டேய் நான் 
மதுரைசிங்கம்டா.......எவங்கிட்ட 
விளையாடுறீங்க

நேற்று நண்பர்களிடம் 
பேசிக் கொண்டிருந்த போது 
பேச்சு என் பக்கம் 
திரும்பியது. அவங்க கேட்டாங்க 
ஏன்டா நீ உன் பொண்டிக்கு 
பயந்து பூனை மாதிரி வாழுற 
என்று கேட்டாங்க...
அதற்கு நான் , நான் 
பூனையெல்லாம் இல்லைடா. 
வீட்டில் நான் இன்னும் 
சிங்கம்தாண்டா என்று சொன்னேன்.
அவனுக அதைகேட்டு 
சிரித்தார்கள்.
உடனே நான் டேய் 
நம்பலைன்னா பக்கத்து ரூமில் 
உங்கள் மனைவி கூட 
பேசிக்கிட்டு இருக்கும் என் 
மனைவியிடம் வேணா கேட்டு 
பாருங்கடா என்று $100 பந்தயம் 
கட்டினேன்.
அவர்களும் அதற்கு 
ஒத்துகிட்டு என் மனைவியிடம் 
போய் என்னங்க உங்க கணவர், உங்க 
வீட்டுல அவர்தான் சிங்கம் 
என்கிறார் அது உண்மையா என்று 
கேட்டார்கள்
அதற்கு என் மனைவி 
ஆமாங்க எங்க வீட்டுல அவர்தான் 
சிங்கம் ஆனா நான் அந்த சிங்கம் 
மேல உட்கார்ந்து இருக்கிற 
துர்க்கா என்று சிரித்து 
கொண்டே சொன்னார்..
பயபுள்ளைங்க நான் 
சொன்னதை நம்பாததால் 
அவர்களுக்கு 100 டாலர் நஷ்டம்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல பதிவு. ரசித்து சிரித்து படித்தேன். ஆனாலும் அதில் உள்ள புகை படத்திற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று அறியாமல் கொஞ்சம்... குழம்பி கொண்டே.....
ReplyDeleteஅப்பாவிகளா! இப்படியெல்லாமா வசூலிக்கிறீங்க!!!!!
ReplyDeleteஹஹஹாஹஹ்...சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு டயலாக் விடலிங்களா
ReplyDeleteமிடியல பாஸ்:((( அவ்வ்வ்வ்:((
ReplyDeleteஐயோ..... சிங்கத்திற்கு இப்படி ஓர் அசிங்கமா?
ReplyDeleteசிங்கம்.... :)
ReplyDeleteநல்ல வசூல் தான்!
தன்மான சிங்கம் மதுரை தமிழன் வாழ்க வாழ்க. (மனதுக்குள் 'நான் நினைத்தது சரி. நம்ம மதுரை மனுசனே இல்லை')
ReplyDeleteஇரசித்தேன். சிரித்தேன்!
ReplyDeleteஇரண்டாவது வரியில் உள்ள தட்டச்சுப் பிழையை திருத்திவிடுங்களேன்.
நல்ல கற்பனை! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDelete