Wednesday, August 24, 2016



டிப்ஸ் டிப்ஸ் (நகைச்சுவை)

உடல் எடையை குறைக்க : நாம் அதிகமாகவும் திங்க வேண்டும். அதே நேரத்தில் குண்டாகவும் ஆகக் கூடாது என்று நினைத்தால் இதை கடை பிடியுங்கள்... உங்களுக்கு வேண்டிய உணவை பிடித்த அளவு சாப்பிடுங்கள் .
சாப்பிட்டு முடித்தவுடன் இரண்டு பேதி மாத்திரையை உட்கொள்ளுங்கள் அதன் பின் பாருங்கள் நீங்கள் நிச்சயம் எடை கூடவே மாட்டீர்கள். முடிந்தால் ஒவ்வொரு வேளை உணவின் போது இதை கண்டிப்பாக கடை பிடியுங்கள்.

பக்கத்து வீட்டுக்காரனை வெறுப்பேற்ற : அவன் வீட்டில் என்ன டிவி வைத்திருக்கான் என்பதை அறிந்து கொண்டு அந்த டீவிக்கு ஏற்ற ரிமோட்டை வாங்கி வைத்து  அவன் வீட்டிற்கு வெளியே நின்று அவன் டீவியை அணைத்து இருக்கும் போது ஆன் செய்யுங்கள் அவன் சீரியஸாக சீரியல் பார்த்து கொண்டிருக்கும் போது நீயூஸ் சேனலுக்கு மாற்றிவிடுங்கள் உங்களுக்கு சந்தோஷமாகவும் அவனுக்கு வெறுப்பாகவும் இருக்கும்


லூசான பேண்டை சரி செய்ய: உங்களது பேண்ட் லூசாக இருந்தால் உடனே தூக்கி எறிந்துவிட வேண்டாம் உடனே நீங்கள் உண்ணும் உணவின் அளவை அதிகரித்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்


கல்யாண செலவை குறைக்க : உங்களுக்கு இரண்டு பெண்கள் இருந்தால் ஒரே மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்தால் கல்யாண செலவை குறைத்துவிடலாம் ( அப்படிபட்ட மாப்பிள்ளை கிடைக்க வில்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் )


வீட்டு செலவை குறைக்க : உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் யாரும் குடும்பத்தோட வந்தால் அவர்களிடம் கூச்சபடாதீங்க இந்த வீட்டை உங்க வீடு போல நினைச்சு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் வரும் நேரத்தில் கிச்சனில் உள்ள பொருட்களை மிக மிக குறைந்த அளவில் வைத்துவிட்டு உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிடுங்கள் . வந்தவர்களோ வீட்டிற்கு தேவையான மளிகை சாமான் களை வாங்கி போட்டு அவர்களே சமைக்க வேண்டும் என்பதால் சீக்கிரம் கிளம்பி விடுவார்கள் அப்படி அவர்கள் வரும் நேரத்தில் பக்கத்து வீட்டுகாரர்களிடம் உங்களுக்கு தேவையான உணவை அவர்கள் வீட்டிலேயே சாப்பிடும்படி ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்( இந்த ஐடியாவை நான் உங்கள் வீட்டிற்கு வரும் போது மட்டும் செய்து வீடாதீர்கள் மக்களே )

செல்பி  எடுப்பதை குறைக்க : 10 தடவை செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் போடும் போது ஒவ்வொரு 10 செல்பி படம் எடுக்கும் போது ஒரு ஆங்கில நாவலை படித்து முடிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்து கொள்ளுங்கள் அப்படி செய்தால் செல்பி படம் எடுக்கும் அளவு குறையும்

பைக்கின் பெட் ரோல் செலவை குறைக்க : போகும் இடத்திற்கு பைக்கை தள்ளி கொண்டே சென்றால் குறைக்கலாம்

சத்தம் இல்லாமல் குசு விட : குசு போடும் போது காதில் ஹெட் போனை மாட்டிக் கொள்ளுங்கள்


உங்களுக்கு  காண்டம் வாங்க காசு இல்லை என்றால் குழந்தையை வளர்க்க காசு இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. எல்லாமே அதிரடி சரவெடி யோசனைகளாக இருக்கிறதே.! செயல்படுத்தி பார்ப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. எல்லாமே ஆகக் கூடிய யோசனைதான்
    படிக்கத்தான் வித்தியாசமாகத் தெரிகிறது
    ஒன்றிரண்டை செய்து பார்க்கவும் ஆசையிருக்கிறது
    குறிப்பாக ரிமோட்
    உதை பட உதவும் அருமையான குறிப்புக்கள்
    பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஹஹஹஹஹஹஹ்ஹ் இதை நீங்கள் செயல்படுத்திப் பார்த்தீர்களோ??!! பூரிக்கட்டை பறந்ததினால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத்திலா.....அஹ்ஹஹஹஹஹ்

    ReplyDelete
  4. இவ்வையகம் என்பதை இவ்வலையுலகம் என்றும் சொல்லலாம்....ஹிஹிஹிஹி..

    ReplyDelete
  5. யோசனைகள் சரிதான். கடைபிடிப்பது சாத்தியமா?

    ReplyDelete
  6. அட நல்ல யோசனைகளாக இருக்கிறதே! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.