உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 22, 2017

பெண்புத்தி பின் புத்தி vs ஆண் புத்தி முன் புத்தி


பெண்புத்தி பின் புத்தி vs  ஆண் புத்தி முன் புத்தி

பெண்புத்தி பின் புத்தி

உள்ளுணர்வுத் தன்மை, ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம்.  அதிலும் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்களே.. அது ஒருவித அறிவுக் கூர்மை, சமயோசித புத்தியைக் குறிக்கின்றதாம்... அதுவும் பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்...அதுக்கு ஒரு சின்ன கதை சொல்கிறேன்.. என்று அதிரா என்ற பெண்மணி இப்படி ஒரு கதையை  எங்கள்ப்ளாக்கில் பதிந்து இருக்கிறார்.

“பெண் புத்தி பின் புத்தி”

ஒரு தாய் தந்தையருக்கு ஒரு மகள். அவவுக்குத் திருமணமாகி கணவன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்தமாகிறா.

அப்போ தந்தை, மகளை அணைத்து அழுதுகொண்டே சொல்கிறார்.. “ அம்மா நீ, இங்கே செல்லமாக வளர்ந்திட்டாய், அங்கு கணவன் வீட்டில் உன்னை எப்படிக் கவனிக்கப் போகிறார்களோ, மாமியார் எப்படியானவரோ என எதுவும் எமக்குத் தெரியாது, ஆனால் நீ தைரியமாக இரு, அங்கு உனக்கு எந்த விதமான பிரச்சனை வந்தாலும் உடனே எமக்குக் கடிதம் போடு, அடுத்த நிமிடமே நாம் அங்கு நிற்போம், நீ கஸ்டப்பட நாம் விடமாட்டோம்”என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் சொன்னார்..

“என்னங்க நீங்க சொல்றீங்க? இப்படியா மகளுக்கு சொல்லி அனுப்புவது? அங்கு கடிதம் எழுதும்போது, அதை மருமகனோ அல்லது மாமியாரோ படித்து விட்டால், எம் மகளின் கதி என்னாகும்? கொஞ்சமாவது “கிட்னியை” பாவிக்க  வேண்டும்”.. எனச் சொல்லி விட்டு,[புத்தி(மூளை/அறிவு)யை பூஸ் பாஷையில் சொல்லும்போது அது கிட்னி:)].

தாய் மகளிடம் சொன்னா....

“இஞ்ச பாரம்மா, அங்கு ஏதும் பிரச்சனை இருப்பின், எமக்கு அதை எழுதாதே,  அது உன் வாழ்க்கையைப் பாதிக்கும்,  எப்பவும் நலமாக இருக்கிறேன் என்றே எழுது, ஆனால் நீ தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறாயாக இருந்தால், கடிதம் எழுதும்போது, ஒரு பென்சிலால் எழுதிப்போடு, இல்லை சந்தோஷமாக இருக்கிறாய் எனில் பேனாவால் எழுதிப்போடு, நாம் அதை வைத்தே புரிந்து கொள்வோம்”.

உன்னில் தவறு வந்திடுமளவுக்கு எதுவுமே பண்ணாதே என.. அறிவுரை கூறி அனுப்பினார்..

மகள் கணவர் வீடு போனபின், ஒரு மாதத்தால் மகளிடமிருந்து கடிதம் வந்தது....

தந்தையும் தாயும் போட்டிபோட்டுப் பிரித்தார்கள்..

பேனாவாலோ அல்லது பென்சிலாலோ எழுதப்பட்டிருக்கு என... ஆஹா.. என்ன சந்தோசம்... பென்னால் எழுதப்பட்டிருந்தது கடிதம்... பெற்றோருக்கோ மகிழ்ச்சி... மகள் சந்தோசமாக இருக்கிறா அதுவே போதும் என எண்ணியபடியே கடித்தத்தைப் படித்தனர்....

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு...
உங்கள் மகள் “தங்கம்” எழுதிக்கொள்வது,


நான் இங்கு மிகவும் நலமாக இருக்கிறேன்... என் கணவர் என்னை கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறார், மாமியார் தலைமேல் தாங்கி நடக்கிறா... எனக்கு துன்பம் என்ன வென்றே தெரியவில்லை ... அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்... உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும்போல் உள்ளது...


இத்துடன் முடிக்கிறேன்... அம்மா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில் வீடெல்லாம் தேடினேன்.. ஒரு பென்சிலுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பேனாவினால் எழுதியிருக்கிறேன்...
அன்பு மகள்,
தங்கம்

அன்புடன்
அதிரா.
ஆண் புத்தி முன் புத்தி

ஒரு கதை எழுதினால் காலத்திற்கேற்ப எழுதனும்.....அதிரா கதையை நீங்க படிச்சீங்க தானே இப்ப மதுரைததமிழன் சொல்லுறா லேட்டஸ்ட் கதையை படியுங்க

சென்னையில் வசிக்கும் ஒரு பெற்றோர் தன் மகனுக்கு தேடிதேடி கடைசியில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு தன்  மகனை கட்டிக் கொடுக்கிறார்கள். கல்யாணத்திற்கு அப்புறம் மனைவியின் வீட்டிற்கு அந்த மகன் புறப்பட ஆயத்தாமகிற போது


