உபயோகப்படுத்தபட்ட (Used
iPhone) ஐபோனை வாங்குபவர்களா
நீங்கள் அப்படியானல் அது
திருடப்பட்டதா என்பதை எப்படி
கண்டு பிடிப்பது?
செல்போன் உலகில்
ஐபோனுக்கு என்று ஒரு தனியிடம்
உண்டு. அது மிகவும் விலை
உயர்ந்தது என்பதால்
பலருக்கும் அது ஒரு கனவுதான்.
வசதி படைத்தவர்களோ புது புது
மாடல் வரும் போது பழையதை
விற்றுவிட்டு புது மாடல்களை
வாங்குவார்கள். வேறு சிலரோ
அதுமீதுள்ள கிரேஸால் பழையது
குறைந்த விலைக்கு வரும் போது
அதை வாங்குவார்கள். ஐபோன்
வாங்குபவர்களுக்கு மட்டும்
மல்ல திருடுபவர்களுக்கும் மிக
மதிப்பு மிக்கதாகவே
இருக்கிறது.
ஐபோனை திருடுபவர்களை
தண்டிக்க ஆப்பிள் ஒன்றும்
காவல் நிலையம் அல்ல ஆனால்
அப்படி திருடுபவர்கள் அந்த
போனை உபயோகப்படுத்த முடியாமல்
இருக்க ஆப்பிள் பல தடைகளை
ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் முதன் முயற்சியாக
2010 ல் Find My iPhone என்ற
சர்வீஸை அறிமுகப்படுத்தியது.
ஆனால் திருடர்கள் ஐபோனில்
உள்ளவற்றை முழுமையாக
அழித்துவிட்டு அதன் பிறகு
சிறிதுகாலம் பவரை ஆன்
செய்யாமல் வைத்துவிட்டு அதன்
பின் மீண்டும் அதை ஆக்டிவேட்
பண்ணி உபயோகித்துவந்தனர்.
இதனை ஆப்பிள் எளிதாக
எடுத்துக் கொள்ளாமல் மேலும்
இதனை கடினமாக்க வழிமுறைகளை
வகுத்தது. அதன் விளைவாக Activation Lock in
iOS 7 என்ற சர்வீஸை
அறிமுகப்படுத்தியது. இதன்
மூலம் ஐபோனை ஆக்டிவேட் activate
பண்ண ஆப்பிள் Apple ID யூசர்
ஐடியும் password பாஸ்வோர்டும் மிக
முக்கியம். இதை ஐபோனை
திருடுபவர்களால் அறிந்து
இருக்க முடியாது.
விஷயம் இப்படி
இருந்தபோதிலும்
திருடுபவர்கள் திருடிக்
கொண்டுதான் இருக்கிறார்கள்.காரணம்
நாட்டில் ஒன்றும் தெரியாத
அப்பாவிகள் அநேகம். அவர்களை
எளிதாக ஏமாற்றி இந்த
திருடர்கள் தாங்கள் திருடிய
ஐபோனை அவர்களிடம் விற்று
விடுகிறார்கள்.
இதனையும் தடுக்க
ஆப்பிள் நிறுவனம் மக்களுக்கு
ஒர் நல்ல வழி செய்து
இருக்கிறது. இதன் படி நீங்கள்
வாங்குவது திருடியாதா என்பதை
அறிய வாங்குபவர்களுக்கு மிக
அருமையான வழி செய்து
இருக்கிறது இதன் மூலம் செக்
செய்தால் ஆக்டிவேட் லாக் டி
ஆக்கிடிவேட் பண்ணி இருக்கிறதா
இல்லையா என்பதை அறிந்து
கொள்லாம். டி ஆக்டிவேட்
செய்யாத ஐபோனை வாங்குவது
வேஸ்ட்தான்
கீழ்கண்ட முறைப்படி
இதனை வாங்குவதற்கு முன்
பரிசோதனை செய்து கொள்ளலாம்
Checking Activation Lock Status
இதனை சோதிக்க
உங்களுக்கு தேவை IMEI (International Mobile Station
Equipment Identity இது ஒவ்வொரு (basically a unique
identifier assigned to every phone)போனுக்கும்
யூனிக்காக இருக்கும் அல்லது
போனின் சீரியல் Serial Number நம்பர்
நமக்கு தேவை
அதற்கு நாம் முதலில்
செய்ய வேண்டியது
1.Tap the Settings app
2.Tap General
2.Tap General
3.Tap About
4. Scroll towards the bottom of the screen and you'll find
both numbers
அந்த நம்பர்கள் நமக்கு
கிடைத்த பின்
2.Type the IMEI or Serial Number into the box
3.Enter the CAPTCHA code displayed
4.Click Continue.
5.The next screen will tell you whether the iPhone has its
Activation Lock feature enabled.
ஆக்டிவேஷன் லாக்
ஆப்பாக (Activation Lock is turned off) இருந்தால்
ஒன்றும் பிரச்சனை இல்லை ஆனால்
ஆக்டிவேஷன் லாக் ஆன் (Activation Lock is on)
ஆக இருந்தால் அது
திருடப்பட்டதாக இருக்கலாம்.
அல்லது லாக் ஆப் செய்ய மறந்து
இருக்கலாம். விற்பனை
செய்பவரிடம் அதை லாக் ஆப்
செய்து தரஸ் சொல்லுங்கள். அவர்
அதற்கு மறுத்தால் அதனை வாங்க
வேண்டாம்
இப்படி நாம் செய்வதால்
ஏமாறுவதில் இருந்து
தப்பிக்கலாம்
டிஸ்கி : இந்த டூல் எந்த
போலீஸ்ஸ்டேசனுடன் கனெக்ட்
செய்யப்படவில்லை அதனால்
போலீஸாரால் கிராஸ் செக் செய்ய
முடியாது.
இந்த டூல் iOS 7 & அதற்கு
அப்புறம் வந்த போனில் மட்டும்
உபயோகிக்க முடியும் இது iOS 6 or lower
ல் உபயோகிக்க முடியாது.
திருடன் உங்கள் ஐடி
பாஸ்வோர்டு அறிந்த நண்பனாக
இருந்தால் ஒன்றும் செய்ய
இயலாது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
தகவல்களுக்கு நன்றி மதுரைத் தமிழன். வாங்கப் போவதில்லை! அதிலும் உப்யோகப்படுத்திய ஐ ஃபோனை நிச்சயமாக வாங்கப் போவதில்லை!
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteபயனுள்ள பதிவு சகா:) இது டெம்ப்ளேட் பின்னோட்டம் இல்ல, நிஜமாவே சொல்றேன்:)
ReplyDeleteஉபயோகமான தகவல்களுக்கு நன்றி தமிழா! நமக்கு இங்க இதெல்லாம் விண்டோ ஷாப்பிங்க் தான்!
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDeleteபயனுள்ள தகவல்தான் , ஆனால் ஐ போன் இனிமேல்தான் வாங்கவேண்டும்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete