புத்தகம்
போடுவது ஒன்றும் பெரிய
விசயமில்லை..(பதிவர்கள்
போட்ட புத்தகம் அல்ல மதுரைத்தமிழன்
போட்ட புத்தகம்)
அந்த
காலத்தில் ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கொண்டால்
விசிட்டிங்க் கார்டு(பிஸினஸ்
கார்டு)
கொடுத்து
தங்களை அறிமுகம் செய்து
கொள்வார்கள் ஆனால் இப்போது
தாங்கள் போட்ட புத்தகங்களை
கொடுத்து அறிமுகம்
செய்கிறார்கள்.காரணம்
இந்த காலத்துல புத்தகம்
போடுவது ஒரு பேஷனாக போய்விட்டது
போல..
முன்பு
புத்தகம் எழுதி புத்தகம்
போட்ட எழுத்தாளர்கள் இப்போது
பதிவுகள் எழுதி போட ஆரம்பித்துவிட்டனர்
அதனால் அவர்களுக்கு போட்டியாக
பதிவு எழுதும் பதிவர்கள்
எல்லாம் இப்போது புத்தகம்
போட ஆரம்பித்து இருக்கின்றனர்
கடந்த
சில வாரங்களுக்கு முன்னால்
சிறந்த ஆசிரியரும் பேச்சாளரும்
பதிவருமான முத்துநிலவன்
அவர்கள் மூன்று புத்தகங்ளை
வெளியிட்டார் அதன் பின் நடந்த
பதிவர் திருவிழாவில் பலரும்
புத்தகம் வெளியிட்டானர்
இதற்கு முன்பும் பல பதிவர்கள்
புத்தகங்களை வெளியிட்டனர்.
இதை
எல்லாம் பார்த்த என் மனசும்
துடிக்க ஆரம்பித்தது
அதுமட்டுமல்லாமல் நான்
புத்தகம் ஏதும் போடவில்லை
என்றால் இந்த பதிவுலகம் என்னை
ஒதுக்கிவிடும் என்பதால்
நானும் புத்தகம் போடுவதற்கான
முயற்சியை தொடங்கினேன்..
அதற்க்காகவே
நான் பதிவுலகில் இருந்து
சிறிது ஒதுங்கி இருந்து
புத்தகம் போடுவதற்கான ஆயுத்த
வேலையில் ஈடுபட்டு புத்தகம்
ஒன்றை ரெடிபண்ணினேன்.
நான்
தமிழகத்தில் இருந்திருந்தால்
பதிவர் விழாவில் போட்டு
இருந்திருப்பேன் அப்படி
இல்லாததால் நான் இங்கு இருக்கும்
எனக்கு தெரிந்த நண்பர்களையும்
பதிவர்களையும் கடந்த ஞாயிறு
அன்று டின்னருக்கு அழைத்து
அதில் அந்த புத்தகத்தை போட
ஏற்பாடு செய்து இருந்தேன்
வந்தவர்கள்
முதலில் விருந்து உண்டு
அதன்பின் என் எழுத்துக்களை
பாராட்டி பேசினார்கள் அவர்கள்
பேசி முடித்த பின் நான் மாடிக்கு
சென்று போட வேண்டிய புத்தகத்தை
எடுத்து எல்லோரும் ஆவலுடன்
எதிர்பார்த்து இருக்கும்
போது அந்த புத்தகத்தை மாடியில்
இருந்து கிழே தொப்பு என்று
போட்டேன் அதை பார்த்த எல்லோரும்
இவன் வித்தியாசமாக புத்தகம்
போடுகிறானே என்று நினைத்து
அந்த புத்தகத்தை முதலில்
எடுக்க ஒவ்வொருவரும் அடித்து
கொண்டனர்.
கடைசியாக
அந்த புத்தகத்தை எடுத்தவர்
அந்த புத்தகத்தை பார்க்கும்
போது Let's
Do Nothing by Tony என்று
இருப்பதை பார்த்து டோனி என்ற
பெயரில் நீதான் எழுதிருக்கிறாயா
என்று அப்போதும் அப்பாவியாக
கேட்டார்கள்.
இவங்களை
எல்லாம் என்னத்த சொல்ல வாயில
நல்லா வருது....
நண்பர்களே
நான் புத்தகம் எப்படி போடுவது
என்பது பற்றிதான் சொல்ல
வந்தேன் எப்படி வெளியிடுவது
என்பது பற்றி அல்ல.....
