்கல என் மனைவி பண்ணிய சீடையைத்தான் உடைச்சு கொண்டு இருக்கிறேன்

பதிவர் பாண்டியனை கலாய்க்கும் ஜோக்
பாண்டியன் :என்னோட மாமனாருக்குப் பிரமாண்டமா செலவு பண்ணியே பழகிப்போச்சு. ..

அப்படியா தலைதீபாவளிக்கு உனக்கு என்ன பண்ணுனார்..?
தங்கக் கம்பில மத்தாப்பு செய்து கொடுத்தாருன்னா பாரேன்

தீபாவளி தொடர்பான பழைய பதிவுகள் படிக்காதவர்கள் படிக்க
எங்கள் வீட்டில் எல்லா நாட்களும் தீபாவளிதான்
 
தமிழக அரசியல் கட்சிகளுக்கான வெடிகள் 

உங்கள் பணத்தை கரியாக்க வார இதழ்கள் வெளியிடும் மலர் அல்ல பலரின் கைவண்ணத்தில் பூத்டிருக்கும் தீபாவளிமலர்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்

இது இல்லாமல் தீபாவளியா? 

தீபாவளி விருந்துக்கு பின் உங்களுக்கு கண்டிப்பாக தேவையானது


avargal unmiagal


Once UpOn A Diwali
படித்ததில் பிடித்த தீபாவளி ஜோக்ஸ்



என் பையன் வெடியா கொளுத்திக் காசைக் கரியாக்கறhன் *

நீங்க என்ன பண்ணறீங்க.. ?

கசாப்புக்கடை வெச்சிருக்கேன் *

அப்ப நீங்க கறியைக் காசாக்கறீங்க



என்ன.. . போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏகப்பட்ட ஜோடிங்க பெட்டி படுக்கையோட வந்திருக்காங்க ?

எல்லோரும் நம்ம ஸ்டேஷன்ல லவ்மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க. தலை தீபாவளிக்கு வந்திருக்காங்க



ஏதுக்கு தீபாவளி சமயத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறீங்க ?

தீபாவளிப் பலகாரமெல்லாம் என் ஒருத்தனால செய்ய முடியாதே



அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?

அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறங்க

ஏழை குழந்தை vs பணக்கார குழந்தை



ஏழை குழந்தை : நாலு காசு சம்பாதிக்க

தன் சந்தோஷங்களை அடக்கி
கவலை முகத்துடன்
வெடி மருந்துகளுடன்
தினமும் பல மணி நேரங்கள் போராடும்
சிறு குழந்தைகள் சிவகாசியில்



பணக்கார குழந்தை :நாலு காசை கரியாக்கி

சந்தோஷத்தை வெளிப்படுத்தி
சந்தோஷ முகத்துடன்
வெடிகளுடன் விளையாடும்
சிறு குழந்தைகள் பல நகரங்களில்


Savita bhabhi Ke Sexy Solutions for Husband & Diwali



avargal unmaigal






avargal unmaigal




நண்பர்களே உங்களால் முடிந்தால் கீழ்கண்ட கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்
Tell me about that one Diwali moment that always puts a smile on your face whenever you think about it.
அன்புடன்
மதுரைத்தமிழன்



26 Oct 2014

11 comments:

  1. நல்ல தொகுப்பு நண்பரே. எங்கே ஆளை காணவில்லையே என்று கொஞ்சம் தேடினேன், லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டா வந்தீர்கள். தீபாவளி என்றதும் எனக்கு வரும் அந்த கனத்தை என் பதிவில் " நான் சிரித்தால் தீபாவளி" என்று போட்டுள்ளேன், தங்களுக்கு ஆட்சேபனை இல்லையான்றால், ,தங்கள் பதில் பின்னூட்டத்தை பார்த்து விட்டு அதற்கான தொடர்பை தருகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. தாருங்கள்..நண்பரே

      Delete
    2. ஒப்புதலுக்கு நன்றி. இதோ எந்தன்... "நான் சிரிச்சா தீபாவளி:!

      http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_22.html

      Delete
  2. ஒபாமா குடும்பம் தீபாவளி பண்டிகை போட்டோ சூப்பர்

    ReplyDelete
  3. தீபாவளி மலரை ரசித்தேன்..

    நன்றி சகோ.

    ReplyDelete
  4. தீபாவளி சிரிப்பு மலரை படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள்! ரஜினி அனிமேஷன் தீபாவளி செம! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  6. ஹாஹாஹஹஹ்....தீபாவளி மலர் சூப்பர்! தொகுப்பு! செம காமெடி வெடி! பட்டாசு கொளுத்தினாத்தான் சுற்றுப்புறம், விலங்குகளுக்கு நல்லதில்ல......இந்த வெடி அதை ஈடுகட்டிருச்சு!

    ReplyDelete
  7. தீபாவளி மலர் சூப்பர்.
    எனக்கு இதுவரை தீபாவளி என்று சொன்னவுடனே எதுவும் ஞாபகத்துக்கு வந்ததில்லை. இனிமேல் தீபாவளி என்று சொன்னவுடன் உங்களுடைய இந்த பதிவு கணிப்பாக ஞாபகத்துக்கு வரும்.

    தீபாவளி மலரை இலவசமாக பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அனைத்தும் அருமை தமிழரே.
    தீபாவளி வாழ்த்துக்கள். (ரொம்ம்ம்ம லேட் என்று நினைத்தால் இதை அடுத்த வருடத்திற்காக வைத்துக்கொள்ளுங்கள்)

    ReplyDelete
  9. கலக்கல் தீபாவளிய இப்படிக் காலம் கடந்து கொண்டாடலாமா மதுரைத்தமிழரே!
    அதுஎன்ன மைதிலி-மது வோட இப்ப எங்க தம்பி பாண்டியனையும் சேத்துட்டீங்க... (அவரு நொந்துபோயி உங்கள மாதிரி ஒரு பதிவப்போட்டுட்டு அப்பறம் எடுத்திட்டதைப் பாத்திட்டீங்களோ?) எபப்வும் புதுக்கோட்டை பத்தியே சிறப்பாகப் பேசும் மதுரைத்தமிழனுக்காக ஒரு சிவகாசி பார்சல்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.