Monday, August 1, 2016



பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்



நமது சகோ பதிவர் ராஜி அவர்கள் பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்கபத்து டிப்ஸ்   என்று ஒரு பதிவு பகிர்ந்து இருந்தார்கள் அந்த டிப்ஸ்  எனக்கு உபயோகமாக இருந்தது அதாவது எனக்கொரு பதிவு போட விஷயம் கிடைச்சிருக்கு....... அந்த பதிவுதான் இந்தப் பதிவு ..நன்றி ராஜிம்மா ஹீஹீ




வாம்மா ராஜி! எப்படிம்மா இருக்கே?! ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து...  தோழிகள் ரெண்டு பேரும் அரட்டையடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?!

நல்லா இருக்கேன்ண்ணே!  நீங்க எப்பிடிண்ணே இருக்கீங்க?!
உன் ஃப்ரெண்டை கட்டிக்கிட்ட நான் எப்பிடி நல்லா இருப்பேன்?! எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கா. நீதான் புத்தி சொல்லிட்டு போகனும்.

அதெல்லாம் பெரிய விசயமில்லண்ணே! மொத்தமே பத்து விசயங்களை நீங்க கடைப்பிடிச்சா அவ ஏன் சண்டை போடுறா?!

என்னம்மா அந்த பத்து விசயம்?!

இங்கே சிவப்பு கலரில் இருப்பது நான் எழுதியது(மதுரைத்தமிழன்) கருப்பு கலரில் உள்ளது எல்லாம் ராஜி அவர்கள் எழுதியது.படிச்சு எஞ்சாய்ங்க மக்களே

1. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன தப்புகளை சொல்லி திட்டாதீங்க. நிதானமா பக்குவமா எடுத்து சொல்லுங்க.
( என்னம்மா வீட்டு செலவிற்குன்னு வைத்திருந்த ஐம்பாதாயிரத்தில்  சேலை வாங்கி இருக்க...அந்த சேலை மிகவும் அழகாக இருக்கிறது அதை பார்க்கும் போது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியும்மா... இனிம நமக்கு பசிக்கிறப்ப இந்த சேலையை நம் கண்ணால் பார்த்தாலே போது பசி அடங்கிடும் இப்ப பார்த்தியா இந்த சேலை வந்ததினால் இனிம உனக்கு சமைக்கும் வேலையே இல்லாமல் போயிடுத்து )

2.  பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா.
( என்ன சார் இன்று என்னை பார்த்ததும் சிரிச்சுகிட்டே இருக்கீங்க என்ன தப்பு பண்ணிங்க மறைக்காமல் சொல்லுங்க இல்லைம்மா நான் தப்பு ஏதும் பண்ணலைம்மா... தப்பு பண்ணலைன்னா நீங்க வழியிறது "அதுக்காகத்தான்' இருக்கும் மார்கழி மாச நாய் போல அதுக்கெல்லாம் இப்ப முடியவே முடியாது போய் வேலையை பாருங்க..)

3. முக்கியமான வேலைல இருக்கும் போது தொணதொணன்னு பேசாம வேலை முடிஞ்சதுக்கு பின்னாடி அது பத்தி பேசுங்க.
(டிவிலே முக்க்கியமான சீரியல் போய்கிட்டு இருக்கும் அது முடிஞ்ச பின் பேசலாமுன்னு பார்த்தா அதுவும் முடிகிற மாதிரி தெரியலை ஹும்ம்)

4. வேலைக்கு போற பொண்ணா இருந்தா அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நீங்களும் உங்க வேலை இடத்துல நடந்ததை பத்தி சொல்லுங்க.
(என்னம்மா உன் ஆபிஸில் இன்று என்ன நடந்துச்சு...அதுவாங்க நம்ம மாலதி இருக்காலே அவ ஹஸ்பெண்ட் நேற்று அவளுக்கு புதுசா ஒரு ஆடிக்கார் ஒன்று வாங்கி அவளுக்கு பிறந்த நாள் கிப்டா கொடுத்திருக்கிறார் ஹும்ம் நீங்களும் இருக்கிறீங்க பாருங்க.. உங்களை எனக்கு கட்டி வைச்ச அந்த ராஜி மட்டும் வரட்டும் அப்புறம் இருக்கு அவளுக்கு... சரிடா செல்லம்.. இன்று எங்க ஆபிஸில் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா உனக்கு... அதை தெரிஞ்சு எனக்கு என்ன ஆக போகிறது நீங்க காலையில் இருந்து இரவு வரை லொங்கு லொங்குன்னு வேலை பார்த்திட்டு மேனஜரிடம் நல்ல திட்டு வாங்கி வந்திருப்பீங்க... அதை போய் நான் கேட்டுகிட்டு இருக்கனும்மா என்ன.. போங்க போய் உருப்படியா கிச்சனில் கிடக்கும் பாத்திரங்களை க்ளீன் செய்து வையுங்கள் ரொம்ப புண்ணியமாவது போகும் )

5. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன விசயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க. அதே மாதிரி தப்பு செஞ்சீங்கன்னா, உடனே மன்னிப்பு கேளுங்க. தப்பில்ல.
( செல்லமே இன்று நான் சமைச்ச சாப்பாட்டை திட்டாமல் சாப்பிட்டதற்கு நன்றிம்மா. நன்றிம்மா...அப்புறம் ஊரில் இருந்து விமானத்தில் வந்த உங்கம்மாவை நம்ம கார்டிரைவரை அனுப்பி கூட்டி வர சொன்னது தப்பும்மா அந்த டிரைவர் நம்மகிட்ட 29 வருஷமா வேலை பார்துக்கிட்டு இருந்தாலும் உங்க அம்மாவை நான் தான் கூட்டி வந்திருக்கனும் ஆனால் என் உடம்புக்கு முடியலை அதனாலதான் போகலை இனிமே உடம்புக்கு முடியலைன்னாலும் நானே நேரில் போய் கூப்பிடுகிறேனம்மா அதனால் இந்த தடவை நான் செஞ்ச தப்பிற்கு என்னை மன்னித்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்மா..)

6. பொண்டாட்டி செஞ்ச தப்புக்களை சொல்லி காட்டிக்கிட்டே இருக்காதீங்க. அதேமாதிரி அவங்க பொறந்த வீட்டை பத்தி விளையாட்டுக்கூட குத்தம் சொல்லாதீங்க.
என்னம்மா நேற்று உனக்கு வாங்கி கொடுத்த ஐபோன் காணாமல் போச்சுல்ல அதை பற்றி கவலையே படாதே உண்மையை சொல்லப்ப் போனால் அந்த போன் பார்க்கவே நன்றாகவே இல்லே தெரியுமா? நான் இன்று போய் அதைவிட மிக நல்ல போனாக வாங்கி தருகிறேன் ஒகேவாடா செல்லம்... நேற்று உன் தங்கச்சி பையனும் உன் அப்பாவும் வீட்டிற்குள் கிரிக்கெட் விளையாடிய போது டிவி உடைஞ்சு போச்சு தெரியுமா அது அவங்க தப்பு இல்லைம்மா அந்த டிவியை தயாரிச்சவங்க மேலதான் தப்பும்மா பாரு கிரிக்கெட் பால் விழுந்தா உடைந்து போகிற மாதிரியா தயாரிப்பாங்க சரியான ஏமாற்று பேர்விழியாக இருக்கிறாங்க அந்த தயாரிப்பார்கள்)

7. பொண்டாட்டியை அடிக்கடி இல்லன்னாலும் எப்பவாச்சும் கூட்டி போங்க.
செல்லம் இங்கே பாரு  நாம் மலேசியாவிற்கு கடந்த மாதம்தான் போனோம் ஆனால் அதுவே ரொம்ப நாளான மாதிரி இருக்கிறது அதனால நாம் நாளை சிங்கபூருக்கு போவதற்கு  ப்ளைட் டிக்கெட் வாங்கி வந்திருக்கிறேன். இந்தா )

8.எதை பத்தியாவது பேசும்போது பிடிவாதமா இல்லாம பொண்டாட்டி சொல்லுறதை காது கொடுத்து கேளுங்க.
(என்னம்மா சரவணன் மீனாட்சியில் அந்த மீனாட்ச்சி பொண்ணு அழுதுச்சா பாவம்மா அந்த பொண்ணு அதை அழுதுச்சுன்னு நீ சொல்லும் போது என் மனசே சேர்ந்து அழுகுதம்மா அப்புறம் ஓ அந்த தெய்வ திருமகளா  சொல்லும்மா அதை பற்றி சொல்லும்மா நான் காது கொடுத்து கேட்கதான் இப்ப வந்திருக்கிறேன் ,,,,)

9. பொண்டாட்டி எதாவது கேட்டா முடிஞ்சா உடனே வாங்கி கொடுங்க. இல்லன்னா உண்மையான காரணம் சொல்லி இதமா மறுப்பு சொல்லுங்க.

