Sunday, August 21, 2016



avargal unmaigal
ஒலிம்பிக்கிற்க்கு பின் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் இந்திய தலைவர்கள்  ?

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய பெண்களை பாராட்டுவதும் அவர்களுக்கு பரிசு கொடுப்பதும் தப்பில்லை. ஆனால் அந்த விளையாட்டு துறையை மேம்படுத்த எந்த வித முயற்சிகள் எடுக்காமல் இருந்துவிட்டு பின்னர் யாரவது தப்பி தவறி தன் சொந்த முயற்சியால் அல்லது அதிர்ஷடத்தால் வெற்றி பெற்றால் உடனே அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி மக்களின் வரிப்பணத்தை தங்கள் சொந்த பணத்தை போல ஒருவருக்கே அள்ளி இறைக்கின்றனர் இந்த கூறு கெட்ட இந்திய தலைவர்கள்


இப்படி ஒருவர் ஜெயித்தார் என்றால் அவர்களை பாராட்டி மத்திய அரசாங்கமும் வெற்றி பெற்றவர்களின் மாநிலத்தை சார்ந்த முதல்வர்களும் அரசாங்கத்தின் மிகப் பெரிய விருதை கொடுத்து பாராட்டி அவர்களை கெளரவப்படுத்தி ஊக்கப்படுத்திவிட்டு, பின் பரிசுகளை வாரி வாரி இறைப்பதற்கு பதிலாக மக்கள் வரிப்பணத்தை சரியாக திட்டமிட்டு  போட்டிக்கும் முன்பே செலவழித்து போட்டியாளர்களை ஊக்குவிற்று அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுத்தால் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று பதக்கங்களை அள்ளி குவித்து இருப்பார்களே நம் வீர்ர்கள். ஆனால் அப்படி ஏது செய்யாமல் இப்படி மக்கள் வரிபணத்தை கணக்கின்றி அள்ளி செலவிடுவது எந்த விதத்தில் நியாயம் இதை இந்திய தலைவர்கள் மட்டுமல்ல . எந்த இந்திய மக்களும் சிந்திக்கவில்லை என்பது மிகவும் வருத்தப்படக் கூடிய செய்திதான்.


என்னை பொறுத்தவரை ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்ல அதில் கலந்து கொண்ட அனைவரும் மிக சிறந்த வீரர்களே அதனால் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அள்ளி கொட்டும் இந்திய அரசுகள் போட்டியில் கலந்து கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் தோல்வியை தழுவியவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் என்று சில லட்சங்களையாவது அவர்களுக்கு கொடுத்து அவர்களை ஊக்க்குவிக்கலாமே இது அவர்களுக்கு மிக தெம்பையாவது கொடுத்து அடுத்த போட்டிகளில் வெற்றி பெற ஒரு உந்துதலையாவது கொடுத்திருக்குமே


அப்படி செய்யாவிட்டால் ஒவ்வொரு இந்திய வீரர்களின் எண்ணமும் நோக்கமும் அரசாங்க வேலையை பெறவதாகத்தான் இருக்குமே தவிர போட்டியில் மெடல்களை பெறுவது அல்ல என்றாகிவிடும்
__________________________________________________________________________________________________
ஒலிம்பிக் தொடர்புடைய பதிவுகள்

 __________________________________________________________________________________________________
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : வெள்ளி மெடல் பெற்ற சிந்துவிற்கு பாராட்டையும் பரிசு தொகையையும் அள்ளி தந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயூடு  சிந்துவின் வெற்றியை ஆந்திராவின் வெற்றியாக பார்க்க கூடாது இந்தியர்களின் வெற்றியாக பார்க்க வேண்டும் என்று சொன்னார் அப்படி சொன்னவர் மல்யூத்த போட்டியில் வெற்றி பெற்ற மாலிக்கையும் இந்தியரின் வெற்றியாக கருதி அவருக்கும் இது போல ஏன் பரிசுகளை அள்ளி தரக் கூடாது

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.