Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்ல படம் தெளிவான கருத்துக்கள்.இன்றைய தமிழனுக்கு அவசியமான ஒன்று.கல்வியில் வீண் டாம்பீகம் பார்த்து அரசு பள்ளிகளை ஒதுக்குவது தவறு என துணிந்து சொல்ற படம்.வாழ்த்துக்கள்
ReplyDeleteநாம் பள்ளிகளை குறை சொல்லுவதைவிட பெற்றோர்களைதான் குறை சொல்லவேண்டும் எல்லாம் அவர்களிடத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது
Deleteமிக அருமையான படம். பார்த்துவிட்டேன். கருத்துகள் செமையா இருக்கும். சாட்டை பார்த்தீங்களா தமிழா. அதுவும் மிக மிக நல்ல படம். ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று..
ReplyDeleteகீதா
சாட்டை பார்க்கவில்லை நீங்க சொன்ன பிறகு அதை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது
Deleteதல: ஹிந்துல ஏதோ விமர்ச்சி இருக்காங்க. உங்க விமர்சனத்தில் மூனு காணொளி மட்டுமே இருக்கு. நீங்களும் ஆரூர் மூனா, ஜாக்கி சேகர் மாதிரி ஆயிட்டீங்க போல.
ReplyDeleteவலைதளத்தில் எழுதுவதை விட்டுவிட்டு எல்லாரும் காணொளிக்குத்தாவுறாங்க. காணொளியால் கமர்சியல் வருமானம் வரும் என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை. நான் உங்களை அப்படி சொல்லவில்லை!
பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்கணும்னு தன் குடும்ப சூழல், வருமானம் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கிறுக்குப் ப்பிடிச்சு அலையும் அம்மா மார்களை யாரும் இந்த "அப்பா"வில் கடுமையாக விமர்சிச்ச மாதிரித் தெரியவில்லை. நீங்களும் பூரிக்கட்டை அடிக்கு பயந்து அடக்கி வாசிச்சுட்டீங்களா என்னனு தெரியலை..
இந்தமாரி அப்பாக்கள் எல்லாம் நம்ம நாட்டைத் திருத்த முடியாது. சும்மா இதுவும் ஒரு சினிமாதான். அவன் அவன் படத்தைப்பார்த்துட்டு நல்ல படம்னு ட்டு போயிட்டே இருப்பான். திருந்தப் போவதில்லை.
***“இந்த உலகம் ரொம்ப அழகானது” என்று தன் மகனிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. “இந்த உலகம் ரொம்ப மோசமானது” என்று சொல்லித் தன் மகனை வளர்க்கிறார் தம்பி ராமையா. இந்த முரண்பாடுதான் மொத்தப் படமும். குழந்தையை வளர்க்கும் முறையில் இன்று உள்ள சிக்கல்கள் பலவற்றையும் பதின் பருவத்து இனக் கவர்ச்சி உட்பட படம் அலசுகிறது. ****
ஆமா, இந்த உலகம் அழகானதா என்ன?
தங்கள் கருத்தென்ன?னு சொல்லுங்க!!
//தல: ஹிந்துல ஏதோ விமர்ச்சி இருக்காங்க. உங்க விமர்சனத்தில் மூனு காணொளி மட்டுமே இருக்கு. நீங்களும் ஆரூர் மூனா, ஜாக்கி சேகர் மாதிரி ஆயிட்டீங்க போல.வலைதளத்தில் எழுதுவதை விட்டுவிட்டு எல்லாரும் காணொளிக்குத்தாவுறாங்க. காணொளியால் கமர்சியல் வருமானம் வரும் என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை. நான் உங்களை அப்படி சொல்லவில்லை!
