Tuesday, November 24, 2020

 

indian labour law 2020

இந்தியாவிற்கு இப்படி ஒரு திட்டமும் இப்படி ஒரு தலைவனும்தான் தேவை

மோடி அண்ணாச்சி ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வரப் போகிறாராம். ஆமாம் அது என்ன நல்ல திட்டம் அதுதானுங்க தொழிலாளர்கள்  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யனும் என்ற திட்டம்தான்...

இது என்ன நல்ல திட்டமா? ஆமாம் நல்ல திட்டம்தான்


இதன் படி காலையில் ஒருத்தன் 8 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் இரவு எட்டு மணிக்கு வேலையை முடிப்பான். இப்படி வேலைக்குப் போகிறவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வசிப்பது இல்லை எல்லோரும் குறைந்தது ஒரு மணிநேர பயண தூரத்திலோ அல்லது இன்னும் அதிக தூரத்திலேதான் வசிப்பார்கள். இதுல வேற அவர்கள் செல்லும் வழியில் டிராபிக் ஜாம் ஆனால் இன்னும் கூடுதலாக அரை மணிநேரமோ அல்லது ஒரு மணிநேரமோ ஆகலாம் இதனால் அவர்கள் சராசரியாகக் காலையில் ஒன்னரை மணி நேரத்திற்கு முன்னால் வேலைக்குச்  செல்ல வேண்டும் அதாவது 8 மணி வேலைக்குக் குறைந்தது வீட்டிலிருந்து 6 1/2 மணிக்குக் கிளம்ப வேண்டும் அப்படி அவர்கள் 61/2 க்கு கிளம்ப வேண்டுமானால் குறைந்தது அவர்கள் 5 1/2 மணிக்கு எழ வேண்டும்.. ஒரு வேலை கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்றால் 4 1/2 க்காவது எழுந்திருந்தால்தான் காலை உணவையும் மதியத்திற்குத் தேவையான உணவையும் தயாரிக்க முடியும்..
 

அது போல 8 மணி பணி முடிந்து வருபவர்கள்  வீட்டிற்கு வர 9  அல்லது 9/12 மணியாகிவிடும் அதன் பின் அவர்கள் இரவு உணவு தயாரித்துச் சாப்பிட 10 1/2 ஆகிவிடும்  அதன்பின் சமைத்த பாத்திரங்களைக் கழுவி வைக்கும் போது மணி 11 ஆகிவிடும். ஒருவேளை வேலையை விட்டு வரும்போது மார்க்கெட்டில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தால் இன்னும் அதிக நேரம் ஆகும்

இப்படி தினமும் நடந்தால் தம்பதிகளுக்குக் கொஞ்சக் கூட நேரம் கிடைக்காது களைப்போடு தூங்கிவிடுவதால் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு இதனால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும்.

டிவி சீரியல் பார்ப்பதற்கு நேரம் இல்லாமல் போகும் இதனால் மக்கள் மனம் கெட்டுப் போக வாய்ப்பில்லை..


குழந்தைகளைப் பார்த்துப் பேச நேரம் கிடைக்காது அதனால் குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதில்லை

வயதான பெற்றோர்களுக்குக் கிராக்கி ஏற்படும் .

பக்கத்துவீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு இருக்கும் காரணம் அவர்களுடன் சண்டை போட நேரம் இருக்காது.

இது போலப் பல நன்மைகள் உள்ளதால் மத்திய அரசின்  இந்த திட்டம் மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமாக இருக்கும் என்பதால் மோடி அரசின் இந்த திட்டத்தை நான் வரவேற்கின்றேன்

முக்கியமாக இந்த திட்டத்தால் தொழிலாளர்களுக்கு அழுத்தம் அதிகரித்து சீக்கிரம் இறக்க நேரிடலாம் அப்படி இறந்தால் அந்த காலி இடங்களுக்கு இளைஞர்கள்  தேர்ந்தெடுக்கப்படலாம் இதனால் வேலை வாய்ப்புக்கள் ஏற்படும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. கொடுமை அல்ல... கொடூர திட்டம்...

    ReplyDelete
    Replies


    1. இந்த மாதிரி கொடுரதிட்டங்களை கொண்டு வர விரும்புவர்தான் மோடிஜி..... இதையும் நம் நண்பர்கள் பாராட்டுவார்கள் தனபாலன்

      Delete
  2. ஆனால் ஆபீஸில் ஏசி ரூமில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு வாரம் ஐந்து நாட்களாக வேலை நேரம் குறைப்பு!! இதனால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுங்களேன்!!!!

    ReplyDelete
    Replies
    1. இது மிக நல்ல திட்டமாகத்தானே இருக்கு

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.