Tuesday, August 9, 2016



avargal unmaigal

ஒலிம்பிக் கோல்ட் மெடலை  இப்படிதான் இந்தியா பெறுமோ?


என்ன மோடி சாப் இந்தியா ஒரு கோல்டு மெடலை கூட வாங்கலையே

ஹலோ மதுரைத்தமிழா அடுத்த தடவை அமெரிக்கா வரும் போது அவங்க வாங்கிய கோல்ட் மெடலை இந்தியாவில் முதலீடு செய்ய சொல்லி நான் வாங்கி வந்திட மாட்டேனா என்ன!

----------------------------------

என்னை தாக்குங்கள்; தலித்துக்களை விட்டுவிடுங்கள்: மோடி

அண்ணன் என்ன சொல்ல வருகிறார்
என்றால் தேர்தல் கூடிய சிக்கிரம் வரப் போகிறது
அதனால் இப்படி பட்ட பஞ்ச்' டயலாக்கை
சொல்லுவோம் என்று நினைக்கிறார் போல இருக்கு
----------------------

avargal unmaigal

மறைமுகமாக பணத்தை பட்டுவாடா பண்ணுற போட்டியை
ஒலிம்பிக்கில் வைத்திருந்தா
இந்திய மூன்று மெடலையும் தட்டிக்கிட்டு வந்திருப்பாங்க
அதைவிட்டுவிட்டு இந்தியனுக்கே தெரியாத விளையாட்டை
ஒலிம்பிக்கில் வைச்சிருந்தா இவங்க என்ன பண்ணுவாங்க

திமுக ஆட்சியில் அம்பாசிடர் கார் போல இருந்த ஆவின் நிறுவனம் இப்போ ஆடி கார் போல ஜொலிக்கிறது - அமைச்சர் சண்முகநாதன் #

மதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ் : பால் விலை அதிகமாக இருப்பதற்கான காரணத்தை சொல்லுகிறார் போல இருக்கிறது

ஆகஸ்ட் 15 யை முன்னிட்டு பாதுகாப்பிற்க்காக சென்னை விமான நிலையத்திற்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏலேய் முதலில் விமான நிலையத்தில் உள்ள சீலிங்க் உடைந்து விழுந்து அந்த போலீஸ்காரங்கள் சாகாமல் இருக்க பாதுகாப்பை ஏற்படுத்துங்கள் 



ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மெடலை பெறவில்லை என்று அவர்களை கிண்டல் கேலி செய்யும் பேமானி பயபுள்ளைகள் தெருவில் நடக்கும் பொங்கல் விழாக்களில் கூட ஜெயிக்க முடியாதவர்கள். இந்த பேமானிகள்தான் வசதி வாய்ப்புகள் இல்லாதிருந்தும் ஒலிம்பிக் வரை சென்ற இந்திய வீரர்களை கேலி செய்து பேஸ்புக்கில் எழுதி கொண்டிருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

#olympic  #india   #goldmedal #2016
09 Aug 2016

1 comments:

  1. செய்திகளும் அதற்கான
    விளக்கப் பதிவுகளும் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.