இந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க
இந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க ஒலிம்பிக்கில் சில்வர் மெடல்வாங்கியது, ஒரிசாவில் ஏழை ஒருவன் வசதி இல்லாததால் தன் மனைவியின் பிணத்தை தூக்கி சென்றது.
போன்ற இரண்டு செய்திகள் மட்டும் வைராலாக பரவி பேஸ்புக் போராளிகள் பொங்கல்
வைத்தார்கள் அதன் பின் வேறு எந்த செய்திகளும் வைரலாக பரவவில்லை. நானும் எதாவது புதிய செய்திகள் வரும் பொங்கலாம் என்று நினைத்தால் ஒரு செய்தியும்
வரலை.
இப்படி இருந்தா
இந்தியா எப்படி வளரும்... பாரி வேந்தர் கைதாம் ஒரு பய தீக்குளிக்கல,
மதுவிலக்கு அமுல் படுத்திட்டாங்க போல அதனால ஒரு பய டவர் மேல் ஏறி தற்கொலை
பண்ணல, பாபர் மசூதியில் இன்னும் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கல,
பாகிஸ்தானும் இந்தியா மீது குண்டு ஏதும் போடல, மாட்டுகறி சாவும் ஏற்படல, தில்லியில இன்னுக் கற்பழிப்பு
நடக்கல, மோடி இன்னும் சந்திரமண்டலம் போக முயற்சிக்கல,
நயந்தாரா யாரையாவது காதலிச்சுட்டு இருந்தா இந்நேரம் அது புடுங்கி இருக்கும்
அதுவுமில்ல, சாகும் வயதில் புகழ் பெற்ற நடிகர்கள் டைரக்டர்கள் இருந்தும் இன்னும் சாகவில்லை. சசிகலா புஷ்பா அரெஸ்டும் நடக்கவில்லை இலங்கையிலும் தமிழர்களுக்கு பிரச்சனை
இல்லை, அண்ணன் அழகிரியும் வாய் திறக்கவில்லை, விஜய் டிவில நீயா நானாவும் சரியில்ல.... இப்படி எல்லாம்
நடந்தா அப்புறம் நாங்க என்ன பண்ணுவதாம்
ஆஹா இப்படி எழுதும் போது என்ன பண்ணுவது என்று எனக்கு ஐடியா கிடைத்துவிட்டது....
Trump to black voters: What do you have to lose?
அன்புடன்
மதுரைத்தமிழன்
நயன்தாரா புதுக் காதலில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தனவே.. நானும் ரௌடிதான் இயக்குனருடன்..
ReplyDeleteஎன்னது நயன் தாரா இன்னொருவரை காதலிக்கிறீரா? அப்ப இந்த தடவை எனக்கு சான்ஸ் இல்லையா?
Deleteவிஜய் டீவி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்ததே.. அதை நீங்கள் பார்க்கவில்லையா? அதில்தான் செய்தியைக் கசிய விட்டார்கள்! அருகருகே வேறு அமர்ந்திருந்தார்கள். மைக் பிடித்துப் பேசும்போது இயக்குனரின் வழிசலுக்கு அளவே இல்லை!
Delete//அப்ப இந்த தடவை எனக்கு சான்ஸ் இல்லையா?//
அவரு லவ் பண்ணினா என்னங்க.. நீங்க பாட்டுக்கு நீங்களும் லவ் பண்ணுங்க!
:)))
ஸ்ரீராம் சொல்வது சரியெனத்தான்படுகிறது
ReplyDeleteஅப்ப எனக்கு சான்ஸ் இல்லையென்று நீங்களும் சொல்லிகிறீர்கள் ஹும்ம்ம்ம்ம்
Delete