Thursday, November 5, 2020

நடிகர் விஜய் & சந்திரசேகர் குடும்பத்தில் நடப்பது என்ன? அதிரடி தகவல்கள்

 

What is happening in the family of actor #Vijay & #Chandrasekhar?



தந்திரசேகர் வீட்டில் :

என்னங்க ஒன்றுக்கும் ஆகாத(இப்போது) விஜயகாந்த்தை வைத்து அவங்க மனைவி தேர்தல் நேரத்தி சம்பாதிக்கிறாங்க... அது போலப் பவர் போன ரஜினியை வைத்து ரஜினி மனைவி சூதாடி சாம்பாதிக்கிறாங்க.. ஆனால் நான் உங்களை வைச்சு என்னாத்த சம்பாதிக்கிறது..

ஒன்னு செய்யுங்க நம்ம மவன் பெயரைப் பயன்படுத்தி நாம் இந்தத் தேர்தலில் கொஞ்சம் சம்பாதித்துவிடுவோம்... அவன் நம்ம பையன்தானே என்னா சொல்லப் போறான்.
 
அடியேய் அவன் ஒன்று சொல்லமாட்டான் என்றாலும் அவன் மனைவி பொல்லாதவடி ,அவன் சம்பாதிப்பதில் ஒரு பைசா நம்ம பக்கம் வாராமல் பாத்துகிறவ. இப்படி நாம் சம்பாதிக்கப் போறோம் என்று தெரிந்தால் ரூத்திர தாண்டவம் ஆடிடுவாடி

அதையும் பார்த்திடலாம் நீங்க நான் சொன்னதைச் செய்யுங்க முதலில் போய் அவன் பேரைப் பயன்படுத்தி ஒரு கட்சியை ரிஜஸ்டர் பண்ணுங்க அப்புறம் அடுத்தத் திட்டத்தைச் சொல்லுரேன்

ஏய் வேண்டாம்டி வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்..

நான் சொல்லுறதை செய்யுறீங்களா இல்லை அடுத்த வேளைக்குத் தட்டுல சோறு வேணும்மானு யோசிங்க...

விஜய் வீட்டில் :

என்னங்க இங்க பாத்தீங்களா இந்த அநியாயத்தை உங்க பெயரைப் பயன்படுத்தி உங்க அப்பா ஒரு கட்சி ஆரம்பிக்க ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறார் இது அவராகச் செஞ்சு இருக்கமாட்டார் உங்க அம்மா திட்டமாகத்தான் இருக்கும் இதை முலையிலேயே கிள்ளி எடுத்திடனும்

அடியேய் பாவம்டி அவங்க, அவங்களுக்கு நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பைசா தருவதில்லை .இப்படியாவது அவங்க சம்பாதித்துவிட்டுப் போகட்டுமே...

ஹலோ தமிழகப் பண்பாட்டுப்படி புருஷன் பெயரைச் சொல்லித்தான் மனைவிங்க சம்பாதிக்கனும் ,அம்மாக்கள் அல்ல.. விஜயகாந்த் ரஜினிகாந்த் எல்லாம் அதற்கு உதாரணம். அவங்க அம்மா யாருன்னு இந்த உலகத்தில் யாருக்காவது தெரியுமா என்ன?

அவங்களைப் பார்த்து நீங்க நடந்தீங்கன்னா உங்களுக்கு நல்லது அல்லது இது வரை நான் மனசாட்சியைக் கழற்றி வைத்துத்தான் உங்ககிட்ட குடும்பம் நடித்தினேன் என்று அறிக்கைவிட்டு உங்க பலகீனத்தை எல்லாம் ஊருக்குச் சொல்லிவிடுவேன்  பாகவில் போய் சேர்ந்தும்விடுவேன் ஆமாம் ஜாக்கிரதை

ஏய் அப்படி எல்லாம் செஞ்சுடாதே நீ சொல்லுகிறப்படி  இப்பவே செய்கிறேன்.. இப்பவே நான் என் ரசிகர்களுக்கு அறிக்கைவிட்டுடுறேன். போதுமா

அதன் பின் நடந்தது என்ன இதுதான்

#BREAKING | என் தந்தை தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை .என் தந்தை கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக எனது ரசிகர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்
- நடிகர் விஜய்

#BREAKING | "கட்சிக்கும் விஜய்க்கும் தொடர்பில்லை" - விஜயின் அப்பாவும் விஜய் கட்சியின் பொதுச்செயலாளருமான சந்திரசேகர்.



#BREAKING | போற போக்கில் இவன் என் மகன் இல்லை என்றும் இவர் என் அப்பா இல்லை என்றும் அடித்து கொள்வார்கள் போல  எல்லாம் பணம் பணம் பணம்தான்
   



டிஸ்கி 1 : பலரும் சார் நீங்க கதைகளே எழுதுவதில்லை ஏதாவது கதை எழுதுங்க எழுதுங்க என்று பல சமயங்களில் சொன்னதால் நான் எழுதிய சிறுகதை ஆனால் இது தொடர்கதையாகுமா என்பது விஜய் மற்றும் சந்திர சேகர் அவர்கலின் கையில்தான் இருக்கிறது... இது எப்படி இருக்கு .. ஹீஹீஹி
  
#vijay #chandraseker





அன்புடன்
மதுரைத்தமிழன்

நடிகர் விஜய்யும் அவரது தந்தை ச(ந்)திரசேகரும் ஒருவருக்கொருவர் பேசியும் பார்த்தும் பழகியும் பல வருடங்கள் ஆகியதால் கட்சி ஆரம்பிக்கறது பற்றி இவரும் சொல்லவில்லை அவருக்ககும் தெரியாது . இதை எல்லாம் தமிழக மக்கள் நம்பணும்
 
 

05 Nov 2020

4 comments:

  1. இது கற்பனையானாலும் விரைவில் நடக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. அதிக பண பலம மற்றும் செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் மேலும் மேலும் மேலு பணத்தாசை கொண்டு மக்களுக்காக சேவை செய்யப்போகிறோம் என்று சொல்லி இப்படி கேலி கூத்துக்கள் பண்ணிக் கொண்டு இருக்கின்றன

      Delete
  2. ஹா... ஹா.. சிரிச்சி முடியல...

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் நடப்பதுமட்டுமல்ல இங்கே நடப்பதையும் பார்த்தால் சிரிப்புத்தான் வருது ஆனால் இது ஆனந்த சிரிப்பு அல்ல வேதனையை மறைக்க சிரிக்கும் சிரிப்பாக்த்தான் இருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.