Deleteபாஸ் நீங்க பெரியாட்களோட என்னை கம்பேர் பண்ணாதீங்க... நான் மிக சாதாரண மனிதன் வலை உலகத்தின் மூலம் ஏதும் சாதிக்க எழுதுவதில்லை. நான் எந்த பதிவுகள் எழுதினாலும் அதற்கு சம்பந்தப்பட்ட படங்களை இடுவதுண்டு அது போல பதிவு சம்பந்ததப்பட்ட காணொளிகளை ஏதும் கண்ணில் பட்டால் அதையும் பதிவில் சேர்த்து வெளியிடுவது என் வழக்கம் அது போல்த்தான் இந்த பட சம்பந்தப்பட்ட காணொளிகளை இணைத்துள்ளேன் அவ்வளவுதாங்க
///பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்கணும்னு தன் குடும்ப சூழல், வருமானம் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கிறுக்குப் ப்பிடிச்சு அலையும் அம்மா மார்களை யாரும் இந்த "அப்பா"வில் கடுமையாக விமர்சிச்ச மாதிரித் தெரியவில்லை. நீங்களும் பூரிக்கட்டை அடிக்கு பயந்து அடக்கி வாசிச்சுட்டீங்களா என்னனு தெரியலை..////
அம்மாமார்களை அதிகம் விமர்சித்தால் அப்பா சொல்ல வந்த விஷயங்கள் திசை மாறி போய்விடக் கூடும் என பலர் நினைத்து இருக்கலாம் நான் ஏன் விசாரிக்கவில்லை என்றால் நான் எதையும் மிக டீப்பாக விவாதிக்க மாட்டேன் ஒரு சினிமாவோ அல்லது சம்பவமோ அல்லது ஒரு நிகழ்வோ என்னை பாதிக்கும் போது அல்லது கவரும் போது மனதில் உடனே என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே சொல்லிவிடுவேன் அது போலத்தான் இந்த படம் எனக்கு பிடித்து இருந்தது அதனால் அதை பற்றி என் மந்தில் தோன்றியதை மிக சுருக்கமாக சொல்லிவிட்டேன் அவ்வளவுதாங்க்
இந்த பூரிக்கட்டை விவகாரம் நான் இணையத்திற்காகவிட்ட ஒரு கற்பனை பாத்திரம் உண்மையில் என்னைவிட என் மனைவி அதிகம் படித்திருக்கிறாள் மிக மிக அதிகம் சம்பாதிக்கிறாள் அவளுக்கு முழு சுதந்திரம் நான் கொடுத்திருக்கிறேன் அதை சமயத்தில் எனது விருப்பிற்கு எதிராக ஒரு செயலை அவள் செய்தால் என்றால் நான் தூக்கி ஏறிய தயங்கவும்மாட்டேன் என்பது அவளுக்கு நன்றாக தெரியும் எனக்கு பணத்தின் மீதோ அல்லது வேறு ஏதன் மீதும் அதிக பிடிப்பு கிடையாது அதனால் நான் எதற்கும் கவலைப்படுவதில்லை நான் யார் மீதும் எதையும் திணிப்பதில்லை அது போல யாரும் என் மீது திணிக்க அனுமதிப்பதும் இல்லை. அது போல வீட்டிலோ அல்லது வெளியிலோ நான் யார் கூடவும் விவாதம் புரிவதில்லை எனது கருத்து இதுதான் அதில் நான் மாற்றம் ஏதும் செய்வதில்லை அல்லது மற்றவர்கள் சொல்லும் மாற்று கருத்து எனக்கு மிகவும் சரியென்று மனதில் தோன்றினால் அதை ஏற்றுக் கொள்ளவும் தவறுவதில்லை முக்கியமாக எனது கருத்து இதுதான் என்று சொல்வேனே தவிர அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்போது வற்புறுத்துவதில்லை
///இந்தமாரி அப்பாக்கள் எல்லாம் நம்ம நாட்டைத் திருத்த முடியாது. சும்மா இதுவும் ஒரு சினிமாதான். அவன் அவன் படத்தைப்பார்த்துட்டு நல்ல படம்னு ட்டு போயிட்டே இருப்பான். திருந்தப் போவதில்லை.///
இந்த படம் நாட்டை திருத்திவிட போவதில்லை ஆனால் ஒரு சில மனங்களை திருத்திவிடும் என்பதில் எனக்கு நம்மபிக்கை இருக்கிறது உதாரணமாக எனது மனைவியின் மனதில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன இந்த படத்தில் வரும் அப்பாவின் செயல்பாடுகள் பல என்னுடைய செயல்பாடுகள் போல உள்ளன அதுமட்டுமல்ல மேலும் பல விஷயங்களை எனக்கு உணர்த்தி இருக்கின்றன
