Thursday, August 4, 2016



வாழ்க்கையில் முன்னேற சுலபமான வழிகள்


வாழ்க்கையில் முன்னேற யாருக்குதான் ஆசை இருக்காது. அப்படி ஆசை இருந்தும் அதற்கான வழிகள் தெரியாமல் பலரும் இன்னும் முன்னேறாமல் அப்படியே இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களின் வாழ்க்கையில் சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்த சிறந்த வழிமுறைகளை  நான் இங்கே சொல்லி இருக்கிறேன். அதை பயன்படுத்தி பலனை காண்பது என்பது உங்கள் கையில்தான்.



வாழ்க்கையில் முன்னேற முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியாமான ஒன்று உங்கள் வீட்டில் இருக்கும் கடிகாரம் வாட்ஸ் ஆகியவற்றில் 30 நிமிடம் அதிகப்படுத்தி வைக்கவும். இப்படி செய்வதானால் மற்றவர்களைவிட நீங்கள் எல்லாவற்றிலும் 30 நிமிடங்கள் முன்னால் இருப்பீர்கள்..

இப்படி 30 நிமிடம் முன்னால் இருப்பதால் நீங்கள் வேலைக்கு செல்லும் போது மற்றவர்களை விட 30 நிமிடம் முன்னால் இருப்பீர்கள்.

இப்படி 30 நிமிடம் முன்னால் இருப்பதால் பஸ்ஸில் ,ரயிலில் வேலைக்கு செல்பவர்களாக நீங்கள் இருப்பவர்களாக இருந்தால் எல்லோறையும் விட முதலில் சென்று முன் சீட்டில் இடம் பிடித்து மற்ரவர்களை விட முன்னால் இருப்பீர்கள்

நீங்கள் சொந்த பிஸினஸ் செய்பவர்களாக இருந்தால் உங்கள் ஆபிஸை உயர்ந்த பில்டிங்கில் கடைசிமாடியில் வைத்து கொள்ளுங்கள் இதனால் நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள்


நீங்கள் ஆபிஸில் வேலை செய்பவர்களாக இருந்தால் நீங்கள் அதிக உயரமுள்ள டேபிளையும் சேரையும் உங்கள் சொந்த செலவில் வாங்கி போட்டு அதில் உட்காரங்கள் அதன் பின் நீங்கள் மற்றவர்களை விட மிக உயரமான இடத்தில் முன்னேறி உட்கார்ந்து இருப்பீர்கள்


நீங்கள் எந்த கம்பெனியில் வேலை செய்தாலும் உங்கள் முதலாளியை நீங்கள் வேலை வாங்க செய்ய வேண்டும் அப்போதுதான் நீங்கள் முதலாலீயைவிட ஒருபடி உயர்ந்து இருப்பீர்கள். முதலாளியை எப்படி வேலை வாங்குவது என்பது உங்களுக்கு தெரியவில்லையா?கவலைப்படாதீர்கள் அதற்கு நான் ஒரு வழி சொல்லி தருகிறேன் அது மிகவும் எளிததுதான் அந்த வழிப்படி நீங்கள் அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யாதீர்கள் அப்படி நீங்கள் செய்யாமல் இருக்கும் போது உங்கள் முதலாளி உங்களிடம் வந்து அதை செய்ய இதை செய்ய என்று சொல்லுவார் இப்படி அவரை சொல்ல செய்வதன் மூலம் நீங்கள் அவரை வேலை வாங்கி நீங்கள் அவருக்கு முதலாளியாக இருக்கலாம்.

அதிக அளவு சாப்பிட்டு பெரிய தொப்பையை வளர்த்து  வைத்து கொள்ளுங்கள் அப்படி செய்வதால் தொப்பை இல்லாதவர்களை விட நீங்கள் சற்று முன்னேற்றம் அடைந்தவர்களாக இருப்பீர்கள்



இதை படித்த  உங்களுக்கு இப்ப முன்னேற ஆசை வந்திருக்கும்தானே? இந்த ஆலோசனையை பயன்படுத்திக் வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த நிலைக்கு செல்லுங்கள்!

இன்னும் நிறைய ஐடியா இருக்கு ஆனால் இப்போதைக்கு உங்கள் முன்னேற்றத்திற்கு இது போதும் என நினைக்கிறேன் சரிதானே மக்களே


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. சீரியஸ் பதிவு சரி நம்ம தமிழனும் நாலு வார்த்தை நல்லதா சொல்லிருக்காருனு வந்து பார்த்தா படம் எல்லாம் நல்லா படு ஷோக்கா கீது...அட பரவாயில்லையே மெய்யாலுமே நல்லதுதான்னு பார்ர்ர்ர்ர்ர்..........த்தா ஹஹ்ஹாஹ் மொக்கை சிரியஸ் ! நல்லாருங்கப்பு!! ஹஹஹஹ்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரொமபவும் சீரியஸா இருந்தாலும் அதிக காமெடியாக இருந்தாலும் பலருக்கு போரடித்துவிடும் அதனால் சிரியஸாக சொல்லி சென்று இறுதியில் சிரிக்க வைத்துவிட்டேன் இப்ப பாருங்க யாரும் நான் சொன்ன தகவலை மறக்க மாட்டார்கள்

      Delete
  2. ஆபீசில் உயரமான சேர் டேபிள் போட்டு (அதுவும் சொந்தச் செலவுல சூனியம் மாதிரி.).. உயரமா இருக்கச் சொன்னது என்னைப் போன்றோருக்கு நல்ல வழிதான் ஹிஹி ஆனா ஆஃபீஸ் போலையே நான்....என்னைப் போன்றவர்களுக்கு நல்ல சமமான உயரமான செருப்பு போட வழி சொல்லியிருக்கலாம்...ஹும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆபிஸ் போகலைன்னா என்ன உயர்ந்த குடியிருப்பில் 20 மாடியில் வீடு வாங்கிடுங்கள் அதுக்கு அப்புறம் நம்ம பதிவர்களில் நீங்கள்தான் உயர்ந்த இடத்தில் இருப்பவராகிவிடுவீர்கள்

      Delete
  3. வாழ்வில் முன்னேற நாமும் வாசிப்போமேன்னு வந்தா... ஹா...ஹா... எல்லாமே எப்பவும் போல நக்கல்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்வில் முன்னேறியவர்தானே நீங்கள். அதனால்தான் இப்படி ஒரு பதிவு

      Delete
  4. அட ..ஆச்சரியமா இருக்கே ...நல்ல யோசனை ..
    முதல் பாரா படிக்கும் வரை...

    அதானே பார்த்தேன் ....இரண்டாம் பாரா முதல் கடைசி வரை

    ReplyDelete
  5. நல்ல யோசனைகள்.... பின்பற்றலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. வெங்க்ட் நீங்கள் அன்னம் போல தண்ணிரில் இருந்து பாலை பிரித்தெடுத்து அருந்துவது போல நல்ல செய்திகளை மட்டும் அறிந்து பின்பற்ற முயற்சிக்கலாம் என சொல்லி இருக்கிறீர்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.