Thursday, November 12, 2020

 

நகைச்சுவை humour joke


அட அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேனுங்க...

ஒரு பெண்ணைப் பார்த்தேன் மிக அழகாக இருந்தார் .அவரைக் கண் இமைக்காமல் பார்த்தேன் .அவரும் அதைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தார், நானும் அவர் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவர் அருகில் சென்று உங்களிடம் ஒன்று கேட்கலாமா என்றேன்..

அவரும் சிரித்தவாறு நான் ஏதும் தப்பா நினைக்க மாட்டேன் தைரியமாகக் கேளுங்கள் என்றார்.

நான் உடனே உங்கள் முடியைத் தொட்டுப் பார்க்க அனுமதி தருவீங்களா என்றேன்
 
அவரும் இவ்வளவுதானா ,நானும் நீங்க வேற ஏதாவது கேட்பீங்களோ என்று மனதிற்குள் கொஞ்சம் பயமாக இருந்தது என்று சொல்லி நீங்கள் தாராளமாக தொட்டுப் பார்க்கலாம் என்றார்..



நானும் அவர் அருகே நெருங்கி அவர் உதட்டிற்கு மேல் தொட்டுத் தடவிப் பார்த்தேன்


உடனே அவர் கோபட்டு கத்த ஆரம்பித்துவிட்டார் அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேனுங்க..
 


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. அவர் கத்தியிருக்கமாட்டாரே... உங்கள் கன்னம் இயல்பான வழுப்பா, இயல்பான கலரா என்று கொஞ்சம் வேகமா செக் பண்ணியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. அவர் கத்தியதும் ஒடிவிட்டேன் இல்லைன்னா நீங்க சொன்ன மாதிரி என் கன்னத்தை தடவி பாத்திருப்பார்

      Delete
  2. Replies
    1. சித்தப்பா இல்லை சித்திக்கு மீசை முளைச்சிடுச்சு அவ்வளவுதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.