ஏய்
யாருப்பா கல்லை தூக்குவது
கல்லால் அடிச்சால் என்னால்
தாங்கமுடியாது அதனால் உங்கள்
கருத்துகளால் என்னை அடிச்சிட்டு
போங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஏற்கனவே எங்கள் blogல் கவுதமன் சார் புத்தகம் எழுதுவது எப்படி என்ற வீடியோ பார்த்திருப்பதால் நான் தப்பித்தேன். மத்தவங்க கதி என்னாவறது ????? க்ர்ர்ர்ர்ர்..........."பூரிக் கட்டை உடையும் வரை உங்களை அடிக்குமாறு", Mrs.மதுரை தமிழனை கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteநல்லவேளை எனது உடம்பு சுக்கு நூறா போகும் வரை அடிங்க என்று சொல்லாமல் விட்டுடிங்க நல்லா இருங்க நண்பரே
Deleteவழக்கம்போல் உங்கள் பாணியில் எழுதி சிரிக்கவைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரண்டு பேரையாவது சிரிக்க வைத்தால் நல்லதுதானே ஏதோ என்னால் முடிந்தது
Delete// அந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் விசிட்டிங்க் கார்டு(பிஸினஸ் கார்டு) கொடுத்து தங்களை அறிமுகம் செய்து கொள்வார்கள் ஆனால் இப்போது தாங்கள் போட்ட புத்தகங்களை கொடுத்து அறிமுகம் செய்கிறார்கள்.காரணம் இந்த காலத்துல புத்தகம் போடுவது ஒரு பேஷனாக போய்விட்டது //
ReplyDeleteநீங்கள் மாடியிலிருந்து புத்தகத்தை போட்டது நகைச்சுவையாக இருந்தாலும் புத்தகம் வெளியிடுவது சம்பந்தமாகவும் வலைப் பதிவர்கள் புத்தகம் வெளியிடுவது பற்றி விளக்கமாகவே சொன்னீர்கள். இதில் எத்தனைபேர் கையைச் சுட்டுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் எழுத்தாளர்கள் தாங்கள் வெளியிடும் புத்தகங்களை அன்பளிப்பாகவே கொடுத்து விடுகிறார்கள். நீங்கள் சொல்வது போல விசிட்டிங் கார்டாக மாறி விட்டது.
எனக்கு தெரிந்து கையை சுட்டுக் கொள்ளாமல் புக் போட்டவர்கள் ஜோதிஜி, முத்துநிலவன், பாலகணேஷ் மட்டுமே
Deleteஉண்மைதான் நண்பா. என் புத்தகங்களை வெளியிட்டவர் பிரபல வானம்பாடிக்கவிஞரான சிவகங்கை மீரா அவர்களின் மகனான கதிர்மீரா. ஒரே நாளில் -வெளியிடட அன்று - 300செட் விற்று 75,000ரூபாயைக் கொண்டுபோய்க் கொடுத்தால், அதில் அவர் விழா நடத்திய செலவில் தன்பங்கு என்று என்னிடமே ரூ.10,000ஐத் திரும்பக் கொடுத்துவிட்டார். அதன் பின்னர் இப்போது கையில் புத்தகம் இல்லாமல் அடுத்த -திருத்திய பதிப்பு- போடப் போகிறார்! நமக்கு லாபமும் இல்லை, நட்டமும் இல்லை. புத்தகம் எழுதியவர் என்னும் பெயர் மட்டுமே! அது போதுமே!
Deleteகடவுளே, இந்த மதுரைத் தமிழனின் தொல்லைக்கு ஒரு அளவு இல்லையா!!!!!
ReplyDeleteஇப்படி புலம்பினாலும், சிரித்து விட்டேன்.
நீங்கள் ஆஸ்திரேலியாவில் போய் ஒளிந்து கொண்டாலும் வந்து தொல்லை தருவேன் விட மாட்டோம்ல
Deleteநீங்க இப்போதான் இந்த மாதிரி புத்தகம் போடறீங்க! நாங்கல்லாம் ஒண்ணாப்பு படிக்கும் போதே இப்படி தூக்கி போட்டுத்தான் வளர்ந்தோம்! ஹாஹாஹா!
ReplyDeleteஅட நீங்களும் என்னை மாதிரிதான் போல
Deleteஹஹ்ஹஹ! கீதா இதைத் துளசிக்கு வாசிக்கும் போதே துளசி சிரிக்க.....கீதா வாசிக்க முடியாமல் சிரிக்க... ஐயோ ...உங்க லொள்ளு தாங்கலைப்பா!