***“இந்த உலகம் ரொம்ப அழகானது” என்று தன் மகனிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. “இந்த உலகம் ரொம்ப மோசமானது” என்று சொல்லித் தன் மகனை வளர்க்கிறார் தம்பி ராமையா. இந்த முரண்பாடுதான் மொத்தப் படமும். குழந்தையை வளர்க்கும் முறையில் இன்று உள்ள சிக்கல்கள் பலவற்றையும் பதின் பருவத்து இனக் கவர்ச்சி உட்பட படம் அலசுகிறது. ****
அப்பா படத்தை மூன்று வரிகளில் மிக அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் பாஸ். யூ ஆர் கிரேட் வருண்
///ஆமா, இந்த உலகம் அழகானதா என்ன?///
இதற்கு என் பதில் உலகம் அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்து கொண்டே உலகத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் இந்த கால மக்கள்
தங்கள் கருத்தென்ன?னு சொல்லுங்க!!
வருண் நான் நிறைய தடவை பல பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் இங்கு நான் எழுதுவது எனது பொழுது போக்கிற்காக மட்டுமே தமிழை வளர்க்கவோ அல்லது சமுதாயத்தை திருத்தவோ அல்ல இபடி நான் எழுதி பதிவதால் தமிழ் தெரிந்தவர்களோட பேசி மகிழ்வது போல ஒரு உணர்வு உண்டாக்கிறது அவ்வளவுதான் பாஸ்
அப்ப வரட்டுமா பாஸ் நீங்க கேட்ட கேள்விகளுக்கு என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டேன் நான் சொன்னது சரியென்று உங்களுக்கு புரிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவ்று என்று தெரிந்தால் இந்த மதுரைத்தமிழனுக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் என்று நினைத்து கொள்ளுங்கள் ஒகே வா
படம் நானும் பார்த்தேன். எனக்கு பிடித்து; நல்ல படம்; சில இடங்களில் சரியாக செய்து இருக்கலாம்' சரியில்லை. குறை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படத்தில். கபாலி படத்தில் பலரும் சிலாகிக்கும் "மகிழ்ச்சி" என்ற வார்த்தையை...அடிக்கடி மகிழ்ச்சி என்று ச.கனி படத்தில் சொல்வார். அப்புறம் தான் இந்த படம் கபாலிக்கு முன்பு வந்தது என்று தெரிந்த்து. நல்ல காலம் இந்த படம் கபாலிக்கு அப்புறம் ரிலீஸ் ஆகவில்லை.ச.கனி பிழைத்தார்!
ReplyDeleteஆமாம் குறை சொல்லுவதென்றால் குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக இந்த படத்தில் என்ன நிறைவாக இருக்கிறது என்று பார்த்து அந்த நிறையை நாம் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து பயன்படுத்தினால் நன்றாக இரூக்கும்.
Deleteதிருக்குறளை சின்ன வயதில் இருந்து படித்து வளர்ந்த நம்மை போல பெரியவர்களும் இந்த கால சிறுவர்களும் அதில் சொல்லிய்வற்றை புரிந்து அதன்படி செயல்படாமல் இருந்து கொண்டு இந்த மாதிரி நல்ல கருத்தை சொல்லும் திரைப்படங்களை பார்த்தா மாறப் போகிறோம் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன்
பார்க்க வேண்டும்.... இங்கே தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை. ஊருக்குப் போனால் தான் சாத்தியம்.
ReplyDelete