Saturday, August 20, 2016



இதுதான் பேஸ்புக் நீதி



அழகான பெண்கள்
முட்டாள்தனமாக எது சொன்னாலும்
அது அறிவார்ந்த
வார்த்தைகளாக ஆண்களால்
ஏற்றுக் கொள்ளப்படும்




ஒரு தவறை சரி செய்வது எப்படி என்பதை
பெண்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்..
அது ரொம்ப எளிது
தப்பு பண்ணிட்டு அழுதுவிட்டோம் என்றால்
தப்பு சரியாகிவிடும்....ஹீஹீஹீ


கல்யாண வாழ்க்கையில் ஒரு ஆண் தன் மனைவி கல்யாணத்தின் போது எப்படி இருந்தாளோ அப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என்று போராடுகிறான். அது போல ஒரு பெண் கல்யாணத்தின் போது கணவன் எப்படி  இருந்தானோ அப்படியே இல்லாமல் மாறிவிட வேண்டும் என்று போராடுகிறாள். இந்த போராட்டம் வாழ்க்கையின் இறுதி வரை தொடர்கிறது. இதில் ஒருவரின் வாழ்க்கை முடியும் போதுதான் உணர்கிறார்கள். நாம் தவறான போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறோம் என்று... இதுதான் கல்யாண வாழ்க்கையடா

பெண்கள் ரொம்ப மோசம் ஒரு பொருளை  வைச்ச இடத்தில் இருந்து எடுத்துவிடுகிறார்கள்...ஹும்ம்ம்ம்ம்ம்

பெண்களை படிக்க வைக்கிறதே ரொம்ப வேஸ்ட் காரணம் அவர்களுக்குதான் எல்லாம் தெரியுமே?? ஹீஹீ


தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்கள் மேல் பெண்கள் ஆசை கொண்டதால் மட்டுமே இந்திய பெண்கள் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் இது போல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு பாட்டிலோ அல்லது ஒரு பெண்ணோ பரிசாக தவோம் என்று அறிவித்து இருந்தால் இந்திய ஆண்கள் அத்தனை பதக்கங்களையும் அள்ளி கொண்டு வந்திருப்பார்கள் அப்படி செய்யாமல் என்னமோ பெண்கள் மட்டும் சாதனை செய்வதாக பேசுவது மிகவும் கண்டிக்கதக்கது

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. வணக்கம் சார்..இதெல்லாம் சரியா....தங்கத்துல உள்ள ஆசையில வாங்குனாங்கன்னு சொல்றது....இரு வெண்கலம் வாங்க கூட...ஆண்களால் முடியாத நிலையில் இப்படித்தான் சொல்லி தேற்றிக்கொள்ளனும் போல

    ReplyDelete
    Replies

    1. நகைச்சுவைக்காக இதை எழுதினால் அதை போய் சீரியஸா படிக்ககீறீங்களேம்மா

      Delete
  2. ஹா... ஹா....
    கடைசியில இப்படிப் போட்டுத் தாக்கிட்டீங்களே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.