உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 11, 2017

பன்னீரின் தற்போதய உண்மை நிலை இப்படிதான் இருக்கிறதா?

  

பன்னீர் செல்வத்தின் தற்போதைய நிலையை இதைவிட தெளிவாக சொல்ல இயலுமா ?தமிழக மக்களே உங்கள் விருப்பத்திற்கு மாறாக தவறான ஆளை முதல்வராக தேந்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள்  இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாளாவது அவர்கள் வீட்டிற்கு வரத்தானே வேண்டும் அப்ப நல்லா வைச்சு செய்யுங்க....


தமிழக மக்களே  அந்த 130 எம்.எல்.ஏக்கள் வேண்டுமானால் ரிசார்ட்டில் ஜாலியாக இருக்கலாம் ஆனால் அவர்களின் குடும்பத்தினர் இன்னும் வீடுகளில்தானே வசிக்கிறார்கள் அவர்களை  நீங்கள் ஏன் ஹவுஸ் அரெஸ்ட் செய்யக் கூடாது. கொஞ்சம் யோசிங்க மக்களே நீங்கள் நினைத்தால் இன்னும் நிறைய சாதிக்கலாம் ஜல்லிக்கட்டுகாக சாதித்தவர்கள் இதையும் சாதிக்க முடியும்


சசிகலா முதல்வாரக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அதுதான் பாஜகவில்  உறுப்பினராக சேருவதுதான்


காவிரி நீர் பிரச்சனையால் தமிழக விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொண்டனர்
மோடியின் பணப் பிரச்சனையால் மக்கள் தினமும்  தெருவில் நின்று திண்டாடினார்கள்
இந்த இரண்டு பிரச்சனைகளையும் இல்லாமல் செய்துவிட்டது
ஜெயலலிதாவின் சாவும் .சசிகலா & பன்னீரின் அடிதடி பிரச்சனையும்
இந்த பிரச்சனைகளும் எளிதில் மறைய தமிழர்களுக்கு ஏதாவது இலவசமாய் கொடுத்தாலே போதும்அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. சசிகலாவை எம் எல் ஏக்களும், எம்பிக்களும், மந்திரிகளும் ஏற்பார்கள். மக்கள் ஏற்க மாட்டார்கள்.

  ReplyDelete
 2. பன்னீர் எப்படி என்றாலும் இப்போதைக்கு அவர்தான் தேவை...
  சசிகலா யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா தலைவர்...

  ReplyDelete
 3. சசிகலாவை மக்கள் நிச்சயமாக ஏற்க மாட்டார்கள். அல்லக்கைகள் வேண்டுமென்றால் சசிகலா பின்னாடி நிற்பார்களாக இருக்கலாம். இப்போதைய சூழலில் இரண்டில் ஒன்று என்றால் பன்னீர் தான் சாய்ஸ் வேறு வழி இல்லை..ஆனால் சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தால் நல்லது....எப்படி இருந்தாலும் தமிழ்நாடு நல்ல தலைமை இல்லாமல் தத்தளிக்கிறது என்பதுதான் உண்மை..

  கீதா

  ReplyDelete
 4. பதவிக்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.... நீங்கள் சொல்வதையும்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog