Sunday, November 1, 2020

 ரஜினி குருமூர்த்தி சந்திப்பு :தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருபோதும் சேரமாட்டேன்
 

#rajini #gurumurthy meet nov 2020
ரஜினிகாந்தை குருமூர்த்திச் சந்தித்துச் சென்று இருக்கிறார். அதன் பின் சில நாட்களில் ரஜினிகாந்த வீட்டில் IT சோதனை நடக்கலாம் அப்படி நடந்தால் உடனே சொல்லி வைத்தால் போல  ஊடகங்கள் கதறும் விவாதங்கள் அனல் பறக்கும்  .தமிழ் மக்களும் ஆஹா பாஜகவிற்கு கண்டிப்பாகப் பாடம் புகட்டுனும் என்று சமுக வலைத்தளங்களில் குரல் கொடுப்பார்கள்.. நடிகர் சங்கம் கண்டன் கூட்டம் நடத்தலாம்..
 
உடனே ரஜினி, ஒதுங்கிப்போன தன்னை  பாஜக சீண்டி அரசியலுக்கு இழுக்கிறது...பாடம் புகட்டுகிறேன் என்று சிங்கள் சிங்கமாக சிலிர்த்து எழுந்தது போலக் கொஞ்சம் நடிப்பார். அதைப் பார்த்த சின்னச் சிறிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர் ரஜினி சார் நாங்கள் உங்கள் பக்கம் உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் என்று சொல்லி, உங்களுக்குப் பாஜக தரும் தொகையில் எங்களுக்கும் ஒரு சிறிய பங்கைத் தந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அவர்களும் தங்கள் பக்கம் குரல் கொடுப்பார்கள்

இப்படி பாஜகவிற்கு எதிராக இருக்கும் வாக்குகள் திமுகப் பக்கம் சென்று விடமுடியாதபடி செய்து அந்த வோட்டுகளைத் தன் பக்கம் இழுத்துவிடுவார் மிஸ்டர் ரஜினிகாந்த

அதுக்கு அப்புறம் ஸ்டாலின், ஒன்று சட்டசபைக்குச் சென்று வெளிநடப்பு செய்துவிட்டு வரவேண்டும் இல்லையென்றால் உதயநிதி ஸ்டாலினைச் செயல் தலைவராக நியமித்துவிட்டுத் தான் தலைவராக வீட்டிலிருந்து என் சோககதை கேளு தாய்க்குலமே என்று பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கவேண்டும்.. அவ்வளவுதான்

அதன் பின் எடப்பாடி துணை முதல்வராகவும் நிர்மலா சீதாராமன் தமிழக முதல்வராகவும் ஆட்சி செய்யலாம்...

வாவ் என் கற்பனை எப்படி எல்லாம் போகிறது....


யாரோட கூட்டு சேருகிறோமோ, அவங்களோட இடத்தை, நாளடைவில், பாஜக பிடித்துக் கொள்ளும். இது தான் பாஜக வோட பேட்டர்ன். - பாஜக சீனிவாசன்

இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு  தெரியுமா? குருமூர்த்தி இதை ரஜினியிடம் விளக்கினாரா?
 

 கொசுறு : தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருபோதும் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத் #nanjilsampath #BJP

பாஜக தலைவர்களே இவர் சொல்லுவது உங்கள் காதில் விழுந்துச்சா? புரிஞ்சிச்சா? அவர் சேர ரெடியாக இருக்கிறார் அமெண்ட் எவ்வளவு தருவீங்க என்று சொன்னால்  சிக்கிரம் அவர் சேரத்தயார் என்று சொல்லாமல் சொல்லுகிறார். அவ்வளவுதான் மேட்டர்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

 1. (!) இப்படியும் நடக்கலாமோ...?

  ReplyDelete
  Replies
  1. இது என் கற்பனை என்றாலும் இது போல பல விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது

   Delete
 2. இன்னுமும் ரஜினியை நம்பும் ஆட்கள் இருக்காங்களேன்னுதான் வேதனை.. அந்த ஆட்களில் நான் கட்டிக்கிட்டதும் ஒன்னு

  ReplyDelete
  Replies
  1. ஒரு காலத்தில் நாமும்தான் ரஜினியை நம்பினோம் காலம் கடந்துதான் நமக்கே புத்தி வருகிறது.. உங்க வீட்டுகாரரும் சிறிது காலம் கழித்து புரிந்து கொள்வார்

   Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.