Friday, August 19, 2016



இன்பமே உந்தன் பேர் பெண்மையோ (வயது வந்தவர்களுக்காக மட்டும் )



பள்ளியறையிலும்
பெண்கள்
இறைவனை மறப்பதில்லை
அதனால்தான்
நொடிக்கு நூறுதடவை
...மை...காட் என்று
அழைக்கிறார்கள்


வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று
பிரச்சாரம் செய்த தலைவன்
வீடு திரும்பியதும்
தன் பள்ளியைறையில் விதைக்கிறான்
மனித குல வளர்ச்சிக்காக


மழைக்கும் கூட
பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத
தலைவன்
வெளுத்து வாங்குகிறான்
பள்ளியறையில்

பள்ளியில்
நூற்றுக்கு நூறு வாங்காதவன் கூட
பள்ளியறையில்
நூற்றுக்கு நூறு  வாங்கிவிடுகிறான்


பள்ளியறையில்
'மலர்கள்' இரவிலும் மலரும்

அழகிய சேலையை உடுத்தி வந்த
பெண் கேட்கிறாள்
அழகா என்று
நானும் பதில் சொல்லுகிறேன்
அழகு என்று
நான் சொன்னது சேலையை
அவள் நினைப்பதோ தன்னை


காதலால் வரும் டென்ஷனை
காமத்தால்  குறைத்துவிடலாம்

(வயது வந்தவர்களுக்காக மட்டும் )
கதாநாயகனும் கதாநாயகியும் காதலுற்று  மோகம் தலைக்கேறி உரையாடுவது போல இருந்தாலும் வரம்பு மீறி அவரவர் தங்கள் உள்ளக்கிடக்கைகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துகையில் அது கேட்போரை தர்மசங்கடமாக நெளிய வைத்தாலும் அந்த காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் பாடப்பட்ட பாடல் இது. நல்ல வேளை அந்த காலத்தில் பேஸ்புக் இல்லை இருந்திருந்தால்  பீப் சாங்கிற்கு பொங்கியது போல பொங்கி இன்னும் பிரபல படுத்தி இருப்பார்கள்.

அவள் : நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்அவன்
          மாம்பழம் வேண்டுமென்றான்அதை
          கொடுத்தாலும் வாங்கவில்லைஇந்தக்
          கன்னம் வேண்டுமென்றான்

அவன் : நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன்அவன்
          தாகம் என்று சொன்னான்நான்
          தன்னந்தனியாய் நின்றிருந்தேன்அவன்
          மோகம் என்று சொன்னாள் !

அவள் : ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன
           மறந்தா போய் என்றான்

அவன் : கொஞ்சம் பார்த்தால் என்ன எடுத்தால் என்ன
          குறைந்தா போய்விடும் என்றான்

அவள் : அவன் தாலிகட்டும் முன்னாலே தொட்டாலே போதும்
          என்றே துடிதுடித்தாள்

அவன் : அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது
          என்றே கதை படிச்சான்

அவள் : அவன் காதலுக்குப் பின்னாலே கல்யாணம் ஆகும்
          என்றே கையடிச்சான்

அவன் : அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
          அத்தானின் காதை கடிச்சா

அவள் : அவன் பூவிருக்கும் தேனெடுக்கப் பின்னாலே வந்து
          வண்டாச் சிறகடிச்சான்

அவள் : அவன் ஜோடிக்குயில் பாடுவதைச் சொல்லாமல் சொல்லி
          மெதுவா அணைச்சுக்கிட்டான் !

அவன் : அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே
          அழகாத் தெரிஞ்சுக்கிட்டாள் !



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நன்றாயிருந்தது எல்லாமே.

    எனக்கு தர்மம் எங்கே பாடலான "பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே" பாடலும் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  2. அனைத்தையும் ரசித்தோம் தமிழா...

    ReplyDelete
  3. இசை வார்த்தைகளை மயக்கிவிடும்
    அல்லது அமுக்கிவிடும்
    ஆகையால் வரி வடிவில் படிக்கத்
    தோன்றுவது போல
    பாடலில் கொஞ்ச்ம் கூடுதல் போல் தெரியாது
    சொன்னால்தான் தெரியுமென்பது போல்
    பல பாடல்கள் தமிழ் சினிமாவில் உண்டு

    அவசியமெனில் நாசூக்காக எழுத உத்தேசம்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. மதுரை தமிழரே facebook இருந்தாலும் ஒன்றும் ஆகியிருக்காது. அந்த காலத்திலே போட்டி கொடுத்தவர்; அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி பொட்டியால் விளையாடுவார். முக வடிகட்டின கஞ்சன்; பைசா கூட தரமாட்டார்; முகவிற்கு பணம் ஒன்வே. மேலும் சூத்திரன்-

    எம்ஜீயார் மீன் சாப்பிடும் கும்பல்--சின்ன மீனைப் [பிச்சை] போட்டு பெரிய மீனைப் படிப்பார். எம்ஜெயர்---உயிருடன் இருந்தவரை-- உயிருடன் இருந்தவரை-- அவரின் அதிக பட்ச கொடை--காது குத்து கல்யாணத்திற்கு நூறு இருநூறு தான். செத்த பின் வாரிசு இல்லமால் கொடுப்பது கொடை இல்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.