ReplyDeleteஹீஹீஹீ
Deleteதல:
ReplyDeleteபுத்தகம் போடுவது எளிதுதான். வலைதள்த்தில் நம் சிந்தனைகளை எல்லாம் ஏற்கனவே எழுதியாச்சு இல்லையா? ஒரு நல்ல எடிட்டரைப் பிடிச்சு, சொற்குற்றம், பொருட்குற்றம், எழுத்துப்பிழை எல்லாவற்றையும் சரி செய்துவிட்டால் புத்தகம் போடுவது எளிதுதான்.
ஆனால் அதை விற்பதுதான் கடினம். :) ஒரு 10,000 பிரதிகள் விற்றால் நீங்க சாதனை எழுத்தாளர் வரிசையில் வந்துடுவீங்க. :)
பிரபல எழுத்தாளர், சாரு நிவேதிதாவே இப்படி எழுதுகிறார்..
****நானோ எழுத்தாளன். எழுத்தாளனுக்கு இங்கே போதுமான ஊதியம் கிடையாது. பல பத்திரிகைகளில் காசே கொடுப்பதில்லை. புத்தகமும் ஆயிரமோ ரெண்டாயிரமோ தான் போகிறது. ராயல்டி பணத்தில் டூத் பேஸ்ட் வாங்கலாம். - See more at: http://andhimazhai.com/news/view/charu-11.html#sthash.OnIuYdO7.dpuf***
அதிக அளவில் விற்ற தமிழ் புத்தகம் திருக்குறளாக மட்டுமே இருக்கும்
Deleteதிருக்குறளும் பாரதியார் கவிதைகளும்தான் தமிழில் விற்றுக்கொண்டே இருக்கும் நூல்கள்.
Deleteஎத்தனைபேர் எத்தனை பதிப்புகள் போட்டிருக்கிறார்கள் என்னும் கணக்கே இல்லை! பலநூறு பதிப்புகள்.. திருக்குறளுக்கு மு.வ.அவர்கள் எழுதிய உரைநூல் ஒன்றுமட்டுமே நூறு பதிப்புகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது... அடுத்து கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் வரும்...
தமிழரே.... உங்களைத் தவிர வேறு யாருமே இப்படி புத்தகம் போட மாட்டார்கள்.
ReplyDeleteஇதற்காக பார்ட்டி வேற..... கலந்துகிட்டவங்க என்ன ”போட்டாங்க”?
நம்ம வீட்டில் பார்ட்டிக்கு வந்தவங்க சரக்கை போடுவதை தவிர வேற என்ன போடுவாங்க
Deleteஆமா புத்தகத்தை இப்படி தூக்கி போட எப்பிடி மனசு வந்ததுச்சு ம்..ம்..ம்.. இதற்குள்ள பாட்டி வேறயா. இப்பதானே புரியுது உங்க மனைவி பூரிக் கட்டை ஏன் வச்சிருகிறாங்க என்று அவங்க தான் பாவம் என்று புரிஞ்சு போச்சு. ஹா ஹா ரசித்தேன் சிரித்தேன் சகோ வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteபாத்தீங்களா அடிவாங்கி என் மேல் பாவம் காட்டாம அடிக்கிறவங்க மேல பாவம் காட்டுறீங்க இது நியாமே இல்லைங்க
Deleteஇப்படித்தான் போட்டிருப்பீங்க என யோசிக்க முடிந்தது மதுரைத் தமிழன்.
ReplyDeleteமேலும் பல புத்தக்ங்களைப் போட எனது வாழ்த்துகள் என்று சொல்லப் போவதில்லை - புத்தகம் வெளியிட எனது வாழ்த்துகள்.
வெங்க்ட் = ஸ்மார்ட் இல்லைன்னா டில்லியில் குப்பை கொட்ட முடியுமா என்ன
Deleteநன்றி
ReplyDeleteஇதுபோல சிகரெட்டை நிறுத்திய கதை தெரியுமா? (குமுதத்தில் வந்தது)
ReplyDeleteதிடு திப்புன்னு பாத்ததும்.. ஆட்ட கடிச்சி .. மாட்ட கடிச்சி.. என்ற பழமொழி நினைவிற்கு வந்தது..
ReplyDelete