கலைஞரின் பாணியில் கேரளா முதல்வருக்கு கமல் எழுதிய கடிதம்
ஃபிரான்ஸ் நாட்டு அரசின் ‘செவாலியே’ விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
என்பதை நாம் செய்திகளில் படித்தோம். இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட
பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.ஆனால் தமிழக அரசு
சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.
இந்நிலையில், கேரள
முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்… ‘‘உங்களுக்குத்
தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக்
கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’
என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கமல் கலைஞரின் டெக்னீக்கை பயன்படுத்தி (அதுதான் நேரடியாக சொல்லாமல், அவர் சொல்கிறார்,
இவர் சொல்கிறர்) எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது…
‘‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!
‘வேற்று மாநில முதல்வர், தமிழக நடிகரை பாராட்டுவது
எவ்வளவு அழகு’ என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.இதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.திரு.பினராயி விஜயன், வேற்று மாநில
முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்.
நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப்
பாருங்கள் – கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்
என்று தெரியும்’’ என்று எழுதியுள்ளார்.
தற்போது கமலின் இக்கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்த கடிதம் பார்த்ததும் ஜெயலலிதா வாழ்த்து சொல்லி கமலுக்கு
விழா எடுக்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று முன்பு சொன்ன கமல்
இப்ப எண்டெ ஸ்டேட் கேரளா ..
எண்டெ சி எம்
பிரணாயி விஜயன் ..
எண்டெ நகரம் கொச்சி னு தமிழ்நாட்டைவிட்டு கேரளாவிற்கு போனாலும்
போய்விடுவார் அதை தடுத்த நிறுத்த ஜெயலலிதா ஒரு வாழ்த்தை சொல்லி ஒரு விழா எடுக்கும்படி
கேட்டு கொள்கிறோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கமல்ஹாசன் என்ன பேத்துகிறார் ச்சே.. என்ன பேசுகிறார் என்று அவருக்கே விளங்குமோ என்னவோ!
ReplyDeleteஎனக்குக் கூடத்தான் நான் தமிழ்நாட்டுக்காரன்னு சொல்ல அசிங்கமா இருக்கு. ஏன்னா, தமிழன் சினிமா கூத்தாடிகளுக்குக் கோயில் கட்டுறான். பதவி கொடுத்து அழகு பாக்குறான்.
ReplyDeleteகமலஹாசன் பேத்துகிறார் என்பதுதான் சரி. முன்பு கேரள அரசாங்கம் அவருக்கு விழா எடுத்தபோது, ஒரு கேரள நடிகரும் அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். 'செவாலியே' விருது எடுத்ததற்கு தமிழக அரசு எதற்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும்? ஏற்கனவே சமயம் கிடைத்தபோதெல்லாம் அவர் ஜெ.வுக்கு எதிராகப் பேசியுள்ளார். தமிழகத்தைவிட்டு வெளியேறுவேன் என்றும் சொல்லியுள்ளார். இவருக்கு எதற்கு பாராட்டுவிழா? எனக்குப் புரியவில்லை.
ReplyDeleteகமல் அவ்வப்போது இப்படித்தான் பினாத்துவார்....அவர் பேசுவது பல சமயங்களில் புரிவதே இல்லை...ஹும்..
ReplyDeleteகீதா
அவருடைய செவாலியேக்கு வாழ்த்து சொன்னா என்ன சொல்லலன்னா என்ன. போய் புள்ள குட்டிங்களை படிக்கவைங்கப்பா. சினிமாவ வுட்டுட்டு வெளியே வரணும். மத்த பொது பிரச்சினைகளை விலாவரியா வெளியில சொல்லணும். காசு வாங்காம ஓட்டு போடவைக்கணும். விஜயன்
ReplyDeleteகமல் பேசுவது சில சமயம் அவருக்கே புரியாது! இதையெல்லாம் கணக்கில் எடுக்க கூடாது!
ReplyDeleteசினிமா.... :(
ReplyDeleteசமயத்திற்குத் தகுந்த மாதிரி பேச்சு.... இவருக்கு கைவந்த கலை.
THIS KAMAL HAD COME OUT WITH IRRESPONSIBLE ARROGANT STATEMENTS AGAINST CENTRAL?STATE GOVTS DURING CHENNAI FLODDS TAMILNADU MIONISTER PANNEER HAD GIVEN KAMAL A STRONG DOSE THEN>>> SO THIS KAMAL .......
ReplyDelete