அந்த மகனை பெற்ற அம்மா தன் மகனை அணைத்து அழுதுகொண்டே சொல்கிறார்.. “ அய்யா ராசா நீ, இங்கே செல்லமாக வளர்ந்திட்டாய், அங்கு மனைவி வீட்டில் உன்னை எப்படிக் கவனிக்கப் போகிறார்களோ, மாமியார் எப்படியானவரோ என எதுவும் எமக்குத் தெரியாது, ஆனால் நீ தைரியமாக இரு, அங்கு உனக்கு எந்த விதமான பிரச்சனை வந்தாலும் உடனே எமக்குக் கடிதம் போடு, அடுத்த நிமிடமே நாம் அங்கு நிற்போம், நீ கஸ்டப்பட நாம் விடமாட்டோம்”என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தந்தை சொன்னார்..

என்னடி இப்படியா மகனுக்கு அறிவுரை சொல்லி அனுப்புவது? அங்கு கடிதம் எழுதும்போது, அதை மருமகளோ அல்லது மாமியாரோ படித்து விட்டால், நம்ம மகனின் கதி என்னாகும்? அதுக்குதான் கொஞ்சமாவது  சரக்கு அடித்து புத்தியை வளர்த்து கொள்ளனும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள், சரக்கு அடித்தால்தாண்டி  என்னைப் போல நல்லா சிந்திக்க முடியும் என்று சொல்லி

அந்த தந்தை மகனிடம் சொன்னார்....

“இந்த பாரய்யா, அங்கு ஏதும் பிரச்சனை இருப்பின், எமக்கு அதை எழுதாதே,  அது உன் வாழ்க்கையைப் பாதிக்கும்,  அதுனால எப்பவும் நலமாக இருக்கிறேன் என்றே எழுதி உன் பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் போடு, ஆனால் நீ தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறாய் என்றால் டி ஸ்டேடஸ் போடும் போது, சிரித்தபடி ஒரு புரொபைல் படம் போடு, இல்லை சந்தோஷமாக இருக்கிறாய் எனில் சோகமாய் இருப்பது போல் ஒரு புரொபைல் படம் போடு , நாங்கள் அதை வைத்தே புரிந்து கொள்வோம்”.

உன்னில் தவறு வந்திடுமளவுக்கு எதுவுமே பண்ணாதே என.. அறிவுரை கூறி அனுப்பினார்..

மகன் மனைவி வீடு போனபின், ஒரு மாதத்திற்கு அப்புறம் மகன் பேஸ்புக்கில் புரொபைல் படம் மாற்றியிருந்தான்

தந்தையும் தாயும் போட்டிபோட்டுப் பார்த்தார்கள்..

என்ன சந்தோசம்... பையன் சோகமாய் இருப்பது போல ஒரு புரொபைல் படம் போட்டிருந்தான்  அதை பார்த்த. பெற்றோருக்கோ மகிழ்ச்சி... மகன் சந்தோசமாக இருக்கிறான் அதுவே போதும் என எண்ணியபடியே அதையே பார்த்து கொண்டிருந்தனர்..


அப்படி அவர்கள் புரோபைல் படம் பார்த்து  கொண்டிருந்த போது இன்பாக்ஸில் அவர்களுக்கு இப்படி ஒரு தகவலை அனுப்பினான்

அம்மா அப்பா ,நான் இங்கு மிகவும் நலமாக இருக்கிறேன்... என் மனைவி என்னை கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறார், மாமியார் தலைமேல் தாங்கி நடக்கிறா... எனக்கு துன்பம் என்னவென்றே தெரியவில்லை ... அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்... உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும்போல் உள்ளது...  ஆனால்.. அப்பா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில்  என் மனைவி என்னை போட்டோ எடுக்கும் போதெல்லாம் நான் சிரித்தப்படி போஸ் கொடுக்கதான் முயற்சிக்கிறேன் ஆனால் இறுதியில் என்னவோ நான் சோகமாக இருப்பது போலத்தான் போட்டோ வருகிறது அதனால்தால் நான் சோகமாக இருப்பது போல என் புரோபைல் படம் போட்டு இருக்கிறேன் என்று எழுதி முடித்து இருந்தான்
அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments :

 1. திருமணத்தின் போது மாப்பிள்ளையை பார்த்து "கடைசியா ஒரு முறை சிரிங்க"- ன்னு போட்டோகிராபர் சொல்லி விடுகிறாரே...

  ReplyDelete
  Replies

  1. அனுபவம் மிக்கவர் போட்டகிராபர் அதனால்தான் அப்படி சொல்லுகிறார் போல.......தனபாலன் உங்கள் புரொபைலில் இருக்கும் படம் கல்யாணத்து அன்று எடுத்ததா இல்லையா என்ற ரகசியத்தை என்ன்னிடம் மட்டுமாவது ரகசியமாக சொல்லிவிடுங்கள் ஹீஹீ

   Delete
 2. அதுசரி, காலத்துக்கேற்றபடி நவீனமாக எழுதி விட்டீர்கள்! சோக, சந்தோஷ ஸ்மைலி படத்தை புரொஃபைல் படமாக வைத்துக் கொள்ள அவனுக்குத் தெரியாதா!!

  ReplyDelete
  Replies
  1. ஸ்மைலி படம் நாட் அலோவ்ட்

   Delete
 3. ஆணை மாப்பிள்ளை பார்க்க வருவது, ஆணுக்கு தாலி கட்டுவது என்கிற மாற்று யோசனைக் கதைகளை 70 களிலேயே குமுதம் வெளியிட்டுள்ளது!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பல நகைச்சுவை கதைகள் இது மாதிரி வந்து இருக்கின்றன. இதைத்தான் மாற்றி யோசித்து எழுதுவது என்பார்கள்

   Delete
 4. ஹா ஹாங் :) செம.. தற்கால சூழலுக்கு ஏற்ற மாதிரி லேட்டஸ்ட் ட்ரெண்டா முகப்புத்தகத்தை சேர்த்திருக்கிங்க :)

  ஆனா இதெல்லாம் டூ த்ரீ மச் :) எந்த பிளானெட்ல இவ்ளோ பயந்த கல்யாண மாப்பிள்ளை அதுவும் இவ்ளோ அப்பாவி பயந்த மாப்பிளை இருக்கார் சொல்லுங்க ( தவறியும் உங்க பேரை சொன்னிங்க அவ்ளோதான் :)
  லேட்டஸ்ட் டெக்னா ..அவர் போன்ல செல்பி எடுத்து போடலாமே :)
  ஆனாலும் சூப்பர் :)நன்றாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. நான் பயந்தவன் என்று யார் சொன்னா என் மனைவி பக்கத்தில் இருக்கும் போது எனக்கு இந்த உலகத்தை கண்டு பயமில்லை ஆனால் என் உலகமான அவளை மட்டுமே கண்டுபயப்படுவேன் ஹீஹீ செல்போன் மூலம் செல்பி எடுக்கும் போது அதில் வால்பேப்பராக மனைவியின் படம் இருப்பதால் படம் எடுக்கும் போதே முகம் சோகமாகிவிடுகிறதே

   Delete
 5. ஹா ஹா ஹா ....முடியல்ல ஜாமீஈஈஈஈ:) இண்டைக்கும் எனக்கு நஸ்ட ஈடு தரோணும்:) அவசரப்பட்ட்டு.. குறைமாதக் கொயந்தைபோல.. இந்த புளொக்கை ஓபின் பண்ணியதும், வோட் போட்டிட்டனா...:) ஹையோ இப்போ அதை வாபஸ் வாங்கவும் முடியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....

  அத்தோடு மானநஷ்ட வழக்கும் போடப்போறேன்ன்:) அன்போடு தங்கம்.. எனத்தானே முடியோணும்.. இது அதிராவாமேஏஏஏஏ... இதைக் கேட்க இங்கின ஆருமே இல்லயோ:) இதோ போகிறேன் பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டுக்கூஊஊஊஉ:)

  ReplyDelete
  Replies
  1. நான் பயந்தவன் என்று யார் சொன்னா என் மனைவி பக்கத்தில் இருக்கும் போது எனக்கு இந்த உலகத்தை கண்டு பயமில்லை ஆனால் என் உலகமான அவளை மட்டுமே கண்டுபயப்படுவேன் ஹீஹீ செல்போன் மூலம் செல்பி எடுக்கும் போது அதில் வால்பேப்பராக மனைவியின் படம் இருப்பதால் படம் எடுக்கும் போதே முகம் சோகமாகிவிடுகிறதே

   Delete
  2. என்ன இது கொப்பி அண்ட் பேஸ்ட்டோ?:)

   Delete
 6. ஹா ஹா ஹா உங்க கற்பனை கண்டு நான் “வியக்கேன்ன்”:)... இப்படி ஒரு ஆம்பிளைப்பிள்ளையா இக்காலத்தில:).. அந்த தங்கத்தை விட தங்கமான பிள்ளையாக இருக்கிறாரே.. வாழ்த்துக்கள்.

  சூப்பர் கற்பனை.. உங்கட “கிட்னி” பத்திரம்... அமேரிக்காவில இருந்து இந்தியாவுக்கு கள்ளமா அனுப்பினால்கூட , பிரித்தானியாவில ஆராவது பறிச்சிடுவாங்க.. பத்திரமா பாதுகாத்துக் கொள்ளுங்கோ.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க இப்படி என்னை பார்க்காமலே பல பேர் வியக்குறாங்க இதுல வேற நான் என் படத்தை புரொபைல் படமாக போட்டால் உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் என்னை மொய்த்துவிடுவார்கள் அதனால் பல குடும்பங்களில் பிரச்சனை ஏற்படுமில்ல அதனலதான் நான் அதை செய்யவில்லை

   Delete
  2. ஹா ஹா நினைப்புத்தானாமே புழைப்பைக் கெடுக்கும்:)

   Delete
 7. மீண்டும் பழைய மதுரைத்தமிழனைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog