உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 1, 2016

திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால்!avargal unmaigal
திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால்!


நேற்று திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட கபாலி படத்தை பின்னுக்கு தள்ளி இன்று முண்ணனியில் வந்து இருக்கிறது.


கடந்தபோன தேர்தலில் தோல்வியை தழுவிய திமுக வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் வெற்றி பெறுவதற்கு பதிலாக மாற்று சிறு கட்சிகளை உடைத்தும் ஜெயலலிதா மற்றும் பல தலைவரின் மீது களங்கம் ஏற்படுத்தியும் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறது அதன் ஒரு பகுதியே இந்த சசிகலா மற்றும் சிவா நடிக்கும் கன்னத்தில் அறைந்தால்! நாடகம் இது பற்றிய விபரமான செய்திகளை கிழே நாம் பார்ப்போம்
சிவா (திமுக எம்பி ) சசிகலா புஷ்பா (அதிமுக எம்பி ) இவர்கள் இருவருக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருந்து வந்தது ( தவறான உறவு என்று அர்த்தம் கொள்ள வேண்டாம் ) இந்த உறவை எல்லோரும் அறிவார்கள். இந்த உறவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசுக்கு களங்கம் ஏற்படுத்த திமுகவின் புதிய தலைமை முயற்சிக்குதான் இந்த இருவரும் இப்போது பலிகடாவாக ஆக்ககப்ட்டு இருக்கிறார்கள்திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது பற்றி சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, திருச்சி சிவா எம்.பி., தமிழக போலீஸாரை பற்றியும், எங்கள் அம்மாவை பற்றியும் அவதூறாக பேசினார். என்னைப் பார்த்ததும் அவரது பேச்சு அதிகமானது. இதனாலேயே நான் அவரது கன்னத்தில் அறைந்தேன் என்று சொல்லி இருக்கிறார். சரி சசிகலா சொன்னது உண்மையாக இருக்கும் பட்சத்தில்அவர் இப்படி பேசி இருப்பது பொய் என்று அல்லவா தோன்றுகிறது  இந்நிலையில் இன்று காலையில் ராஜ்யசபா துவங்கியதும் சசிகலா புஷ்பா அவையில் பேச துவங்கினார். அவர் பேசுகையில் ; நான் திருச்சி சிவாவை கன்னத்தில் உணர்ச்சி வசப்பட்டு அடித்து விட்டேன். இதற்காக நான் சிவாவிடமும், அவரது கட்சி தலைவரிடமும் நிபந்னையற்ற மன்னிப்பு கோருகிறேன். ( பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியற்காக இவர் ஜெயலலிதாவிடம் அல்லவா மன்னிப்பு கோரி இருக்க வேண்டும். நாடகத்தை இயக்கிய தலைவர் இங்கே கோட்டை விட்டு இருக்கிறார் , ஒரு வேளை கதையிலே இங்கேதான் ட்விஸ்ட் வச்சிருக்கிறார் போல....தலைவர் ஹீஹீ ))மேலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நேற்று நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டேன். நான் கட்சி தலைவரால் விசாரிக்கப்பட்டேன். நானும், எனது கணவர், குழந்தைகளுடன் சென்றேன். எனது தரப்பு நியாயத்தை எடுத்து கூற அனுமதி தரவில்லை. மேலும் கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார். எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தம் செய்கின்றனர்.
 

வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதா எங்கள் அம்மா தெயவம் என்று உருகி உருகி பேசி வணங்கி ஜெயலலிதாவால் நல்ல பதவியை அடைந்தவர்கள் சிறு தவறுகள் செய்தால் அவர்களை கண்டிக்க அம்மா ஸ்தானத்தில் இருப்பவர் அடிப்பது தவறா என்ன? ஜெயலலிதா மீது அவதூறு பேசியதற்காக பொது இடத்தில் சிவாவை அடித்தேன் என்று கூறுபவர் ஜெயலலிதா தனி அறைக்குள் அடித்ததை ராஜ்ய சபாவில் சொல்லி அழுகும் போது எங்கோ இடிக்க அல்லவா செய்கிறது


சசிகலா  செய்யும் செயலை பார்த்தால் ஏதோ  கொடுத்து செய்வது மாதிரிதான் தெரிகிறது . பணம் விளையாடி உள்ளது . இனிமேல் ஜெயலலிதா அவர்கள் எம்எல்ஏக்களை கண்காணிக்க வேண்டும் .திமுக தலைமை ஏதோ சதி செய்கிற மாதிரி தெரிகிறது . ஆட்சியில் அமர முடியவில்லை என்ற பொறாமையில் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்கள் செய்து ஆளும் கட்சியின் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது போல

எது எப்படியோ இந்த நாடகம் கபாலி படத்தை ஒரங்கட்டிவிட்டது என்னவோ உண்மை


அன்புடன்
மதுரைத்தமிழன் (டி.ஜே துரை)


டிஸ்கி : சசிகலா அடிச்சால் உலகம் எல்லா பேசுறாங்க

ஆனால் என் பொண்டாட்டி பூரிக்கட்டையால் அடிச்சால்
ஒரு பய கூட பேசமாட்டேங்கிறான்
ஏன் என்னால கூட
ஒரு வார்த்தை பேச முடியல.
ஹும்ம்ம்ம்
 
#sasikala pushpa # trichy #siva

5 comments :

 1. நிஜமாகவே இப்படி ஒரு கோணத்தில் நான் நினைக்கவே இல்லை! அவர்கள் உறவு பற்றி வந்த செய்திகளுக்காக அவர்கள் (மட்டும்) ஆடிய நாடகமோ என்று நினைத்தேன்!

  ReplyDelete
 2. நீங்கள் எழுதியுள்ளது சரியான காரணம்தான். புஷ்பா, கனிமொழி அவர்களின் கைப்பாவையாகிவிட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். கனிமொழியைவிட சீனியரான சிவாவின் இமேஜ் டேமேஜ். ஒரு வேலையும் செய்யாமல், ஒரு எக்ஸ்டிரா எம்பி திமுகவுக்கு. அதிமுக கட்சித் தலைமையைப் பற்றி இமேஜ் டேமேஜ் செய்ய முயற்சி.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. this sasikala had behaved badly in all her admin posts in tuticorin.. twice she forcibly snatched the mike from alady ias officer this sasikala had called tuticorin dt collector as DHADDI meaning highly dull man of late this sasi had fallen victim to drinking.....

  ReplyDelete
 5. this sasikala had behaved badly in all her admin posts in tuticorin.. twice she forcibly snatched the mike from alady ias officer this sasikala had called tuticorin dt collector as DHADDI meaning highly dull man of late this sasi had fallen victim to drinking.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog