உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, February 16, 2017

ஜெயலலிதாவிற்கு சசிகலா செய்த துரோகம் மிக சரியே

ஜெயலலிதாவிற்கு சசிகலா செய்த துரோகம் மிக சரியேதன்னை அம்மா என்று நம்பிய மக்களுக்கு ஏதும் செய்யாமல் துரோகம் செய்தார் ஜெயலலிதா.  அதனை அறிந்த மக்கள் என்ன செய்வது என்று அறியாது  தயங்கி நின்ற போது  தெய்வம் ஜெயலலிதாவிற்கு சசிகலா என்ற தோழியை அனுப்பி வைத்தது. கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் சாவான் என்பது போல நம்பியவர்களுக்கு துரோகம் செய்த ஜெயலலிதாவிற்கு அவர் நம்பியவரே கூட இருந்தே குழி பறித்தார்.ஜெயலலிதா செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்காமலே சென்றுவிட்டார் என்று பலர் கருதுகிறார்கள் ஆனால் அவர் அப்போலவில் இருந்தாக சொல்லப்படும் 75 நாட்களும் மிக பெரிய தண்டனை. நரகத்தை பூமியேலே பார்த்தவர் ஜெயலலிதா ஒருத்தர் மட்டுமே


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

இனிமேல் ராஜ்டிவி நீயூஸ் சேனலை மட்டும் பார்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன் காரணம் இன்று காலை(அமெரிக்க நேரம்) அந்த டிவியில் மட்டும்தான் Breaking News என்று ஏதும்  போடாமல் நார்மலாக செய்தியை ஒளிபரப்புகிறார்கள்

இந்திய நாட்டின் இறையாண்மையை காப்பேன் என்று பதவி பிரமானம் செய்த எடப்பாடி பழனிச்சாமி  குற்றவாளி ஜெயலலிதாவின் கல்லறையில் விழுந்து வணங்கியதன் மூலம் அந்த பிரமானந்ததை மீறிவிட்டார் என்று அவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா?

3 comments :

 1. அரசியல் பேசுவதற்குரியதாகக் கூட
  இல்லாமல் ஒரு அசிங்கமான சமாச்சாரமாக
  ஆகிக் கொண்டு வருவது கவலை அளிக்கிறது
  குற்றவாளி ஜெயிலிருந்து கட்சி நடத்துவது
  குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவரிடம்
  ஆசி பெற்றுப் பதவி ஏற்பது
  என்ன சொல்வது ?
  இனி பழம்பெருமை மட்டுமே
  பேசக்கூடிய நிலையில் தமிழகம்

  ReplyDelete
 2. கொஞ்சம் பொறுங்கள் நண்பரே. இடைத்தேர்தல் வரக்கூடும் என்று தோன்றுகிறது.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog