உங்கள் வீட்டில்
உதவாக்கரை புள்ளை இருந்தால்?
& விஜய்
உண்மையிலே லூசா அல்லது லூசு
மாதிரி பேசுறாரா?
செய்தி :கோயம்புத்தூருக்கு
வந்திருந்த உன்னிகிருஷ்ணனின்
குடும்பத்தினரைப் பார்த்த
நடிகர் விஜய் கண்ணீர் மல்க
ஆறுதல் கூறினார்.
அதுமட்டுமன்றி, ரூ.3 லட்சம்
நிதியுதவி அளித்தார். "எதிர்காலம்
குறித்து கவலை வேண்டாம், நான்
இருக்கிறேன்" என்று
ஆறுதலுடன் கூடிய உறுதி
அளித்திருக்கிறார் விஜய்.
அடங் ஒக்க மக்கா இப்படி
ஒரு பிள்ளை எனக்கு இருந்தால்
நானே கிழே தள்ளிவிட்டு .3
லட்சம் வாங்கி இருப்பேனே...
இதன் மூலம் நான்
மக்களுக்கு சொல்ல விரும்புவது
உங்கள் வீட்டில் உதவாக்கரை
புள்ளை இருந்தால் இப்படி ஒரு
நடிகனின் படம் வரும் போது
அவரின் கட்டவுட்டுக்கு பால்
ஊற்றி சொல்லி உங்கள்
உதாவாக்கரை புள்ளை கட் அவுட்
மேலே அவன் ஏறி நிற்கும் போது
அந்த கட் அவுட்டை
கிழிலிருந்து ஆட்டி அவனை
விழச் செய்து அதன் பின்
நடிகரிடம் இருந்து பணம்
சம்பாதிக்கலாமே எப்படி நம்ம
ஐடியா
இன்றைய தமிழ் ஹிண்டு பேப்பரில் விஜய் பேசியதாக வந்த செய்தியை பார்த்து நான்
கிறுக்கியது
விஜய் உண்மையிலே லூசா
அல்லது லூசு மாதிரி பேசுறாரா?
செய்தி : கோவை
ஹிந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரியில் கத்தி பட வெற்றி
விழா ( வெற்றி
விழா என்பது 100 நாள் அல்லது ஒரு
வருடம் ஒடிய படத்தைதான்
சொல்லாம் இப்ப எல்லாம் ஒரு
வாரம் ஒடினாலே வெற்றி படம்
என்று சொல்லூறாங்கப்பா)
மற்றும் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா நேற்று
நடைபெற்றது. நிகழ்ச்சியில்
இயக்குநர் முருகதாஸ்,
இசையமைப்பாளர் அனிருத்,
நடிகர் சதீஸ் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். விழாவில்
நடிகர் விஜய் பேசியது:
கத்தி பட வெற்றி
சந்தோஷத்தில் உங்களது கல்லூரி
காலத்தில் உங்களை எல்லாம்
சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி.
கத்தி, என்னோட
கேரியரில் ரொம்ப ரொம்ப
முக்கியமான படம். உணவு, உடை,
இருப்பிடம் ஆகிய
முக்கியமானவற்றில்
முதன்முதலாக உள்ள உணவைத்
தருகிற விவசாயப் பிரச்சினையை
சொன்னதை நினைத்துப்
பெருமைப்படுகிறேன்.(
பிரச்சனைக்கு தீர்வு சொல்லி
இருந்தா பெருமை படுவதில்
அர்த்தம் உண்டு ஆனா
பிரச்சனையை சொல்லுவதில் இவரு
பெருமைபடுகிறாராம் என்ன
கொடுமையப்பா)
விவசாயிகள் படும்
துயரம் குறித்து கேள்விப்
பட்டிருக்கிறோம். ஆனால்,
படத்தில் நடிக்கும் போதுதான்
இது படம் இல்லை, பாடம் என்பதைத்
தெரிந்து கொண்டேன்.(
ஆமாம்ய்யா உங்க படத்தை
பார்த்த பிந்தான்
எங்களுக்கும் பாடம் புரிந்தது
இப்படி உங்க நடிப்பை
பார்ப்பதுதான் பெரும்
பிரச்சனை என்பது)
எத்தனை விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டார்கள்.
எத்தனை பேர் வாழ்வை இழந்து
வேறு தொழிலுக்குச்
சென்றுவிட்டார்கள், எத்தனை
பேர் வேறு நாட்டுக்குச்
சென்றுவிட்டார்கள் என்பதை
புரிந்து கொள்ள உதவிய படம். (
பாருய்யா நம்ம அண்ணன்
விஜயகாந்த் மாதிரி கணக்கு
எல்லாம் சொல்லுறாரு)இந்த
வாய்ப்பை கொடுத்த
முருகதாஸுக்கு நன்றி சொல்ல
கடமைப்பட்டுள்ளேன்.(
முருகதாஸ் இப்படி ஒரு படம்
பண்ணலைன்னா இவருக்கு விவசாயி
பிரச்சணையே தெரிந்து
இருக்காது அப்படி பட்ட இவர்
முதலமைச்சரா வர
ஆசைப்படுகிறார் என்னத்த சொல்ல
)
பசியுடன்
இருப்பவருக்கு மீன் துண்டுகளை
கொடுப்பதைக் காட்டிலும் மீன்
பிடிக்க கற்றுக் கொடுக்க
வேண்டும் என்பது நாம்
கேள்விப்பட்ட பழமொழி.
என்னைப் பொறுத்தவரை மீன்
பிடிக்க கற்றுக் கொடுப்பது
மட்டும் இல்லாமல், மீன்
பிடிப்பதற்குத் தேவையான
வலையையும் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் ஏழை மக்களின்
வாழ்வு உயரும்.(
விஜய் அண்ணா ஒன்றை
மறந்திட்டீங்க... வலையை மட்டும்
கொடுத்தால் போதாது அவன்
மீன்பிடிக்க ஒரு குளத்தையும்
நாம் கொடுக்க வேண்டும்
அதிலும் மீன் இருக்கும்
குளமாக இருக்க வேண்டும் )
கத்தி படத்தில்
நச்சுன்னு ஒரே வரியில் சொன்ன
டயலாக் எனக்கு மிகவும்
பிடித்துவிட்டது. அதாவது, "நாம்
பசிக்கு சாப்பிட்டது போக மீதி
இருக்கிற உணவு
அடுத்தவங்களுக்கு". நாளைக்கு
சேர்த்து வைப்பதை விட
ஏழைகளுக்கு கொஞ்சம் ஹெல்ப்
பண்ணினா குறைந்தா போய்விடப்
போகிறோம்.(
விஜய்ண்ணா உங்க பேங்க்
அக்கவுண்டை ஜாயின்ட்
அக்கவுண்டா மாற்றி
விவசாயிகளின் அனைத்து
பெயரையும் அதில் சேர்த்து
கொள்ளுங்கண்ணா )
ஓர் ஊரில் நிறைய
மருத்துவமனை இருந்தால் அந்த
ஊரில் ஆரோக்கியம் குறைவாக
இருக்குன்னு அர்த்தம்( அண்ணா
மக்கள் தொகை நிறைய இருக்கும்
நாடுகளில் மருத்துவமனை அதிகம்
இருப்பதுதான்
ஆரோக்கியத்திற்கு நல்லது
அப்போதுதான் தகுந்த சிகிச்சை
உடனடியாக அளித்து மக்கள்
அனைவரும் ஆரோக்கியாமாக இருக்க
முடியும்). கடன்
அள்ளி அள்ளி கொடுத்தால்
ஏழைகள் அந்த ஊரில் அதிகம்
இருக்காங்கனு அர்த்தம்.(
அண்ணா கடன் அள்ளிக்
கொடுத்தால் அந்த ஊர்
வளர்ச்சியை நோக்கி அடி
வைக்கும் என்பதுதான் உண்மை
அதனால்தான் இந்திய நாடு கூட
உலகவங்கியிடம் கடன்
வாங்குகிறது அப்படி
வாங்குவதினால் இந்தியா
ஒன்றும் ஏழை நாடுஅல்ல ஆமாம்
நீங்க எந்த காலேஜில்
படித்தீங்கன்னா) எப்போது
இந்த நலத் திட்டங்கள்
கொடுப்பது
நிறுத்தப்படுகிறதோ அன்றுதான்
இந்தியா வல்லரசு நாடாகும்
என்றார்.( அட
யாரோ உங்களுக்கு தப்பா பாடம்
நடத்தி இருக்காங்க அண்ணே இலவச
திட்டங்களை நிறுத்தினால்
நல்லது நலத் திட்டங்களை
நிறுத்துவது மிக தவறு நல்லரசு
மக்களுக்கு நலத்திட்டங்களை
செய்து கொடுக்கும். இதுதான்
உண்மை....இந்தியா வல்லரசாக ஆக
வேண்டாம் அது நல்லரசாக
இருந்தாலே போதும். நீங்கள்
சொன்னபடி வல்லரசாக அது
பொல்லாத அரசாக ஆனால்தான்
முடியும்) (இதைப்படிக்கும்
போது மனதில் தோன்றியது அண்ணன்
உண்மையிலே லூசா அல்லது லூசு
மாதிரி பேசுறாரா என்றுதான்)
கொசுறு :
அன்புடன்
மதுரைத்தமிழன்
தமிழா.. இன்றும் நன்றாக நினைவிற்கு வருகின்றது. இவரின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற படத்திற்கான விமர்சனத்தில் (குமுதம் என்று நினைக்கின்றேன்), இட் எல்லாம் ஒரு முகம் என்று இதை வேறு நாம் பார்க்க வேண்டுமா? என்று எழுதி இருந்தது. மற்றும் அதே விமர்சனத்தில் தகப்பன் ஒரு இயக்குனர் என்றே ஒரே காரணத்தை தவிர இவர் அருமிகம் ஆவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று எழுதி இருந்தது. அதை படித்த உடன் நான் கூட யோசித்தேன். அடே, இந்த விமர்சனம் ஒரு தனி மனித தாக்குதல் போல் இருகின்றதே என்று. என்னை பொறுத்தவரை, Vijay has got pretty solid head on his shoulders, but his father is messing it up for him. தந்தையால் நொந்தவர்கள் என்று ஒரு பதிவு எழுத இருக்கின்றேன். அதில் முதலில் இவர், ரெண்டாவது டென்னிஸ் வீரர் பேஸ், மூன்றாவது ஒரு தந்தை, அவர் பேசினா கூடும் சந்தை, குடிக்க மாட்டார் மொந்தை, இவர் கையில் நீ மாட்டினா' நொந்த"
ReplyDeleteஹஹாஹஹ் நண்பரே கடைசியா சொன்னது யாரைன்னு தெரிஞ்சு போச்சு! விஜையை மெஸப் செய்வதே அவர் தந்தைதான்....சும்மானாலும் இருந்த விஜயை அரசியலில் இழுக்கறது.....அதெல்லாம் சரி ஆனா விஜய் என்ன யோசிக்கின்றார்? அவரது தனிப்பட்டக் கருத்து என்ன என்று தெரியவில்லையே.....விஜயின் மைன்ட் வாய்ஸ் அவரது அப்பாவா...இல்லை மௌத் பீஸ்?
Deleteஇந்த விஷயத்தில் நடிகர்களை லூசு என நீங்கள் சொல்வதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. அவர்களது படங்கள் / கட்அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள்தான் லூசு, முட்டாள் எல்லாம். ஒரு நடிகனை, அவன் நடித்த படத்தை ரசிக்கலாம். அதற்காக அவனை கடவுளாக நினைப்பவன் என்னை பொறுத்தவரை நிச்சயம் உதவாக்கரைதான்
ReplyDeleteஎன்னத்தை சொல்வது? விசு அவர்கள் சொன்னது போல இவரெல்லாம் ஓர் ஹீரோவா? என்று ஆரம்பகாலத்தில் தோன்றியது அதை மாற்றி பலரும் விரும்பும் ஓர் ஜனரஞ்சக ஹீரோவாக இருந்த இவருக்கு அரசியல் ஆசை எதற்கு? ஆசை யாரை விட்டது? பார்ப்போம்! நன்றி!
ReplyDeleteநடிகனின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் நம்ம ரசிகன்தானுங்கண்ணா லூசு...
ReplyDeleteவீட்ல அடுப்பெரியுதோ இல்லையோ நடிகனின் படத்து பால் ஊத்தவும், அவனுக்காக வேல் போடவும் செய்யும் இவர்கள்தான் லூசு...
அவனுக்குத் தொழில் அது... இவனுக லூசா இருக்க அதைப் பயன்படுத்திக்கிறான். ஒருத்தன் செத்திருக்கான்... இனி யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம்.. கொடி பிடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை பாருங்கள்.... அடுத்த படத்துக்கும் கட் அவுட் வையுங்கடா... செத்தா மூணு லெட்சம் FANS ASSOCIATION -ல இருந்து COLLECT பண்ணித் தாரேன்னு சொல்லாம சொல்லியிருக்காரு...
திருந்தாத ஜென்மங்கள்...
சிறந்த கருத்துப் பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
தமிழா கேரளாவுல இந்த மாதிரி மோகம் நடிகர்கள் பின்னால் அலைவதோ, இல்லை அரசியல்வாதிகள் பின்னால் அலைவதோ முன்பெல்லாம் இல்லாமல் இருந்தது...இப்போது அங்கும் பற்றிக் கொண்டுவிட்டது....சூர்யா, விஜய் ரசிகர் மன்றம் என்று......விஜய் அரசியல் பக்கம் காய் நகர்த்துகின்றாரோ? அவரது தந்தையின் பின்புலத்தில்?!!
ReplyDeleteஎன்னத்த சொல்ல..... நடிகர்கள் மீதான மோகம் நம் மக்களுக்கு எப்போது தான் குறையுமோ....
ReplyDeleteதிரையரங்கில் நடிகர்கள் அறிவுரை சொல்லும்
ReplyDeleteபோது எனக்கு தோன்றுவது...
இந்த நாயெல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆயிட்டோமடா அப்படினு தோனும்..!!!!
உங்களுக்கு..???
முன்பு இலங்கையில் இந்த பாலூற்றல் இல்லை. இப்போது அங்கும் தொடங்கிவிட்டது.தமிழகத்தைப் பின்பற்ற எத்தனையோ உண்டு. இந்த லூசுகள் இதைப் பிடித்துள்ளனர்.
ReplyDeleteஆனாலும் பணம் கொடுத்து மேலும் ஊக்குவிக்கிறார்களே தவிர எவருமே, இது முட்டாள் வேலை உடனே நிறுத்துங்கள் எனச் சொல்லும் நெஞ்சுரமற்ற பேடிகளாக உள்ளார்கள்.
காமராஜர் தன்னை மேடையில் புகழ்ந்தவரை அதிலேயே நிறுத்தினாராம். இந்த வருங்கால முதல்வர்கள் இதை முதல் பின்பற்ற வேண்டும்.