Tuesday, November 3, 2020

 குருமூர்த்தி ரஜினி மீட்டிங்க போது நடந்தது என்ன? இது வரை வெளிவாரத ரகசியங்கள்

 

latha rajinikanth gurumurthy meet


ரஜினி சார் குருமூர்த்தி சார் வாசலில் நிற்கிறார் கதவைத் திறக்கலாமா?

என்ன குருமூர்த்தியா என்று வாசல் நோக்கி விரைந்தோடி வருகிறார்.

குருமூர்த்தியைப் பார்த்தது நண்பா எப்படி இருக்கீங்க.. பார்த்து ரொம்ப நாளாச்சே என்று கேட்டவாறு அவரை அழைத்து வீட்டிற்குள் வருகிறார் ரஜினி.

பதிலுக்குக் குருமூர்த்தி நான் நல்லா இருக்கேன் நண்பா நீங்கள் எப்படி இருக்கீங்க?

 


நான் நல்லா இருக்கேன் நண்பா லதாம்மா எனக்கு ஒரு புதுக் கேம் வாங்கிக் கொடுத்திருக்காங்க அதை வைத்துத்தான் நாள் முழுவதும் விளையாடிக் கொண்டு இருக்கிறேன் எங்க வீட்டுல நான்தான் ஹை ஸ்கோர் எடுத்து இருக்கேன் தெரியுமா? கமான் நண்பா நாம இரண்டு பேரும் அந்தக் கேமை ஆடலாம்...

நண்பா நீ இன்னும் குழந்தையாகவே இருக்கிறாய்... சரி முதலில் குடிக்க ஏதாவது கொடு....
டேய் யாரா அங்க என் நண்பனுக்குக் குடிக்க ஏதாவது எடுத்து வாங்கடா?

நண்பா நாட்டுல என்ன நடக்கிறது புதிய இந்தியாவில் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்களா ?டாலர் ம்திப்பு குறைந்து ரூபாய் மதிப்பு ரொம்ப அதிகமாயிடுத்தா?

என்ன நண்பா நீ டீவியெல்லாம் பார்க்கிறது இல்லையா செய்தி எல்லாம் படிக்கிறது இல்லையா?டிவிட்டரில் அப்ப அப்ப வந்து கருத்து சொல்கிற..


ஹீஹீ டிவிட்டரில் எழுதுவது நான் இல்லை நண்பா எல்லாம் மேடம் லதாதான் எல்லாம் போஸ்ட் போடுறாங்க அதுமட்டுமல்ல டீவி பார்த்தா நான் கெட்டுப் போயிடுவேன் என்று லதாம்மா சொல்லி என் ரூமில் இருந்த டீவியை எடுத்திட்டாங்க


அந்த நேரத்தில் லதா அவர்கள் அங்கு வர உடனே ரஜினி லதாம்மா யார் வந்திருக்காங்க பாரு என் நண்பன் குருமூர்த்தி வந்திருக்கான் என்று சொல்லப்

பதிலுக்கு லதா எல்லாம் எனக்குத் தெரியும் அவரை வரஸ் சொன்னதே நான் தான்... சரி சரி நீங்க படுக்கையறைக்கு போய் மாத்திரை சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் கேம் ஆடிட்டு இருங்க.. நான் இவரு கூடப் பிஸிசன்ஸ் சம்பந்தமா சில விஸ்ஜ்யம் பேசணும் என்று சொல்லி ரஜினியை விரட்டிவிட்டார்..

ரஜினியும் ஹைய்யா என்று குதித்துக் கொண்டே பெட் ரூம் பக்கம் ஓடிவிட்டார்

அதின் பிறகு நடந்த பேச்சு வார்த்தைகள்தான் ரகசியமாக வைக்கப்பட்டுவிட்டு ஊடகங்களுக்கு ரஜினிகாந்த் குருமூர்த்திச் சந்திப்பு என்ற விசயம் ஊடகங்களுக்குத் தெரிய வந்தது


அம்புட்டுதான் மேட்டரு

 யாரோட கூட்டு சேருகிறோமோ, அவங்களோட இடத்தை, நாளடைவில், பாஜக பிடித்துக் கொள்ளும். இது தான் பாஜக வோட பேட்டர்ன். - பாஜக சீனிவாசன்

இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு  தெரியுமா? குருமூர்த்தி இதை ரஜினியிடம் விளக்கினாரா?

ரஜினி குருமூர்த்தி சந்திப்பு :தற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் ஒருபோதும் சேரமாட்டேன் 


தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை வாசகர்களின் பெர்சனல் தகவல்களை  இணையம் மூலம் பெற  முயற்சியா?  



அன்புடன்
மதுரைத்தமிழன்


03 Nov 2020

1 comments:

  1. கேமிரா உங்களுக்கு மட்டும் தானா...?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.