( என்னம்மா போன மாசம் வாங்கின ஆடி காரின் கலர் உன் சேலைக்கு மேட்சாக இல்லையா சரி அப்புறம் என்ன கலரில் புது ஆடிகாரு வாங்கனும் என்று சொல்லு என்னது கோல்டன் கலரா? சாரிம்மா அந்த கலரில் அவர்கள் அந்த  காரை தாயாரிக்கவில்லையாம்மா ஆனால் அந்த கலரில் கார் தாயாரிக்க விண்ணப்பம் கொடுத்து வந்திருக்கிறேன் என்ன விலையானலும் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறேன்  கூடிய சீக்கிரம் கிடைத்துவிடும்மா )

10. மத்தவங்க எதிர்க்க குறை சொல்லாதீங்க. தனியா அழைச்சுட்டு போயி எடுத்து சொல்லுங்க.
என்ன்ம்மா இங்கே கொஞ்சம் உள்ளே வாயேன். இதை பார்த்தியா நான் இன்று ஆபிஸிற்கு போட்டு போக வைத்திருந்த ஒயிட் சர்ட்டில் மறந்தாப்பல சாப்பிட்டுவிட்டு துண்டு என்று நினைத்து துடைச்சுவிட்டாய் அது உனக்கு தெரிய வந்தால் கவலைப்பட்டாலும் படுவாய் அதனால்தான் சொல்லுகிறேன் நீ கவலைப்படாதே நான் வேறு ஒரு சர்ட்டை அயன் பண்ணி போட்டுவிட்டு ஆபிஸிற்கு போகிறேன் ஒகேவம்மா )

அம்மா தாயி! இம்புட்டு செய்யனுமா?! பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வர!!??
ஆமாம் அண்ணே இப்படி செஞ்சா பொண்டாட்டி மனசு கோணாம இருக்கும்

அம்மா தாயி இதற்கு பேசாம  நான் சந்நியாசம் வாங்கிட்டு போகிறேன் வழியை விடு ,,சந்நியாசம்  வாங்க பத்து டிப்ஸ் இருந்தா சொல்லும்மா

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. அடே... அடே .. அது சரி.. இம்புட்டு செஞ்சும் அம்மணி மனசு சரியாகாட்டி நம்ம உலைய்ப்பு எல்லாம் வீணா போகுமே.. அதுக்கு இப்படியே இருந்துடுறேன்.

    இதை படித்தவுடன் என்னுடைய பத்து கருத்தையும் போடலாம் என்ற நப்பாசை வந்துள்ளது.. பார்ப்போம்.

    தங்களின் சோகத்தை ரசித்து சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. போட்டுத் தாக்குங்க விசு....இப்பதான் உங்க பதிவு + இந்தப் பதிவு படிச்சு சிரிச்சு சிரிச்சு முடியலை இப்படி மேற்கும் கிழக்கும் புயல் அடிச்சா நாங்க என்ன செய்யறதாம்...

      Delete
  2. பதிவர் ராஜி அருமையான 10 யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைவிட சுலபமான ஒரே யோசனை, பெண்கள், திருமணம் செய்துகொள்ள ஆண்களைத் தேடுவதைவிட, ஆண் பொம்மை கிடைத்தால் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால், இருவரின் (உங்கள் சன்யாசம் போகும் ஆசையும்) ஆசையும் நிறைவேறியிருக்கும்.

    ReplyDelete
  3. ஹஹஹஹ் ....செம தமிழா....சிரிச்சு சிரிச்சு..முடிலப்பா

    கீதா

    ReplyDelete
  4. ஹஹஹஹ் ....செம தமிழா....சிரிச்சு சிரிச்சு..முடிலப்பா

    கீதா

    ReplyDelete
  5. ஹாஹாஹா! வழக்கம் போல செமையாக கலாய்த்து விட்டீர்கள்!

    ReplyDelete
  6. ராஜி அவர்களின் ஆலோசனைகளும்
    உங்கள் ஆலோசனைக்கு ஆலோசனைகளும்
    அருமை.வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  7. ஹாஹா உங்கள் ஆலோசனைகளும் நன்று! ரசித்தேன். அடுத்து விசுவும் எழுதப் போகிறாரா..... எழுதட்டும்... படிக்க நாங்களும் ரெடி!

    ReplyDelete
    Replies
    1. விசு எழுதிய பொண்டாட்டி மனசு கோணாமல் நடந்துக்க 10 டிப்ஸ் http://vishcornelius.blogspot.com/2016/08/blog-post_4.html

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.