மோடிக்கு லேடியை 
கண்டால் பயமா?
ஆண் சிங்கம்(மோடி) பெண் 
சிங்கத்தை(ஜெயலலிதா) 
எதிர்கொள்ள பயந்து கூண்டில் 
அடைத்துவிட்டு 2016ல் நான் உன்னை 
ஜெயித்துகாட்டுகிறேன் என்று 
சவால்விடுகிறது. ஆண் சிங்கம் 2016ல் 
அசிங்கமாக மாறுப் போகிறது
ஜெயலலிதா மட்டும் இந்த 
65 கோடியை கொள்ளை அடிக்காமல் 
இருந்திருந்தால் இந்நேரம் அது 
கோபாலபுரத்தின் குடும்ப 
சொத்தாக மாறி இருக்கும் # என்ன 
நான் சொல்லுறது
கேப்டன் மட்டும் 
அதிமுக கூட்டணியில் இருந்தால் 
இந்நேரம் இந்த கேஸை ஐநாவில் 
வைத்துதான் விசாரிக்க 
வேண்டும் அப்போதுதான் நியாம் 
கிடைக்கும் என்று அறிக்கை 
விட்டு இருப்பார்.# என்ன நான் 
சொல்லுறது
2016ல் பிஜேபியுடன் 
அதிமுக கூட்டணி வைத்து 
பாதிக்கு பாதி சீட்டு 
பகிர்ந்தளித்தால் தண்டனை 
பாதியாக குறைய வாய்ப்பு 
உண்டாம் # மோடி ஜோசியம்
மக்கள் மற்றும் 
திரைத்துறையினர் ஆதரவு 
பெற்றவர்கள் கொள்ளை அடித்தால் 
அது தவறு இல்லை.
தமிழக போலீஸ் 
துறையினர் மட்டும் 
தீர்ப்புக்கு எதிராக இன்னும் 
அறிக்கை வெளியிடவில்லை என்பது 
எனக்கு மிகவும் ஆச்சிரியமாக 
இருக்கிறது
மோடி அரசின் புதிய 
சட்டம் 65 கோடிக்கும் அதிகமாக 
கொள்ளையடிப்பவர்கள் 
மற்றும்அடித்தவர்கள் 
குற்றவாளிகள் அல்ல
தமிழக அரசியல் 
தலைவரின் கேஸ் கர்நாடக அரசால் 
கையாளப்படும் போது கர்நாடக 
அரசியல் தலைவர்களின் 
கேஸுக்கள் தமிழக அரசால் 
கையாளப்படுமா?
யாகங்கள் சரியாக 
சாஸ்திர சம்பிரதாயப்படி 
செய்யாததால்தான் 
ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு 
சாதகமாக அமையவில்லையா?
தண்ணிரை குறைத்து 
தரும் கர்நாடக அரசு தண்டனையை 
மட்டும் அதிகமாக தருகிறது. இது 
என்ன நியாமுங்க
ஜெயலலிதவிற்கு கிடைத்த 
தீர்ப்பை பற்றி எந்தவொரு 
கருத்து சொல்லாமல் மவுனமாக 
இருந்த கலைஞர் நமது 
குடும்பத்திற்கும் இப்படி 
தீர்ப்பு வந்தால் என்ன ஆகும் 
என்று நினைத்து 2 நாட்களாக 
சாப்பிடவில்லையாம் இதை யாரோ 
தவறாக திரைப்பட துறையினருக்கு 
திரித்து சொன்னாதால் கலைஞரே 
மவுன உண்ணாவிரதம் இருக்கும் 
போது நாமும் அது போல செய்யாமல் 
இருந்தால் தவறு என்று 
கருதியாதால்தான் அவர்கள் 
போராட்டம் நடத்தினார்களாம்.
அம்மா அறிவித்த 
திட்டங்களில் அம்மா படம் 
இருப்பதை நீக்கிவிட்டார்களா?
இந்தியாவிற்கு 
சுதந்திரம் வாங்கி தந்த 
காந்தி டாஸ்மாக் "குடி'மக்களின் 
சுதந்திரத்தை வருடம் ஒரு முறை 
பறிக்கிறார் # நியாமா இது
நல்ல வேளை 
விஜய்டிவியின் சூப்பர் 
சிங்கர் ஜட்ஜுக்களை வைத்து 
ஜெயலலிதா மீதுள்ள வழக்கை 
விசாரிக்கல அப்படி மட்டும் 
நடந்து இருந்தால் ஜெயலலிதாவை 
அழுக வைச்சு அதேயே வருஷம் 
மூழுவதும் காண்பித்து 
இருப்பார்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எனது பேஸ்புக்கிலும்  டுவிட்டரிலும்  
வந்த சின்ன சின்ன 
கருத்துக்கள்

ஹாஹாஹா !
ReplyDeleteதமிழா இன்று இந்தியாவில் க்ளீனிங்க் டே...எல்லா அரசு அலுவலத்தார்களும் ஓடியிருக்கின்றார்கள் தங்கள் சீட்டைத் துடைக்கவும், அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்...
இதெல்லாம் சரி...ஊழல் அழுக்கை எப்போது சுத்தம் செய்வாராம் மோடி கேட்டுச் சொல்லுங்க !
சூப்பர் ட்வீட்ஸ்! வாழ்த்துக்கள்! தண்ணீரை குறைத்து தரும் கர்நாடகா தண்டணையை மட்டும் அதிகம் தருகிறது! செம ட்விட்! ரசித்தேன்!
ReplyDeleteஎன்னை ஈனப்பாப்பான் என்று ஒருவர் கமெண்ட் எழுதியுள்ளார்...அதில் உங்களுக்கு உடன்பாடா...?
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்