Wednesday, November 4, 2020

 

my mind speaks என் மனம் பேசுகிறது

என் மனம் பேசுகிறது


ஒரு காலத்தில் பேப்பரும் பேனாவும்தான் என் உற்ற நண்பர்களாக இருந்தனர். காலம் மாற மாற அவர்களின் இடத்தை டெக்ஸ்ட் எடிட்டரும் கீபோர்ட்டும் எடுத்துக் கொண்டன... என் சார்பாக கீபோர்ட் பேசுவதை எல்லாம் டெக்ஸ்ட் எடிட்டர் காது கொடுத்துக் கேட்டு உள்வாங்கிக் கொண்டு இருக்கிறது.. இவர்கள் இருவரும் என் அருகில் தொடர்ந்து பயணிக்கிறார்கள்...... அப்படி இருவரும் பேசுவதையும் கேட்பதையும்தான் நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருக்கிறீர்கள்..

பிரச்சனைகள் நம்மை நோக்கித் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது அதோடு வாழ்ந்து அதைக் கடக்க முயற்சியுங்கள் அப்படிச் செல்வது நம்முடைய விருப்பமாக இல்லாவிட்டாலும் அதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை (இது கொரோனாவும் அடுத்த வந்த பிரச்சனைகளும் எனக்குக் கற்றுத் தந்த அனுபவப்பாடம்)
 

அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டாம். நாம் நாமாகவே இருப்போம் அதைப்பார்த்து விரும்பி நட்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் நம்மை நோக்கி வருவார்கள் ஆனால் ஒன்று அப்படி அடுத்தவர்கள் நம்மை நோக்கி வருமாறு அமைய நாம் நல்ல பண்புகளை இயற்கையாகவே கடைப்பிடிக்க வேண்டும் அடுத்தவர்களுக்காகக் கடைப் பிடிக்கக் கூடாது(சிறுவயதிலிருந்தே நான் இப்படித்தான் அடுத்தவர்கள் பாராட்டவேண்டும் அவர்கள் விரும்பனும் என்று எதையும் நான் செய்ததில்லை..)

வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து அழகாக வைத்துக் கொள்ளும் பலர் தங்கள் மனசை அதைப் போல வைத்துக் கொள்ள முயல்வதே இல்லை( நான் மனதைச் சுத்தம் செய்தான் செய்கிறேன் ஆனாலும் நான் ஒன்றும் ஞானி அல்ல   அதனால்  சில சமயங்களில் சில விஷயங்களில் அசுத்தம் ஆகிவிடுகிறது என்பது உண்மைதான் ஆனாலும் அதை சுத்தம் செய்யவே முயல்கின்றேன்)

வாழ்வின் ரகசியம் புரிந்து கொள்ள , ஒருவர் சொல்லுவது நம் மனதிற்கு வலியைக் கொடுக்குமானால் அதில் ஒழிந்திருக்கும் உண்மையைத் தேடுங்கள். அது போல ஒருவர் சொல்லுவது நம் மனதை மகிழவைக்கிறது என்றால் அதில் மறைந்து இருக்கும் பொய்யைத் தேடுங்கள். .( நம் நெருக்கிய உறவுகளோ நட்புகளோ திட்டும் போது அதில் எது வலியைக் கொடுக்கிறது என்பதைப் பார்த்தால் அதில் உண்மை கொஞ்சமாவது இருக்கிறது அது போல அவர்கள் புகழும் போது அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது)


நம்மைச் சார்ந்த உறவுகள் நண்பர்கள் தவறான பாதையில் செல்லும் போது ஊரோடு ஒத்து வாழ் என்பதற்காக அவர்களைப் பின்பற்றிச் செல்லாமல் தனியாகச் சென்றாலும் சரியான பாதையில் செல்வதுதான் அறிவார்ந்தவன் செய்யும் செயல்( எல்லோரும் பிக பாஸ் பார்க்கிறார்கள் என்பதற்காக நாமும்  அதைப் பார்ப்பது தவறு அது போலக் கிரிக்கெட், அது போல மோடி ஆதரவு .....இது எல்லாம் தவறு என்று தெரிந்தும் தெரியாமலும் நம் நண்பர்கள் செல்கிறார்கள் என்றால் அந்தப் பாதையிலிருந்து விலகிச் செல்வதுதான் நமக்கு நல்லது)

 சீரியஸா எழுதினால் எல்லோருக்கும் பிடிக்காது அதனால்  கொஞ்சம் நக்கலாக ஏதாவது எழுதி வைப்போம்.


நான் நேரில் பார்க்கும் போது எலியும் பூனையும் போலச் சண்டைகள் வாக்குவாதங்கள் கோபங் கொள்ளும் தம்பதிகளைப் பேஸ்புக்கில் பார்க்கும் போது இருவரும் சிரித்துக் கொண்டு காட்சியளிக்கிறார்கள்..இதிலிருந்து நான் புரிந்து கொண்டது தம்பதிகளைச் சிரிக்க வைக்கும் திறமை மார்க்கிற்கு மட்டுமே இருக்கிறது என்பதுதான்
  
my mind speaks



பெண்கள் எதிர்பார்க்கிறது அன்பு, ஆண்கள் எதிர்பார்க்கிறது அமைதி . ஆணுக்கு அமைதி கிடைத்தால் அன்பைக் காண்பிக்க ரெடி அது போலப் பெண்களுக்கு அன்பு கிடைத்தால் அமைதியைத் தர ரெடி.... ஆனால் எதில் எது முதலில் யார் முதலில் தருவது என்பதிலேயே வாழ்க்கை ஒடிவிடுகிறது

( வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வோட்காவை கையில் எடுத்தால் இப்படியெல்லாம் யோசித்து எழுத வருகிறது. இப்ப சொல்லுங்க மக்கா வோட்கா தொடர்ந்து  எடுத்து இப்படி எழுதவா  அல்லது எடுக்காமல் வழக்கம் போல மோடியைத் திட்டி எழுதவா?)

___________________________________________________________________________________________________________________

ரஜினி குருமூர்த்தி சந்திப்பு :தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருபோதும் சேரமாட்டேன் 


தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை வாசகர்களின் பெர்சனல் தகவல்களை  இணையம் மூலம் திருடும் முயற்சியா? 


குருமூர்த்தி ரஜினி மீட்டிங்க போது நடந்தது என்ன? இது வரை வெளிவாரத ரகசியங்கள்

___________________________________________________________________________________________________________________ 

அன்புடன்
மதுரைத்தமிழன்



4 comments:

  1. வோட்கா கையிலெடுத்தே எழுதவும்...

    ReplyDelete
  2. // வாழ்வின் ரகசியம் //

    உங்களுக்கு வெற்றியைத் தரும்... அச்சச்சோ... உங்கள் மனம் மகிழ்ச்சி விட்டால்?

    உங்களுக்கு வெற்றியைத் தரலாம்...! ஆத்தாடி.. உங்கள் மனத்திற்கு வலியைத் தந்து விட்டால்...?

    உங்களுக்கு வெற்றி....! ம்ஹிம்...

    வெற்றி....!

    ReplyDelete
  3. பெண்களை சிரிக்க வைக்கும் திறமை கேமிராவுக்கு உண்டு!

    ReplyDelete
  4. வோட்காவை கையிலதானே எடுக்கறீங்க (வாய்க்குக் கொண்டு போகலையே!!) அப்ப ஓகே எடுத்துட்டே எழுதுங்க..!! கருத்துக்குவியல் நல்லாருக்கு! மார்க்// சிரித்துவிட்டேன்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.