Friday, August 26, 2016



பேஸ்புக்கில் வெளிவந்த சின்ன சின்ன தகவல்கள் (படிக்க ரசிக்க நகைக்க )

சிந்துக்கு போட்டியாக களம் இறங்கும் பெண்மணி

சிந்து ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் பரிசை அள்ளியதை கேள்வி பட்ட மாமி களம் இறங்கிய காட்சி கிழே:





பேஸ்புக் நண்பர்களோடு நாம் நம் பிறந்த நாளை கொண்டாடும் போது நமக்கு நிறைய கேக்குகளும் பூங்கொத்துகளும் பரிசாக கிடைக்கும் அதை நாம் பார்த்து மட்டும் மகிழ முடியும். எப்படி அவர்கள் அனுப்பிய கேக்கின் இனிப்பை சுவைக்க முடியாதோ அல்லது பூக்களின் நறுமணத்தை உணரமுடியாதோ அது போலத்தான் இந்த பேஸ்புக் நண்பர்களும் ( இதில் சில நட்புக்கள் விதிவிலக்கு )

ஒலிம்பிக்கில் இந்திய அதிக மெடல்களை பெற வில்லை என்று பேஸ்புக்கில் பொங்கிய போராளிகளே. இங்கே உடகார்ந்து பதிவுகள் போடுவதற்கு பதிலாக உங்கள் ஊரில் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு சென்று அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு கொடுத்து பாருங்கள். அப்படி செய்தால் வருங்காலத்தில் இந்தியா பல மெடல்களை அள்ளி வரும்


ஒவ்வொருவரின் வழி தனிவழி அதனால் மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் நம் வழி தனிவழி என்று கடந்து செல்லவும். எப்போதும் நம் வெற்றியை மற்றவர்களின் வெற்றிகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் . நம் வளர்ச்சியை மற்றவர்களோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அதற்கு பதில் நமது வெற்றிகான செயலை நாம் எங்கே எப்போது தொடங்கினோம் இப்பொது எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று ஒப்பிட்டு பாருங்கள் அது நமக்கு மிகவும் சந்தோஷத்தை தரும். வெற்றி பெற்றவர்களை பார்த்தால் ஒவ்வொருவரும் தனித் தனி வழி முறையை பின்பற்றிதான் வெற்றி பெற்று இருப்பார்கள் ஆனால் அதே முறையை மற்றவர்கள் பின்பற்றி வெற்றி பெற்றோம் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் ஒருத்தருக்கு வெற்றி பெற உதவிய முறை மற்றவருக்கு வெற்றி பெற வழி வகை செய்யாது

அதனால் எதையும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்காமல் நம் வழியில் நடந்து வெற்றியை நமது  சொந்த முயற்சியால் அடைந்து மற்றவர்கள் நம் வெற்றியை பார்த்து வியக்க செய்வோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்.

4 comments:

  1. அந்தப் பாட்டி... ஆறேழு மாதத்துக்கு முன்னாலயே வந்த வீடியோ...
    இப்ப சிந்துவால மறுபடியும் தூசு தட்டி பதிவிட்டுக்கிட்டு இருக்காங்க....

    பொங்கி பொங்க வச்சி என்னங்க பண்றது.. நீங்க சொல்ற மாதிரி செஞ்சிருக்கலாம்...

    ReplyDelete
  2. முதல் ரசித்தோம். மற்ற இரண்டும் நல்ல கருத்து..

    ReplyDelete
  3. பார்த்தோம், ரசித்தோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. காணொளி முகப்புத்தகத்தில் பார்த்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.