தேர்தல் ஆணையம் வேட்பாளராக நிற்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைப் பட்டியல் போட்டுச் சொல்லும்..அதை எந்தக் கட்சிகளும் சட்டைப்பண்ணுவதில்லை ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் அதுபோலத் தங்கள் கட்சியின் வேட்பாளராக நிற்கத் தகுதிகள் வைத்திருக்கின்றன அது என்னென்ன என்பதை இப்போது நாம் பார்ப்போம்
திமுக:
கலைஞரைவிட ஸ்டாலின் மிகத் திறமையானவர் என்று நீங்கள் நம்ப வேண்டும்...ஸ்டாலினுக்கு அடுத்த தலைவர் உதயநீதிதான் என்றும் நீங்கள் நம்ப வேண்டும்.
நீங்கள் எத்தனை ஆண்டுத் திமுக உறுப்பினர்களா இருந்தீர்கள் &உழைத்தீர்கள் என்பது இங்குப் பொருட்டல்ல எவ்வளவு பணம் தேர்தலில் உங்களால் செலவழிக்க முடியும் என்பதுதான் முக்கியம்
தேர்தலுக்குச் சில மாதம் முன்னால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசை எதிர்த்துப் போராடும் போது குண்டு அடிபட்டுச் செத்து இருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
நீங்கள் கோவிலுக்குப் போகலாம் கும்பாபிஷேகம் பண்ணலாம் இறைவழிப்படு பண்ணுவர்களுக்கு அதிகம் உதவி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருக்கலாம் ஆனால் மேடையில் பேசும் போது மட்டும் கடவுள்களுக்கு எதிராக் குரல் கொடுக்க வேண்டும்
தலைவரைச் சந்திக்கும் போது யாரும் பிட் நோட் எழுதி வந்து அதை அவர் முன்னால் படிக்கக் கூடாது
எந்தக் காரணம் கொண்டும் கனிமொழி அழகிரி போன்றவர்கள் கலைஞரின் பிள்ளைகள்தான் என்று பேசக் கூடாது...
இப்படி எல்லாம் செய்தால் நீங்கள் திமுகச் சார்பாகப் போட்டியிடும் தகுதியைப் பெறுவீர்கள்
காலில் வீழ்ந்து வணங்கத் தெரிந்து இருக்க வேண்டும்
ஒரு கன்னத்தில் யாரவது அடித்தால் மறுகன்னத்தைச் சிரித்தாவரே காண்பிக்க வேண்டும்
தேர்வின் போது உங்களைப் பார்த்து நீங்கள் ஆண்மையற்றவர் என்று யாராவது சொன்னால் உடனே ரோசப்பட்டு அதை நிரூபிக்கக் கூடாது
தேர்தலில் நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஈடாகக் கட்சியும் செய்யும் ஆனால் நீங்க அதிக அளவு முதலில் செய்ய வேண்டும்
நீங்கள் அதிமுக ஆதரவாளர் என்பதை விடப் பாஜக ஆதரவாளர் என்பதுதான் முக்கியம்
கொலை கொள்ளை ஊழலில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும்
குறைந்தபட்சம் ஐந்து ஆறு கிரிமனல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க வேண்டும்,
சிறை சென்ற அனுபவம் இருந்தால் ப்ளஸ் அட்வாண்டேஜ்
ஊழல் செய்வதில் எக்ஸ்பர்ட்டாக இருந்தால் மிகச் சிறப்பு
அதாவது ஒரு பிரபல தாதாவாக இருத்தல் முக்கியத் தகுதியாகும்
ஹிந்தி தெரிந்தவராக இருக்கத் தேவையில்லை ஆனால் ஹிந்தியை ஆதரித்துக் குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும்
சாதி மதங்களிடையே சண்டை சச்சரவு சீரழிவு ஏற்படுத்த கூடியவாரக் இருப்பிது முக்கியத் தகுதி
ஹிந்தி புரியாதவராக இருந்தாலும் மோடியின் மங்கிபாத் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்கக் கூடியவராக இருக்க வேண்டும்
போட்டோஷாப் தொழிலி நுட்பத்தில் சிறந்து விளங்குபவராக இருக்க வேண்டும்
___________________________________________________________________________________________________________________
___________________________________________________________________________________________________________________
காங்கிரஸ்
முதலில் விண்ணப்பிக்கும் போது நீங்கள் எந்த அணியைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டும்
தோற்பது நிச்சயம் என்றாலும் மனம் உடையதவாரக இருக்க வேண்டும்
திமுகக் கட்சியினருடனோ தலைமையிடமோ நல்ல செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும்
மதிமுக : யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால் திமுகத் தலைமை எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குகிறதோ அவ்வளவு சீட்டுகளில்தான் போட்டிப் போட முடியும் தேர்தல் செலவு முழுவதும் உங்களது
பாமக தேதிமுக சார்பாக முதலில் யார் போட்டி இட விரும்புகிறார்களுக்கு இப்போது பேரம் நடந்து கொண்டிருப்பதால் தற்சமயம் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
மய்யம் : சுயேச்சை வேட்பாளராகப் போட்டி இடுபவர்கள் தங்களின் வாட்சப் நம்பரைக் கொடுத்தால் அவர்களுக்கு மய்யத்தின் கட்சி சின்னம் கொடுக்க்பப்பட்டு உங்களை ஆதரித்து கமலஹாசன் பேசுவார்
___________________________________________________________________________________________________________________
இந்திய இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களிடம் ஒரு கேள்வி இதற்கு பதில் சொல்லுங்களேன்
___________________________________________________________________________________________________________________
அன்புடன்
மதுரைத்தமிழன்
கிட்டத்தட்ட சரி... சிலவற்றில் சேர்க்க வேண்டியது உள்ளது...
ReplyDeleteபாஜகவுக்கு நீங்க சொன்னது அப்படியே திமுகவுக்குப் பொருந்துதே.
ReplyDelete