வெள்ளி பதக்கம் வென்ற (சிந்து )இந்தியரின் நிலை
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு கோடிக்கணக்கில்
ரொக்கப் பரிசுகள் குவிந்து வருகின்றன.
சிந்துவின் சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் ச, சிந்துவுக்கு ரூ.5 கோடி பரிசளிப்பது, ஹைதராபாதில் 1,000 சதுர அடியில் மனை வழங்குவது என . அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சந்திரசேகர் ராவ் "சிந்து விரும்பினால் அவருக்கு அரசு வேலையும், வழங்கப்படும்' என்றார்.
ஆந்திரம் சார்பில் ரூ.2 கோடி: ஆந்திர மாநில அரசு சார்பில் சிந்துவுக்கு ரூ.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும் , "எங்களின் புதிய தலைநகரான அமராவதியில் சிந்துவுக்கு 1,000 சதுர அடியில் வீட்டு மனை வழங்கப்படும். மேலும் குரூப்-1 அதிகாரி பணியும் அவருக்கு வழங்கப்படும். என்றார்.
தில்லி அரசின் சார்பில் சிந்துவுக்கு ரூ.2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு: பி.வி.சிந்துவுக்கு ரூ.75 லட்சம் ரொக்கப் பரிசோடு, பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளதாக
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (பிபிசிஎல்) அறிவித்துள்ளது. 2013 முதல் ஹைதராபாதில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்து
வரும் சிந்து, தற்போது உதவி மேலாளராக (விளையாட்டு) உள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதைத் தொடர்ந்து
அவர் துணை மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை இந்திய பாட்மிண்டன்
சங்கம் (பாய்), சிந்துவுக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. மத்தியப் பிரதேசத்தின்
சார்பில் சிந்துவுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்கத் தலைவர் சாமுண்டீஸ்வரநாத் சார்பில்
பி.எம்.டபிள்யூ காரும், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில்
எஸ்யூவி காரும் அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதுதவிர பல்வேறு நிறுவனங்கள் சிந்துவை விளம்பரத் தூதராக்க போட்டி போட்டு வருகின்றன.
மொத்தத்தில் ஒரே வெள்ளிப் பதக்கத்தால் பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார் சிந்து.
|
தங்க பதக்கம் வென்ற (Simone Biles )அமெரிக்க வீரர்களின் நிலை
உலகின் பல நாடுகளில் வீரர்கள் போட்டிகளில்
கலந்து பதக்கம் பெற்று அதற்காக பெறும் பரிசு தொகைக்கு வரி விலக்கு உண்டு ஆனால் அமெரிக்காவில்
அப்படி அல்ல வீரர்கள் பெறும் பரிசு பொருட்களுக்கு கட்டாய வரி விதிப்பு உண்டு இந்த
வரி விதிப்பிற்கு "victory tax" என்று பெயர். இது லாட்டரி டிக்கெட் வாங்கி அதன் மூலம் கிடைக்கும் பரிசு தொகை மாதிரிதான்
இதுவும் அதனால் இதற்கு வரி விதிப்பு உண்டு .இந்த வரி மெடலின்
மதிப்பிற்கும் பரிசு தொகைக்கும் தகுந்த படி விதிக்கப்படும்.
Gold medallists will receive $25,000, silver medallists
get $15,000, and bronze winners earn $10,000. But there's more, the medals
are also given a value and taxed. The value is based on the value of the
materials the medals are made of. Gold medals - which are mostly made of silver
with a gold plating - are worth roughly $600 based on current commodity
prices, silver medals are worth close to $300, bronze medals - which consist
mostly of copper - have barely any monetary value, approximately $4.
எந்த அளவிற்கு வரி விதிக்கப்படும் என்றால் அதிக வருமான உள்ளவரின்
பிரிவிற்கின் கீழ் இவர்கள் வந்தால் 39.6% சதவிகித ப்ராக்கெட்டிற்கு
வருவார்கள்.
நார்மலாக தங்க மெடல் வாங்குபவர்களுக்கு $9,900, வெள்ளி மெடல் வாங்குபவர்களுக்கு $5,940, வெண்கலம் வாங்குபவர்களுக்கு
$3,960. வரி விதிப்பு உண்டு. இது ஒரு மெடல் வாங்குபவர்களுக்கு மட்டும் அதிக மெடல் வாங்குபவர்களுக்கு
அவர்களின் வசதியை பொறுத்தும் அவர்கள் வாங்கும் மெடலின் எண்ணிக்கையை பொருத்தும் வரி
விகிதம் மாறுபடும்
Michael Phelps and Simone Biles, இருவரும்
மிக அதிக அளவில் தங்க மெடல் பெற்று இருப்பதால் இவர்கள் கட்டும் வருமான வரி மிக அதிகமாக
இருக்கும்
most countries subsidise the cost of training for the
Olympics and don't charge their athletes for winning. Most US athletes must pay for their own training
and few can sustain a professional living on their athletic winnings alone.
The US Olympic committee pays for health insurance and stipends for only a
small number of US athletes.
இப்படி விளையாட்டு வீரர்களின் மீது விதிக்கும்
வரியை நீக்க இங்குள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த ஜுலை மாதம் சட்ட திருத்த மசோதா
ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள் ஆனால் இது இன்னும் வோட்டு எடுப்புக்கிற்கு வரவில்லை.
நாட்டிற்காக விளையாடி போட்டியில் வெற்றி
பெறுபவர்களை பாராட்டி கெளரவிப்பதைவிட்டுவிட்டு
அவர்களுக்கு வரி விதிப்பதின் மூலம் தண்டனை தருவதாக பலரும் கருதுகிறார்கள் அது கூடிய
சீக்கிரம் மாறும் என்று நம்புவோமாக..
இந்திய வீரர்கள் வெற்ற்றி பெற்றால் மக்கள்
வரிப்பணம் கேள்வி கேட்பாறின்றி வாரி வீசப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க
வீரர்கள் வெற்றி பெற்றால் வீரர்களிடம் இருந்து வரி வதிப்பின் மூலம் அதிக வருமானம்
ஈட்டுகிறது. இப்படி இருந்த போதிலும் அமெரிக்க வீரர்கள் குறைகள்
ஏதும் சொல்லாமல் போட்டி போட்டு மெடல்களை அள்ளிக் குவிக்கிறார்கள் அப்படிபட்ட வீரர்களுக்கு
எனது ராயல் சல்யூட்
அன்புடன்
மதுரைத்தமிழன்
|
முன்பு ரவி ஸாஸ்திரி தான் வென்ற ஆடி காருக்கும், பின்னர் சச்சின் தான் வென்ற பெராரி காருக்கும் வரிவிலக்கு கேட்டு நின்றார்கள் இல்லை?
ReplyDeleteஎத்தனை வித்தியாசம்.....
ReplyDeleteமதுர.. இந்த இரண்டாவது படத்தில் சிவப்பு நிற சட்டை போட்டு கொண்டு பெருமையா ஒரு அம்மணி வாரங்களே.. அவங்கள நினைவில் இருக்கா?
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை இரண்டு தேசங்களுமே குற்றவாளிகள்தான்
ReplyDeleteதம +
ReplyDeleteவித்தியாசமான நாடுதான்! வென்றவர்களுக்கு ஊக்கம் அளிக்க சிறு பரிசுகள் கொடுக்கும் வேலையில் புதிய திறமையாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும்!
ReplyDelete